Perayutha Poojai
2006 செப்டம்பர் 29
பேராயுத பூஜை
ஊர் விழாக்கோலத்தில்..
பூவின் மணமும்
சந்தன வாசமும் காற்றினில்..
நானும் எடுக்கிறேன் ஒரு பூஜை
ஓயாமல் உழைக்கும் கைகளுக்கு
உலகை காட்டும் விழிகளுக்கு
நடமாட, ஆட வைக்கும் கால்களுக்கு
சுவாசிக்க உதவும் நாசி துவாரங்களுக்கு
எதையும் நேசிக்க வைக்கும் மனதிற்கு
இப்படி என்னோடு இருந்து
என்னை செயல்பட வைக்கும் அனைத்திற்கும்…
இது ஆயுதபூஜையல்ல பேராயித பூஜை
இவைகள் ஆயுதமல்ல பேராயுதம்..
–
விழியன்
http://vizhiyan.wordpress.com
Good