Thushtanai Kandaal
2006 மார்ச் 14
“துஷ்டனைக் கண்டால் தூர விலகு”
இனி எதுவரையில்
ஏமாறப்போகிறோம் எல்லோரும்..
போதும் இந்த வேகாத போதனைகள்
நம் வேகத்தை விலைபேசும் போதனைகள்
தன் மானத்தை கூறு போட்டு விற்றுவிட்டு
விலகி விலகி ஓடியதும்
ஒதுங்கியதும் போதும்
பதியம் போட்டுவைத்த வீரம் எங்கே..
முளைக்கவை..
தழைக்கவை மீண்டும்
முறுக்கிவிடு எண்ணங்களை கூர்மையாய்
விரட்டியடி வேண்டாதவனை
வேண்டியது போதும்
இனி. . . .
துஷ்டனைக் கண்டால் தூர விலகாதே
துஷ்டனைக் கண்டால் தூர விலக்கு
-விழியன்
Good one!!!