Pin Number Reversal – Truth?

2006 நவம்பர் 24
by vizhiyan

ஒரே நாளில் ஐந்து ஆறு நண்பர்கள் இடத்தில் இருந்து இந்த மடல் வந்துள்ளது. மடலில் கூறப்பட்டது இது தான். “உங்களை யாரேனும் கத்தி முனையில் உங்கள் ATM  அட்டையில் இருந்து பணம் எடுத்து தரச்சொன்னால், உங்கள் PIN எண்களை வலமிருந்து இடமாக( எ.கா 4398 என்பதை 8934) என்று மாற்றி அடித்தால் ATM பணம் தரும் அதே சமயம் காவல் துறைக்கும் தெரிவித்து விடும்”  என்று இருந்தது. இப்படி ஏராளமான தவறான செய்திகள், வதந்திகள் இணையத்தில் ஏராளம்.

இது பற்றிய சில கருத்துக்கள்……

1. 1994 ஆம் ஆண்டு ஜோசப் ஜிங்கர் SafetyPinBack என்ற முறையினை கூறினார்.ஆனால் எந்த வங்கியும் இந்த முறையினை ஏற்றுக்கொள்ளவில்லை. இது நடைமுறையில் நிறைய சிக்கல்கலை உருவாக்கும் என்பதே வங்கியின் வாதம்.

2. இந்தியாவில் எந்த வங்கியிலும் இந்த வசதி இல்லை.

3. ஒரு வேலை என்னுடைய PIN எண் 7777 என்று இருந்தால்.

4. காவல் துறைக்கு செய்தி சென்று அவர்கள் வருவதற்குள் விடிந்துவிடுமே :-)

5. கத்தியை கழுத்து முனையில் வைத்திருந்தால் புத்தியே வேலை செய்யாது, அப்படியே கொஞ்சம் தைரியமா இருந்தாலும் PIN எண் நினைவிற்கு வரும். அதை திருப்பி அடிப்பதற்கு எவ்வளவு சாத்தியக்கூறு இருக்கின்றது என தெரியாது.

எப்போதெல்லாம் அவசியம் ATM அட்டை,கடனட்டை தேவைப்படுமோ அப்போது மட்டும் சுமந்து செல்லுங்கள். மற்ற நேரங்களில் பாதுகாப்பான இடத்தில் வைத்துக்கொள்வது நலம். (பாதுகாப்பு என்று நினைத்து வீட்டம்மாகிட்ட கொடுத்துடாதீங்க..அதுக்கு..!!!..கோவிச்சிக்காதீங்க அம்மணிங்களா…தமாசு)…

கூடுமான வரை இந்த மாதிரியான (மற்றவர்களுக்கு அனுப்புங்கள் என்ற மடல்களை) கடவுளான (கூகுள் தான்) ஒரு முறை கேட்டுவிட்டு அனுப்புங்க மக்கா..உங்க நண்பர்கள் நேரமாவது மிச்சமாகும்.

வந்த மடல் இது தானுங்கோ….

——————————————————————————————

PIN NUMBER REVERSAL (GOOD TO KNOW)

If you should ever be forced by a robber to withdraw money from an ATM

machine, you can notify the police by entering your Pin # in reverse.

For example if your pin number is 1234 then you would put in 4321. The

ATM recognizes that your pin number is backwards from the ATM card you placed in the

machine.

The machine will still give you the money you requested, but unknown to

The robber, the police will be immediately dispatched to help you.

This information was recently broadcasted on TV and it states that it is

seldom used because people don’t know it exists.

Please pass this along to everyone possible.

——————————————————————————————

உதவிய சுட்டி

http://www.snopes.com/business/bank/pinalert.asp

விழியன்

5 பதில்கள் leave one →
  1. 2006 நவம்பர் 24

    I wish it were true but :(

    http://www.truthorfiction.com/rumors/a/atm-911.htm

    regards
    Sundar muthusamy

வரு தடங்களும் வரு பிங்குகளும்

  1. giada de laurentis
  2. farrow mia
  3. teen titans anime porn
  4. oral care and pneumonia

மறுமொழி இடுக

Note: You can use basic XHTML in your comments. Your email address will never be published.

Subscribe to this comment feed via RSS