மடை திறந்த வெல்லம்.. (கவிதை)

2007 மார்ச் 21
by vizhiyan

மடை திறந்த வெல்லம்..

பந்தை விரட்டி மகிழ்ந்த சிறுமி

புல் தடுக்கியோ கல் தடுக்கியோ

தொப்பென விழந்து..

தூசி துடைத்து எழுந்து சென்றாள்.

சுற்றும் முற்றும் யாருமில்லையென..

அரை மணி தாமதத்தின் பின்

அம்மா அவதரிப்பில்

சட்டென மடை திறந்தது

சத்தமிட்டு அழுதாள்

“என்னாச்சு?”

“விழுந்துட்டேன்மா”

“அச்சோ..வலிக்குதா குழந்தைக்கு?”

“அப்ப வலிச்சுது”

சின்ன வெல்லத்தின் கண்வழியே

பெருவெள்ளம்..


விழியன்

6 பதில்கள் leave one →
  1. 2007 மார்ச் 21

    Amma aravanaipil? or avatharipil?

  2. 2007 மார்ச் 21

    “அவதரிப்பில்” தான்.
    எங்கோ சென்றிருந்த அம்மா, அரை மணி நேரம் பிறகு வருகின்றாள்..

  3. 2007 மார்ச் 21

    Its nice one….!

  4. 2007 மார்ச் 22

    இயற்கையான நிகழ்வு அருமையான கவிதை வாழ்த்துகள்.

  5. 2007 மார்ச் 23

    வர வர குழந்தையாவே நீங்க மாறிட்டு வர்றீங்க..

    நல்லாயிருக்கு தலை.. இயல்பான , மறுக்க முடியாத சிந்தனை…

மறுமொழி இடுக

Note: You can use basic XHTML in your comments. Your email address will never be published.

Subscribe to this comment feed via RSS