Kana Kaalangal – 1
2006 அக்டோபர் 27
கனாக் காலங்கள்
ஆறுதல் அழுத்தங்கள்
கல்லூரி முதல் நாள் முதலே Campus Interview
வேலையின் அருமை அறியாத நாட்கள்
விளையாட்டாய் Written Test
கும்மாளமாய் GD
நாட்கள் நகர நகர
நண்பர்கள் நியமனம் பெற
வேதனைகள் குடிபுகுந்தன நிரந்தரமாய்!!
காதலும் சலித்தது
உணவு உள்ளே செல்ல மறுப்பு
கனவுகள் வரவில்லை
கண்கள் உறங்கினால் தானே
கனவுகளுக்கு இடம்..
மீண்டும் ஒரு தேர்வு..
கவனமாய் கலந்துரையாடல்..
அடக்கமாய் நேர்காணல்
நகங்கள் கரைந்தது
பற்கள் கடித்து
அத்துனை ஆதங்கம்
தேர்ச்சியின் விவரம் அறிவிக்க
என் பெயர் காணாமல் பரிதவிக்க..
பொய்யாய் ஒரு புன்னகை
யாரும் அறியாமல் கூட்டத்தில் நழுவி
மூலையில் முடக்கம்
ஆறுதல் தந்தன
தேடி வந்து
தோளை அழுத்திய
தோழனின் கைகள்
-விழியன்
Thozhamaiyai dhan Kadaisi varaikum nizhaikum…
Indha varigal yennai mattumea piradhi balipadhaga yennai ninivu padudhugiradhu…
by ash
அப்படியா அசோக். எனக்கும் தான்
Really superb!!!!!!!!
எதை எழுத எதை விட… 4 வருட ரத்தினச்சுருக்கம்… அனுபவிக்கும் போதுதான் தெரியும்… இங்கு அனுபவம் எழுத்துகளில்… மிக நன்று…
hai Vizhiyan. It realy true. Campus interview give many grievience to me.
hai vizhiyan,
nice kavithai……. i like it.