Silicon Adimaigal – 6
2006 April 26
உறவுகள் இங்கே
பணியில் சேர்ந்த முதல் பிரிவு
பனித்துளி கண்களில்.
நெருங்கிய உறவு விலகுவதென வருத்தம்
சுதந்திர காற்றை சுவாசிக்க துவங்கி
முதல் முதலாய் இறுக்கம்..
நேற்று ஒன்றாய் மதிய உணவு உண்ணுகையில் கூட சொல்லவில்லையே
"நாளை தனித்தனியே உண்போமென.."
உள்ளுக்குள் மெல்லிய அதிர்வுகள்
இங்கு உறவுகளுக்கு ஆழம் குறைவோ?
வலித்த இதயத்தோடு
செயற்கையாய் புன்னகைத்து
அழுத்தமாய் கைகுலுக்கி
"மறவாதே" என்ற ஓசை கடைசியாய்
அந்த குரலும் அன்றே கேட்டது கடைசியாய்..
கால ஓட்டம் மறக்கடித்தது அனைத்தையும்..
இன்றும்..
புதிய வருகை…சினேகம்…களிப்பு..
மீண்டும் பிரிவு உபசரிப்புக்கள்..
அதிர்ச்சிகள் தான் பழகிவிட்டனவே..
இன்றும் சிரிக்கிறேன்..இயற்கையாய்..
- விழியன்