அடடா..நம்ம புத்தகமும்..

2007 ஜனவரி 16
by vizhiyan

அடடா…நம்ம புத்தகமும்…..

29வது புத்தக கண்காட்சியில்(சென்ற வருடம் ஜனவரி 2006) எனது புத்தகமும் (தோழியே உன்னை தேடுகிறேன்) விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது என அப்பா கூறினார். மிகுந்த ஆவலுடன் சென்று பார்த்த போது எனக்கு ஏமாற்றம் மட்டுமே மிஞ்சியது. புத்தகங்கள் எங்கோ தவறிவிட்டது. அடியில மாட்டி இருக்கும் என்றார் நாகராஜ். பாரதி புத்தகாலயத்தின் பதிப்பகர். சின்ன ஏமாற்றம். அப்படியே மற்ற கடைகளுக்கு சென்று மற்ற புத்தகங்களை வாங்கி வந்தோம்.

30வது புத்தக கண்காட்சிக்கு நான், எனது இரண்டு தங்கை, ஹலோ தமிழா நால்வரும் சென்றோம். வலம் வந்து கொண்டிருந்த போது என் புத்தகம் இருந்தது. நான் நேசிக்கும் சே, பிடல் புத்தகங்களுக்கு கீழேயும், சா.தமிழ்செல்வன், பி.ராமசந்திரன் புத்தகங்களுடன் இருந்தது ஒரு இன்ப அதிர்ச்சி. மனதுக்குள் சின்ன சந்தோஷம். புத்தகங்களை படிக்க துவங்கிய காலத்தில் நானும் எழுதுவேன் என நினைத்து கூட பார்த்ததில்லை.

அன்று இரவு ஹலோ தமிழன் சொன்ன வார்த்தை இன்னும் என் காதில் ஒலிக்கின்றது ‘உமா இந்த புத்தகம் ஒரு Preface மட்டும் தான். உனக்கும் எழுத வரும் என்பதை உனக்கும் உலகுக்கும் தெரிவித்தது. இதுவே உன்னுடைய Destination அல்ல. அடுத்த புத்தகம் உச்சத்தை தொடவேண்டும்’ என்றார்.உற்சாகம் உச்சி முதல் பாதம் வரை..

இதோ அந்த புகைப்படம்…


“என் மகிழ்ச்சியினை என்னோடு மட்டும் வைத்துக்கொள்ளவும் மாட்டேன். என் நண்பர்கள் சோகத்தினை அவர்களோடு மட்டுமே விட்டுசெல்லவும் மாட்டேன்” (தோனுச்சி எழுத்திட்டேன்..யாரும் வையாதீங்க மக்கா)

(30வது புத்தக கண்காட்சி அனுபவங்கள் விரைவில்…)

-விழியன்


19 பதில்கள் leave one →
  1. 2007 ஜனவரி 16

    வாழ்த்துக்கள்.

    என்னை மிகவும் நேசித்த என் தோழிகள் நினைவில்…. உங்கள் புத்தகம் மிகச் சிறந்த காணிக்கை

  2. 2007 ஜனவரி 16

    vaazthukkal nanbaa! this is only a start! innum pinnunga!

  3. 2007 ஜனவரி 16

    //நன்றி நண்பர்களே…

    சங்கர் அடுத்த புத்தகம் எப்போது? அல்லது வந்துவிட்டதா?

  4. 2007 ஜனவரி 16

    வாழ்த்துக்கள் பா…

  5. 2007 ஜனவரி 16

    வாழ்த்துக்கள் உமா..

  6. 2007 ஜனவரி 16

    நன்றி சித்தார்த்..விரைசில் சந்திக்கலாம் வா..

  7. 2007 ஜனவரி 16

    நன்றி கொளதம். அடுத்த முறை நிச்சயம் சந்திக்கலாம்..

  8. 2007 ஜனவரி 16

    Congrats for finding your book…. and long way to go… all the very best for U(ma).

  9. 2007 ஜனவரி 16

    எனக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. பாராட்டுகள். வாழ்த்துகள்.

    தமிழர் திருநாள் வாழ்த்துகள்

  10. 2007 ஜனவரி 16

    Really Great.. Keep it up Vizhiyan!!

  11. 2007 ஜனவரி 16

    keep it up..
    all the best

  12. 2007 ஜனவரி 16

    நன்றி ரமேஷ், நவீன், இளங்குமரன், சரவணன்..

  13. 2007 ஜனவரி 16

    Hi
    nice to see that
    keep it up
    and all the becst for your brightful future

  14. 2007 ஜனவரி 16

    வாழ்த்துகள்

  15. 2007 ஜனவரி 16

    வாழ்த்துகள் விழியன் :)

  16. 2007 ஜனவரி 17

    என்னருமை நண்பருக்கு வாழ்த்துக்கள்!

  17. 2007 ஜனவரி 17

    மனமார்ந்த வாழ்த்துகள் ஐயா… இன்னும் பல உயரங்களை அனாயசமாகக் கடக்க வாழ்த்துகிறேன்.

  18. 2007 ஜனவரி 17

    வாழ்த்துக்கள் பலப்பல…

  19. 2007 ஜனவரி 18

    Vazthukkal

மறுமொழி இடுக

Note: You can use basic XHTML in your comments. Your email address will never be published.

Subscribe to this comment feed via RSS