தமிழ் ஐய்யா
தமிழ் ஐய்யா
11ஆம் வகுப்பை வேறு ஒரு பள்ளியில் படித்தேன். அங்கு ஒரு இளைஞர் தான் ஆசிரியர். பெயர் ஏழுமலை.(தற்போது ஆரணி அருகே இருக்கும் S.V.நகரத்தில் அரசு உயர்நிலைப்பள்ளியில் வேலை செய்வதாக கேள்விபட்டேன்). 11ஆம் வகுப்பின் முதல் நாள். வழமையாக பதினோறாம் வகுப்பில் எல்லோரும் வேறு வேறு பள்ளியில் இருந்து வந்திருப்பார்கள்.யாருடைய அறிமுகமும் இருக்காது. தமிழ் ஆசிரியர் ஏழுமலை அவர்கள் வந்தார்கள். முதல் நாள் பாரதியார் பாடலை எடுத்தார் "எந்தையும் தாயும்..". எல்லோரையும் ஒருவன் பின் ஒருவராக உரக்க வாசிக்க சொன்னார். என் முறை வந்த போது ராகமிட்டு, சில இடத்தில் பாட்டாகவும், கவிதை பாணியிலும் படித்தேன். கப் சிப் என வகுப்பே என்னை பார்த்தது. நான் ஏதோ தப்பு செய்துவிட்டது போல எனக்குள் குறுகுறுப்பு. அவர் என்னருகே வந்து. தோளில் தட்டி "நல்லது உமாநாத். நன்றாக வருவாய்" என்றார். அந்த ஊக்கம் இன்று யாரோ என் தோளை தட்டி விடுவது போல அட ிக்கடி உணர்வேன்.
அவரிடம் பிடித்த விஷயம் எப்போதும் தூய தமிழில் பேசுவார்.நமக்கும் அவரிடம் பேசும் போது அதே போல பேச தூண்டும். ஒரு வருடத்திலேயே வேறு அரசு பள்ளிக்கு சென்றுவிட்டார்.நான் படித்தது தனியார் பள்ளி. அடுத்து ஆசிரியராக யார் வந்தது என்று மறந்துவிட்டது (12ஆம் வகுப்பில்). ஒரு நாள் பள்ளி வாசலில் அவரை சந்தித்தேன். தனக்கு திருமணம், நிச்சயம் வகுப்பில் அனைவரையும் அழைத்து வா என்று திருமண அழைப்பிதழ் தந்தார் (பள்ளியின் மாணவர் தலைவன் என்ற காரணத்தினால்).அவர் திருமணத்தில் கடைசியாக பார்த்த நினைவு.
உங்கள் பதிவுகளை நினைவுகளை தொடருங்கள்…
–
விழியன்
http://vizhiyan.wordpress.com