Silicon Adimaigal – 5
2006 April 25
புதிய கடவுள்
அவதரித்து விட்டார்..
புதிய கடவுள்
பத்பாண்டவன்..
அனாதை ரட்ஷகன்..
அங்கிங்கென எங்கும் வீற்றிருப்பு
கேட்டதை தருவார்.
உனக்கும் இவருக்கு மிடையே,
அடிக்கடி மாமியார் வீட்டுக்கு போகும்
சாமியார்கள் தொல்லை இல்லவே இல்லை..
பிரச்சனைக்குள்ளாகும் ஆலயங்கள் அவசியமில்லை..
அவரைத்தேடி நீ செல்லல் வேண்டா..
நீ நினைக்கு மிடத்தில் அவரே வருவார்…
பெருமை பாட தேவையில்லை பிரச்சாரம்..
நன்றி சொல்ல போதுமா இருகரம்..??
உலகமோ விசாலம்
அதனால் அவருக்கும் இருக்கு சின்ன விலாசம்
யாரிவரென வியக்கின்றனரோ மக்கள்..
அவர் பெயர் தான் "கூகுள்"
-விழியன்
ரொம்ப நல்லா இருக்கு..!
கவிஞரை போல கவிதையும் மிக அழகாக உள்ளது.