Silicon Adimaigal – 4
2006 April 24
.NET என்னும் வலையிலே
அந்திப் பொழுதினிலே
ஆற்றங்கரை ஓரத்திலே
சிறுக்கனாய் இருக்கையிலே..
பரணிலிருந்த குச்சியோடு
அரைஞாண் கயிற்றிலிருந்த ஊக்கை கொக்கியாக்கி
மண்ணை கிளறி மண்புழு எடுத்து
கண்னை மூடிக்கொண்டே கொக்கிலிட்டு..
அமைதியாய்..
தக்கை இழுக்கப்படுமா என காத்திருக்க…
வேகமாய் வந்த அடுத்த ஊர் சிறார்கள்
விரித்தனர் பெரிய வலையை..
சிக்கியது மீன்கள் அனைத்தும்..
மீன் பிடிக்க வந்த நான்
மீன்கள் கண்டு வாட..
வெறுப்புற்றேன் அந்த 'வலை'யை பார்த்து..
அந்த வலை இன்றும் வாட்டுகிறது
".NET" என்னும் பெயரிலே..
சிக்கித் தவிக்குது வாழ்க்கை..
-விழியன்