Kavithai – 26

2006 December 13
by vizhiyan

 எவற்றையும் சுவாசிக்காமல்

உற்சாகத்தை வீதியெங்கும் தூவியபடி
நடந்து செல்லும் முதிர்ந்த இளைஞர்கள்

கீச்சு கீச்சு குரலில் இசையை
பரப்பி பறக்கும் பறவைகள்

அடுத்த வீட்டு அம்மாவின்

நடனமிடும் வாசற் கோலங்கள்..

புன்சிரிப்போடு மலரும் மலர்கள்

வாழ்வின் மற்றொரு பரிமாணத்திற்கு இழுக்கும்
புத்தகங்களின் புரட்டாத பக்கங்கள்

உலக அழகை காண வேகமாய்
உள்ளிருந்து எழும் சூரியன்

இப்படி எவற்றையும் சுவாசிக்காமல்
இழுத்து போர்த்தி உறங்குகின்றேன்
அதிகாலையில் நான்.


விழியன்

10 பதில்கள் leave one →
  1. 2006 December 13

    நல்லா இருக்கு விழி. அருமையா சொல்லியிருக்கீங்க‌ !(ஆனா என்ன சொன்னாலும் நாங்க கேட்கமாட்டோம். மொரட்டுதனமா தூங்குவோம். ஹி ஹி ஹி)

  2. 2006 December 13

    Hi Umanatah,
    I am very happy to see you with your Re-Entry in the Poetric world.
    All the things in this poem are true in the villages only. Here (Bangalore) it is possible to enjoy all these things?… If we wake up early then also it is waste na, thats why we are sleeping. If we go to our native, then we will enjoy all these things each and every day. But what can we do.. Now we are the guest in our Native.

  3. 2006 December 13

    அன்பு பிரகாஷ்,

    நானும் பெங்களூரில் தான் இருக்கேன். இன்று காலை கண்ட காட்சியினையே கவிதையாக வடிக்க முயற்சித்தேன். மனமிருந்தால் மார்க்கம் உண்டு :-)

  4. 2006 December 13

    நல்ல கவிதை தலை…

    ஆனாலும் அதிகாலை உறக்கம் என்பது நேற்றைய இரவின் தூக்கத்தையும் தூக்கத்திற்குச் செல்லும் நேரத்தையும் பொறுத்ததே… எனவே.. தூங்கும் நபர்கள் தூங்கட்டும் ஆனால் எல்லா நாட்களிலும் அல்ல..

    உமாவின் கவிதையைப் படித்தாவது சீக்கிரம் எந்திரிச்சுப் பழகுங்கப்பா…

    யாரும் உடனடியா எங்கிட்ட வந்து “யோவ் நாட்டாமை.. தீர்ப்பை மாத்து”.. ன்னு பழைய டயலாக்கை சொல்லாதீங்க.. எனக்குக் கெட்ட கோபம் வரும்.. என்ன இது சின்னப்புள்ளத்தனமா ராஸ்கல்………

  5. 2006 December 13

    நூற்றுக்கு நூறு உண்மை … விழியன் …

    காலைப் பொழுதை தூங்ங்கியே வீணடிக்கிறோம்…

    சரி மாலையிலாவது சரியான நேரத்திற்கு வீட்டிற்கு வந்து இயற்கையை ரசிக்கலாம் … அதையும் அலுவலகத்திலேயே வீணடிக்கிறோம்… என்னைப் பொருத்தவரை .. நாம் சுவாசிப்பது ஆக்சிஜன் இல்லை .. வெரும் கார்பண்டை ஆக்சைடு தான் ;)
    நானும் இதே போல்தான் … வீட்டிற்கு 2 நிமிட தூரத்தில் கடற்கரை இருந்தும் வாரம் ஒரு முறை கோட போவதில்லை ;(

  6. 2006 December 14

    அன்பு விழியா

    நீண்ட நாட்களுக்கு பிறகு உன்னுடைய வித்தியாசமான கவிதை முயற்சி. நீ அடுத்த கட்டத்திற்கு போய்விட்டாய் என்பதை உனது கவிதைவரிகள் சொல்லாமல் சொல்கின்றன. எழுத்துப்பிழைகள் மிகவும் குறைந்துவிட்டது மகிழ்ச்சியளிக்க கூடிய ஒரு விசயம். கவிதையிலும் வித்தியாசம் தெரிகிறது. அன்றாட வாழ்க்கையில் நடக்கும் பல சம்பவங்களை மாறுப்பட்ட கோணத்திலிருந்து பார்க்கையில் உன்னை போன்ற வளரும் படைப்பாளிக்கு கண்டிப்பாக வித்தியாசமான ஒரு படைப்பை உருவாக்க தோன்றும். அதை நீ நிச்சயம் மிக நல்லமுறையில் செய்வாய் என்ற நம்பிக்கை இருக்கிறது.

    வாழ்த்துக்கள்.

  7. 2007 ஜனவரி 7

    அதிகாலை உறக்கம் சுகமானது…

    அதிகாலை உலகம் அழகானது…

    சுகத்தை சுகிப்பதா, அழகை ரசிப்பதா? :) )

  8. 2007 December 20

    Hai Vizhiyan Sar………………..

  9. 2009 பெப்ரவரி 24

    Exceland!It is very fine

மறுமொழி இடுக

Note: You can use basic XHTML in your comments. Your email address will never be published.

Subscribe to this comment feed via RSS