இங்கு நாய்கள் விற்கப்படும் – (மொழிபெயர்ப்பு)

2007 ஜூன் 14
by vizhiyan

“இங்கு நாய்கள் விற்கப்படும்”

கிச்சான் ஒரு ஏழை விவசாயி.அவனுக்கு இருந்த சின்ன நிலத்தில் உழுது வாழ்ந்து வந்தான். வீட்டிலே செல்லப்பிராணியாக டோஜோ என்ற நாயை வளர்த்து வந்தான். அந்த நாய் ஐந்து குட்டிகளை ஈன்றது. ஒரு நாய்க்கு மட்டுமே உணவு போடும் நிலையில் இருந்தான். அதனால் மற்ற நாய்களை விலைக்கு விற்றுவிடலாம் என்ற முடிவிற்கு வந்தான் கிச்சான்.

“இங்கு நாய்கள் விற்கப்படும்” என்று பலகை ஒன்று எழுதி. தன் வீட்டு வாசலில் எழுதி தொங்கவிட்டான் கிச்சான்.அடுத்த நாள் காலை அவன் வீட்டு வாசலில் அழைப்புமணி அடித்தது. வெளியே வந்த கிச்சான், சின்னஞ்சிறிய அழகான சிறுவன் தன் வீட்டு இரும்பு வாசற்கதவிற்கு பின்புறம் நின்றுகொண்டிருந்தான். என்ன என்று பார்வையால் வினவ..”அங்கிள் நாய்கள் கிடைக்குமா?. நான் பார்க்கலாமா?”

“ஓ தாராளமா..” என்று சொல்லிவிட்டு வினோதமான விசிலடித்தார். டோஜோ வாலை ஆட்டிக்கொண்டு வெளியே வந்தது. அதன் பின்னாலே வெண்மையாக ஒரு நாய்குட்டி. அதன் பின்னர் கருப்பு நிறத்தில் ஒரு நாய்குட்டி. இவற்றை பின் தொடர்ந்து இரண்டு நாய்குட்டிகள்.ஒன்று வெள்ளையும் கோதுமை நிறத்திலும் மற்றொன்று கருப்பும் வெள்ளையுமாக வந்தது. நான்கும் நன்கு கொழுகொழுவென இருந்தது.கடைசியாக இளங்கருப்பு நிறத்தில் நாய்குட்டி ஒன்று தத்தி தத்தி வந்தது. அதன் கால்களில் ஏதோ கோளாறு. மற்றவைகளை விட சற்றே மெலிந்து காணப்பட்டது.மெதுவாக வந்து மற்ற நாய்களுடன் சேர்ந்தது.

“எந்த நாய்குட்டி வேணும் தம்பி?” என்றார் கிச்சான். அவன் கைநீட்டி காண்பித்தான். அவன் காட்டியது இளங்கருப்பு நாயினை. “அட அந்த நாய் வேண்டாம்பா.உன்னுடன் ஓடி ஆடி விளையாடாது. மற்ற நான்கில் ஏதேனும் ஒன்றினை எடுத்திக்கொள்ளேன்.”

“இல்லை அங்கிள். என்னால் கூட ஓடி ஆடி விளையாட முடியாது. என்னை யாரும் விளையாட்டில் சேர்த்துக்கொள்ள மாட்டார்கள். அந்த நாயுடன் நான் விளையாடுவேன். அதற்கும் வலி வேண்டாம்” என்றான். தான் போட்டிருந்த ஆடையினை தூக்கி வலது காலில் முட்டியில் இருந்து தரை வரை இருந்த இரும்பு ஷூக்களை காண்பித்தான்.பிறந்த சில நாட்களில் இளம்பிள்ளை வாதத்தால் வலது கால் சிறுத்துவிட்டதாம்.

கிச்சான் அந்த நாய்க்கு எந்த காசும் வாங்காமல், அந்த நாயுடன் இரண்டு பழங்களையும் அந்த சிறுவனுக்கு கொடுத்து அனுப்பினான். சிறுவனும் கையில் நாய்குட்டியை ஏந்தியபடி ‘சிக்கி’…’சிக்கி’ என அழைத்தபடி, கதைகளை சொல்லிக்கொண்டு நடந்து சென்றான் மெதுவாக.

- விழியன்

7 Responses leave one →
  1. 2007 ஜூன் 14

    Good work …

  2. 2007 ஜூன் 14
    Aravind permalink

    Good Work Vizhiyan… Nice

  3. 2007 ஜூன் 14
    Senthil permalink

    Touching…… அருமையாக விவரித்திருக்கிறீர்கள்….

  4. 2007 ஜூன் 14
    மாணிக்கம் permalink

    :)

  5. 2007 ஜூன் 14

    பிள்ளைகளின் மனது எப்பொழுதுமே அழகுதான்…. :-)

  6. 2007 ஜூன் 14
    Balaganesh permalink

    :-)

  7. 2007 ஜூன் 15

    ஏற்கெனவே படித்தகதை எனினும் திரும்ப ஒருமுறை படித்தேன்..

    நல்ல முறையில் விவரித்திருக்கிறீர்கள்…

Leave a Reply

Note: You can use basic XHTML in your comments. Your email address will never be published.

Subscribe to this comment feed via RSS