Kavithai – 12 (Bus Stand Paithiyam)
2006 ஆகஸ்ட் 29
பஸ் ஸ்டாண்ட் பைத்தியம்
யாரும் பயணிக்கா
திசைதனில் கையசைத்து
தலைப்பானை தவறுதலாய் அணிந்து
உடலெங்கும் இரும்புத் துகள்களும்
சாவிகளும், வளையங்களும்…
நான்கைந்து நடத்துனர் தோல் பைகள்
தோள்களில் தலைகீழாய் மாட்டிக்கொண்டும்
கம்பீரமாய் நிற்கும் இவனுக்கு..
ஊரே “பஸ் ஸ்டாண்ட் பைத்தியம்”
என்றழைப்பினும்
கிடைத்துவிடுகின்றது
மூன்று வேளையும் உணவு..
–
விழியன்
neenga than vikatanil last week kadhai eludhi vilaiyana?