Kavithai – 27
2006 December 19
சுவரின் நடுவிலும் ஓரங்களிலும்
அவளின் கிறுக்கல்கள்
உயர உயர
வளர்ந்து கொண்டே போனது
வருடாவருடம்..
தாத்தாவின் இருக்கை
கடலில் யானை
தெருவில் கப்பல்
மாமாவின் வண்டி
அவளுக்கு மட்டுமே புரிந்த சில..
எதுவும் சொல்லாமல் நிறுத்திவிட்டாள்
ஒர் நாள்
கரித்துண்டும் எழுதுகோலும்
கண்ணீர் வடித்தன
–
விழியன்
http://vizhiyan.wordpress.com
I think you will be out of Engineering…. Very soon!
எழுத்துக்களுக்கு உயிர் வந்து வார்த்தைகளா மாறினதுன்னு சொல்வாங்களே அது போல இருக்கிறது இன்றய கவிதை…
தமிழின் விழியனுக்கு வாழ்த்துக்கள்…
மாணிக்கம்…