நிறைவேறாத கனவுகள் – கவிதை

2007 மார்ச் 29
by vizhiyan

நிறைவேறாத கனவுகள்

ஒன்பது மணி குளியலறை சண்டை
பக்கெட் போராட்டம்
சோப்பு சண்டை
இரவு நேர கும்மாளங்கள்
கால நேரம் தெரியாமல் சீட்டாட்டங்கள்
நினைத்த நேர கிரிக்கெட்
காரணம் அறியா அடிதடி
புகைப்பதற்கான தனியறை
அரை இஞ்ச் அழுக்கேறிய ஜீன்ஸ்
ஞாயிறு காலை மெஸ்ஸின் தோசை
ஒரே கட்டிலில் மூவர் உறக்கம்
விடிய விடிய தேர்வின் தயாரிப்பு
தேர்வு முந்தைய நாள் கண்விழிப்பு
மின்சாரம் அணைந்ததும் எழும் சத்தம்
சன்னலை திறந்தால் உள்வரும் மலையழகு
மலைக்கோவில் தரிசனம்
மொழிவாரியாக நட்பு
காசு பார்க்காத மனம்
எல்லாம் கேள்விபட்டதோடு சரி
நிறைவேறாத என் ஹாஸ்டல் கனவுகள்

விழியன்

6 Responses leave one →
  1. 2007 மார்ச் 29
    R.Poovannan permalink

    you are having Gods grace to get seat in collage near home.

  2. 2007 மார்ச் 29

    You really missed something in college life Vizhiyan – the HOSTEL LIFE….!

    :-)

    anbudan
    ~kanthi~

  3. 2007 மார்ச் 29
    N Suresh permalink

    but our hosetel was very decent:-)

  4. 2007 மார்ச் 29
    thanmathi permalink

    Thalaiva write article about our performance in world cup criket.

  5. 2007 மார்ச் 30

    கடைசி இரு வரிகள் எதிர்ப்பார்க்காதது. இதில் பாதியாவது என் விடுதி வாழ்க்கையில் நிறைவேறியது !

  6. 2007 மார்ச் 30

    கிரிக்கெட்டுக்கும் நமக்கும் ரெம்ப தூரம்..

Leave a Reply

Note: You can use basic XHTML in your comments. Your email address will never be published.

Subscribe to this comment feed via RSS