Gift Books
திருமணத்திற்கு வாழ்த்தாய் புத்தகம்
“ச்சீ ஏன் மானத்தை வாங்குகிறாய்..
அதற்கு சும்மாவே கை கொடுத்துவிட்டுவா”
மேடையில் வெறுமையாய் கைகுலுக்கியபோது
நக்கலடித்தன வரிசை தட்டின் நடுவே
அமர்க்களமாய் வீற்றிருந்த
கோக் பெப்ஸி பாட்டில்கள்
சமீபத்தில் என் சினேகிதி ஒருவள் திருமணத்திற்கு சென்று இருந்தேன். அவளுக்கு வாழ்த்துவதற்காக ஒரு புத்தகம் வாங்கி சென்றேன். என் புத்தகமே தரலாம் என்று யோசித்தபோது அவள் அந்த புத்தக வெளியீட்டு விழாவிற்கு வந்து என்னை வாழ்த்தி புத்தகம் பெற்றுக்கொண்டது நினைவிற்கு வந்தது. திருமண நாள் அன்று உயிர்மை பதிப்பகத்திற்கு சென்று வந்தேன். அதனால் நிறைய புத்தகங்கள் பையில் இருந்தது. மேடை ஏறும் முன்னர் நல்ல புத்தகம் ஒன்றை எடுத்து வாழ்த்து எழுத இருந்தேன், திருமணத்திற்கு வந்த மற்றொரு தோழி, “ச்சீ.. ஏன் மானத்தை எடுக்குற. புத்தகம் எல்லா எதற்கு? நான் நாளை காலை அனைவரின் சார்பாகவும் தங்க மோதிரம் தருகிறேன், பேசாமல் மேடையேறி கை குலுக்கிவிட்டு வா” என்றாள். அன்புக்கட்டளைக்கு அடிபணிந்து மேடையேறி என் அன்பினை மணமக்களுக்கு தெரிவித்தேன். அந்த சமயம் புகைப்படம் எடுக்க மேடையில் நின்ற போது கீழே வரிசை தட்டுகளில் கோக் பொப்ஸி பாட்டில்கள் இருப்பது பார்த்து நொந்து கொண்டேன். பாருங்கள் புத்தகத்தை ஏற்காத இந்த சமூகம், நமக்கு அன்னியமான இந்த குளிர்பானங்களை ஏற்கிறது. அந்த பானங்கள் நல்லதா கெட்டதா என்பது தனி விவாதம்.தேவையில்லாத குப்பைகள் நமக்குள் ஏராளமாக வந்து குவிகின்றது, ஆனால் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டிய நல்ல விஷயங்கள் நிராகரிக்கப்படுகின்றது.இந்த முறை சற்று சிந்தனை குறைவால் புத்தகம் பரிசளிக்க முடியாமல் போய்விட்டது. இனி எப்போதும் தவற மாட்டேன். பிறந்த நாளோ, நன்நாளோ இனி பரிசாக புத்தகங்களையே தருவோம். இந்த சமூகம் அதை அங்கீகரிக்கிறதோ இல்லையோ. நாம் நினைத்தால் பழைய மதிப்பீடுகளை மாற்றலாம்.
I too followed these kind gifts in the marriage especially friends marriage. But encouragement for this is zero. But in future everyone understands the problem and what is the exact meaning for giving gifts in the marriage. But for this, we should take initiative. Don’t accept gifts in the marriage, which is like money and some other gifts, accept only their wishes.
I had been to a wedding reception yesterday. As u said, I was wondering what would be the best gift…. Books are always my choice, but if you get a book for a person and if he or she doesnt read it, it is of no use…. It is often difficult to cultivate the interest in people after a particular age. So finally, i chose a bouquet of flowers.. Honestly i would have loved to gift a book. For people whose interests i know, i usually give Books….
That was a nice article Vizhiyan. Keep writing.
Hi Umanath
I was in Chennai for the week end and attended a Wedding Reception on Saturday. I followed your note and gifted the newly married couple with few very good books .
The couple called me yesterday and thanked me for a DIfferent Gift. They said they would love to preserve them as a treasure.
Thanks for your wonderful suggestion
Cheers
Sathish R