குடி – அறிகுறி – காரணம் – காரியம்

2007 பெப்ரவரி 16
by vizhiyan

குடி – அறிகுறி – காரணம் – காரியம்

(குடித்த பின்னர்…)

அறிகுறி : நீங்கள் பார்க்கும் சுவற்றில் வெளிச்சம் பிரகாசமாக இருக்கின்றது

காரணம் : நீங்கள் பார்ப்பது தரையை

காரியம் : முயற்சித்து எழுந்து நிற்கவும்

அறிகுறி : தரை மங்கலாக தெரிகின்றது

காரணம் : நீங்கள் பார்ப்பது கையில் பிடித்திருக்கும் காலி கோப்பை மூலம்

காரியம் : சீக்கிரம் கோப்பையை நிரப்பவும், எதுவும் தெரியாது

அறிகுறி : தரை நகர்கின்றது

காரணம் : யாரோ சிலர் உங்களை இழுத்து செல்கின்றனர்

காரியம் : எதற்கு என்றாவது கேளுங்க

அறிகுறி : உங்க அப்பா , தம்பி, அண்ணன் , எல்லோரும் புதிதாக பார்கின்றார்கள்

காரணம் : நீங்க இருப்பது வேறு வீட்டில்

காரியம் : உங்க வீட்டு முகவரியை அவர்களிடம் தரவும்.

அறிகுறி : கால்களில் ஜில் என்ற உணர்வு

காரணம் : கோப்பையை தலைகிழாக பிடித்துள்ளீர்கள்

காரியம் : கோப்பையை திருப்புகிறேன் என்று நீங்க தலைகீழாக நிற்கவேண்டாம்.

அறிகுறி : உங்க வீட்டு வாசலில் யாரோ தோசை சுட்டு இருக்காங்க

காரணம் : உங்க வாயில் இருந்து வந்தது தான்

காரியம் : யாரேனும் பார்க்கும் முன் கழுவி விடவும்

அறிகுறி : அறை ஆடுகின்றது. சுற்றிலும் வெள்ளாடையில் மனிதர்கள். விட்டுவிட்டு ரீங்கார சத்தம்

காரணம் : நீங்கள் இருப்பது அவசர ஊர்தி(Ambulance)

காரியம் : அமைதியாக இருக்கவும். அவர்கள் கைதேர்ந்தவர்கள்

(ஆங்கிலத்தில் இருந்து மொழிமாற்றம் செய்யப்பட்டது ஆறாவது தவிர)

விழியன்

11 பதில்கள் leave one →
  1. 2007 பெப்ரவரி 16

    3 முறை படிச்சேன்… எனக்கு சரியா புரியல… ஆனா ஏதோ குடிக்கறதுனால ஏற்படற நிகழ்வுகள சொல்றீங்கனு மட்டும் தெரியுது…

  2. 2007 பெப்ரவரி 16

    Hi Macha,
    Its looks everything from your experience!!!

  3. 2007 பெப்ரவரி 16

    Good Work..

  4. 2007 பெப்ரவரி 16

    Nice..

  5. 2007 பெப்ரவரி 16

    நல்லா மொழிப்பெயர்க்கிறீங்க… ஆனா தமிழில், ஆங்கிலத்தில் உள்ளது போல SVC முறையிலேயே உள்ளது போல தோன்றுகிறது… ஆனா படிச்சிட்டு நல்லா சிரிச்சேன்…

  6. 2007 பெப்ரவரி 16

    Ethanai murai neenga thosa suttu irukeengannu sollave illaye…

  7. 2007 பெப்ரவரி 16

    Arikuri:Kudipazhakam patri vimarsanam

    Karanam:Mabuu thalai ku eridichi

  8. 2007 பெப்ரவரி 16

    மொழி மாற்றம் தானா??? ;)

  9. 2007 பெப்ரவரி 16

    Where can I find the english version?

  10. 2007 பெப்ரவரி 16

    ada naan kooda ithai translate senjirunthen. Also araiblade did his version

    E – T a m i l : ஈ – தமிழ்: National Repeal Day – Lets Celebrate

  11. 2007 பெப்ரவரி 22

    Looks Like Junoon Tamil!!
    Good Job and sense of humour

மறுமொழி இடுக

Note: You can use basic XHTML in your comments. Your email address will never be published.

Subscribe to this comment feed via RSS