Kavithai – 3

2006 மே 24
by vizhiyan

அந்திம வார்த்தைகள்..

நாள் குறித்தாகிவிட்டது..

கடைசியாய்..

வாழ்ந்த வாழ்வின் நினைவலைகள்.

வளமான காலங்கள்..

வருத்திய சோகங்கள்..

வந்து போன வசந்தங்கள்…

எல்லாம் முடிந்தது..

இதோ

ஆயுதங்கள் தயார்.

ஆட்களும் தயார்

உயிர் பிரியும் வலியுடன்

சிரித்தபடி மறித்தது

வெட்டுபவன் வார்த்தைகள் கேட்டு

"ச்சே என்ன வெயில் என்ன வெயில்"

விழியன்

இதுவரை மறுமொழிகள் இல்லை

மறுமொழி இடுக

Note: You can use basic XHTML in your comments. Your email address will never be published.

Subscribe to this comment feed via RSS