செல்லப்பெயர் – கிறுக்கல்
செல்லப்பெயர்
————–
இப்போதும் கூட சொந்த பெயர் நினைவில்லை
செல்லப் பெயர் மட்டும் செல்லமாய்
பெயர்க் காரணம் மறந்து போயினும்
இட்ட பெயர்கள் தெளிவாய்..
கொஞ்சம் வயது முதிர்ச்சியால் சித்தப்பா
அசையாமல் உறங்கியதால் “பொணம்”
அனைத்து விஷயமும் அறியாததால் “Fruit” “பழம்”
கிடைத்த எதையும் நோண்டியதால் சயிண்ட்
கிராமத்தின் பின்னணியால் “பண்ணை”
முடி தொலைத்த காரணத்தால் சொட்டை
அடிக்கடி எடுப்பதால் மொட்டை
அவ்வப்போது திரையில் வெற்றி பெறும் பெயர்கள்
சியான், பகவதி,தீனா,தலை… ..
பக்தி மார்க்கத்தால் “பாகவ்”
கிறுக்கன்,பாண்டு,டு,ஆட்டோ
பெண் மனங்கள் திருட்டால் “ரோமியோ”
சரளமாக “மாமா”களும் “ஓய்”களும்
ஒட்டிக்கொண்ட அடைப் பெயர்கள்
நீண்ட பெயரின் சுருக்கங்கள்
கேள்விப் படாத மிருகங்களும் பறவைகளும்
காரணத்தோடும் காரணமின்றியும்
அர்த்தமோடும் அர்த்தமில்லாமலும்
விரும்பியும் விரும்பாமலும்…
இப்போதும் கூட சொந்தப் பெயர் நினைவில்லை
செல்லப் பெயர் மட்டும் செல்லமாய்
எங்கேனும் இதே பெயர்கள்
காதில் விழும் தருணம்..
நிகழ் கால மரணம்..
கல்லூரி காலத்திற்கு ஓர் ஈர பயணம்..
இப்போதும் கூட சொந்தப் பெயர் நினைவில்லை
செல்லப் பெயர் மட்டும் செல்லமாய்
-விழியன்
(கனாக்காலங்கள் கிறுக்கல் தொகுப்பில் இருந்து )
very nice …
Cho Chweeeeet!!
Nice Umanath..
nice blog with interesting contents
Nice. Felt like a drizzling of college memories. By the way it started drizzling in chennai.
கல்லூரி நாட்களை ஞாபகப்படுத்துகிறது…….
கல்லூரி நாட்களை ஞாபகப்படுத்துகிறது….
Thalai..
Kalakkiteenga adhanala ungal peru kalakkal paandi..
Thalaippe vidhiyasama irukku adhanala ungal peru Thalappa katti
Ezhuthu vithiyasama irukku
adhanala ungal peru Ezhutheeswaran
Aha…
எழுத்தீஸ்வரன்.. எழுத்தீஷ்வரன்..எழுத்தீசுவரன்… எழுத்தீசன்..
இதில் எந்த பெயர் பிடிச்சிருக்கோ அதை நீங்களே வைச்சுக்கோங்க. ஓக்கே
பசுமையான கல்லூரி காலங்களை நினைவுபடுத்துகிறீர்கள்
அந்தக்காலம் திரும்ப வர ஒரு வரம் வேண்டும்