தமிழ் மிஸ்.
தமிழ் மிஸ்.
நேற்று இரவு முழுதும் யோசித்து பார்த்தும் அந்த வாத்தியார் பெயர் நினைவில் இல்லை. நண்பர்கள் இரண்டு மூன்று பேரிடம் கேட்டு பார்த்தேன் அவர்களுக்கும் தெரியவில்லை.நாங்கள் அவர்களை அழைத்தது 'தமிழ் மிஸ்' என்று தான். அவர்களுக்கு அப்போது ஐம்பது முதல் ஐம்பத்தைந்து வயது வரை இருக்கும். பள்ளியின் தலைமை ஆசிரியருக்கே அவர் மீது மரியாதை இருந்தது. வயதில் முத்தவர். பள்ளி ஆரம்பித்த முதலாகவே அவர் பணி செய்கின்றார் என்று சொல்லக்கேள்வி. நான் பத்தாம் வகுப்பு வரை CBSE பாடதிட்டத்தின் கீழ் படித்ததால், தமிழுக்கு அந்த அளவு முக்கியம் தரவில்லை. மற்ற பாடதிட்டதின் புத்தகம் தான் படிப்போம், ஆனால் குறைந்த முக்கியதுவம் தான் தமிழுக்கு. இருப்பினும் நான் ஏதோ தட்டு தடுமாறி எழுதுவதற்கு அவரும் ஒரு முக்கிய காரணம்.
மற்ற பள்ளிகள் அளவில் நடக்கும் பேச்சு போட்டிகளில் என்னை கேட்காமலே என் பெயரை கொடுத்து விடுவார். அத்தனை நம்பிக்கை என் மீது. வழக்கமாக ஆசான் என்றால் அம்மாவின் பிம்பம் என்பார்கள், இவர் எனக்கு பாட்டி போல(வயது காரணமாக). எனக்கும் என் நண்பன் கமலேஷுக்கும் சண்டை ஏதாவது வந்தால் இவர்களிடம் சென்று அழுதுவிடுவேன். அவர் சமாதானம் செய்து தீர்த்து வைப்பார். பத்தாம் வகுப்பு முடிந்து நானும் வேறு பள்ளிக்கு சென்றுவிட்டேன், அவரும் ஓய்வு பெற்றுக்கொண்டார். தற்போது என்ன செய்கின்றார் என தெரியவில்லை. என்றாவது அவரை சந்தித்து என் எழுத்துக்களை காட்டவேண்டும். நிச்சயம் ஆனந்த படுவார்.
ANTHA TAMIL THAIKKU EN NANDRI. IPPADI PATTA KAVINAN URUVAGUVADHARKU, KARANAMADHAZAZ….