அவர்களின் உலகம் – கவிதை

2007 ஜனவரி 17
by vizhiyan

அவர்களின் உலகம்

மாமா வாங்கி வந்த

வெளிநாட்டு பொம்மை காரினை

அட்டை பிரித்து

மகனின் கண்ணில் படாமல்

பத்திரப்படுத்தினார் அப்பா..

வெறும் அட்டையினை கொண்டே

காராகவும்

பேருந்தாகவும்

அதுவாகவும்

இதுவாகவும் என்றெண்ணி

சலிக்காமல் விளையாடியது குழந்தை


விழியன்

4 பதில்கள் leave one →
  1. 2007 ஜனவரி 18

    ம்ஹ்ம்… ஏதோ விடுபட்டது போல் இருக்கு தலை..

    சொல்ல வந்த கருத்து நல்லாயிருக்கு.. ஆனால் முழுமையடையவில்லையோ என்று தோன்றுகிறதெனக்கு!

  2. 2007 ஜனவரி 19

    நன்றி சென்ஷி..

    நன்றி ராகவன்..

  3. 2007 ஜனவரி 22

    அருமையா சொல்லிருக்கீங்க விழியன்.

    பத்திரப்படுத்தினார் ..

    அப்பா/அம்மா/தாத்தா – என்று பலரை உண்மையில் பார்த்திருக்கிறேன், உங்களைப் போலவே:)

மறுமொழி இடுக

Note: You can use basic XHTML in your comments. Your email address will never be published.

Subscribe to this comment feed via RSS