Silicon Adimaigal – 8

2006 April 28
by vizhiyan

வன்பொருளும் மென்பொருளும்

கல்லூரி நண்பர்கள் நால்வர் சந்திப்பு
மனதிற்கு என்றும் அவை இனிப்பு..
இரண்டு மென்பொருள் மேதாவிகள்
மீதி இருவர் வன்பொருள் வல்லுனர்கள்..
எங்கோ துவங்கி சண்டையில் மூண்டது..
எது வலியது வன்பொருளா ? மென்பொருளா?
வீண் சண்டை வேண்டாமென அடக்கி வாசித்தது மென்பொருள்..
அதனால்…
மணிக்கணக்கில் வந்தது கதை
ரும லக்கங்களின் (0,1) பெருமை
இவை இல்லாவிடில் பதிவகங்கள் பதறிப் போகும்..
சிறுத்து வரும் சில்லுகள் சிதறிப் போகும்..
கோப்புகள் கோணிப் போகும்..
கணிப்பொறியே காணாமல் போகும்..
ஆவேசமான பகுத்தாய்வு…
எதிரே இருந்தவன் அமைதியாய்
"சரிடா என்ன செய்ய சொல்கிறாய்
அம்மாவிடம் சொல்கிறேன்..
கண்ணகி சிலை இருந்த இடத்தில்
பூஜ்ஜியதிற்கும் ஒன்றுக்கும் இரண்டு சிலை
வைக்கச் சொல்லி .. .."

போடாங்ங்ங்ங்ங்ங்ங்ங்… ..

- விழியன்  

ரும – Binary

பதிவகங்கள் – Registers

சில்லுகள் – Chips

கோப்புகள் – Files

இதுவரை மறுமொழிகள் இல்லை

மறுமொழி இடுக

Note: You can use basic XHTML in your comments. Your email address will never be published.

Subscribe to this comment feed via RSS