Save Power at Office
வீட்டுக்கு கிளம்பியாச்சா.??..ஒரு நிமிடம்….
நம்மில் பலரும் அலுவலகம் விட்டு வீடு கிளம்பும் சமயம் கடைசியாக கணினியில் செய்யும் வேலை (Ctrl + Alt + Del) பொத்தன்களை அழுத்திவிட்டு ஆனந்தமாகவோ களைப்பாகவோ வீடு செல்வது தான்.அப்படி என்றால் உங்கள் கணினி எப்போதும் இயங்கிகொண்டு தான் இருக்கின்றது.
ஒரு சாதாரண கணினி உறங்குநிலையில் (Sleeping mode)ல் பயன்படுத்தும் மின்சக்தி சுமார் 35watts. இதன் அடிப்படையில் ஒரு சிறிய கணக்கு போடுவோம்.
ஒரு வாரத்தின் மொத்தம் 24 * 7 = 168 மணி
இதில் 68 மணி நேரம் வேலை செய்வதாக வைத்துக்கொள்வோம்.
அப்படியானால் 100 மணி நேரம் கணினி உறங்குநிலையில் இருக்கின்றது.
ஒரு மாதத்திற்கு 100 * 4 = 400 மணி நேரம்.
மத்திய தர கணினி நிறுவனத்தில் (250 கணினிகள் இருக்கும் பட்சத்தில்) 250 * 400 = 1 லட்சம் மணி நேரங்கள் உறங்குநிலையில் இருக்கின்றது.
ஆக, ஒரு மாதத்திற்கு ஒரு நிறுவனத்தில் வீணடிக்கப்படும் மின்சக்தி 100000 * 35 = 3500000 வாட் = 3500 Kwh ( 1 kwh = 1 unit). கட்டணம் ஒரு யூனிட்டிற்கு 6 ரூபாய் என்று குறைவாக வைத்துக்கொண்டாலும் 21000 ரூபாய் வீண்.
இதில் பணம் வீணாவதைவிட மின்சக்தி வீணாவது தான் வேதனையான விடயம்.மின்பெறியாளனான எனக்கு மின்சக்தி உற்பத்தியில் இருக்கும் கடினங்கள் தெரியும். நெய்வேலி சுரங்கங்களில் எத்தனை இன்னலுற்று தயாரிக்க படுகின்றது என உலகம் அறியும். இன்னும் பல கிராமங்களை மின்சாரம் சென்றடையவில்லை. உற்பத்தியாகும் சக்தி நகரங்களுக்கே போதவில்லை.அடிக்கடி மின் தட்டுப்பாடு வேறு ஏற்படுகின்றது. இதே நிலை நீடித்தால் ஒரு யூனிட்டின் விலை வேகமாக ஏறும். ஒரு நாள், எவ்வளவு பணம் தந்தாலும் மின்சாரம் கிட்டாத நிலையும் ஏற்படலாம்.
தினமும் வீட்டிற்கு கிளம்பும் முன்னர் ஒரு நிமிடம் காத்திருந்து கணினியை நிறுத்துவிட்டு செல்லுங்கள். நம்மால் நாட்டிற்கும் நிறுவனத்திற்கும் முடிந்த உதவி.
பயனுள்ள சுட்டி
http://windows.uwaterloo.ca /Hardware/PC_Power_Consumption.asp
“,1] ); D([“mb”,”
\n
–
விழியன்
http://vizhiyan.wordpress.com
(சரி என்று மனதிற்குபட்டால் நண்பர்களுக்கும் தெரிவியுங்கள்)
–
விழியன்
(சரி என்று மனதிற்குபட்டால் நண்பர்களுக்கும் தெரிவியுங்கள்)
There is a option called “Hibernation” which takes care of this !