நம்ம வேலூர் – புதிய குழுமம்
நம்ம வேலூர்..

ஏராளமான குழுமங்கள் புழங்கும் நேரத்தில் இதென்ன புது குழுமம்? இதன் நோக்கம் என்ன? எதற்கு இது?
ஏன் ஆரம்பிக்கப்பட்டுள்ளது, அதன் பணிகள் என்னவாக இருக்கலாம் என்று சில யோசனைகள்.
1. வேலூர் மற்றும் வேலூர் சுற்றி உள்ள ஊர்களில் நடக்கும் முக்கிய நிகழ்வுகள். இலக்கிய நிகழ்ச்சிகள், திருவிழாக்கள்,கூட்டங்கள், போட்டிகள் போன்றவற்றை மற்றவர்களுக்கு தெரிவிக்க.
2. வேலூர் பற்றி விடயங்களை, வரலாற்று பதிவுகள், புகைப்படங்கள், அரிய விடயங்கள், செய்திகள் போன்றவற்றை சேகரித்து, Wiki,வலைத்தளம்,வலைப்பூங்கள் போன்ற இடங்களில் பதிவிடலாம். வருங்காலத்தில் யாரேனும் தேடினால் வசதியாக கிடைக்கும்.
3. வேலூர் மற்றும் வேலூர் சுற்றி உள்ள நிறுவனங்கள், மருத்துவமனைகள், தொடர்பு எண்கள், போன்றவற்றை சேகரிக்கலாம்.
4. கல்லூரி மாணவர்களுக்கான பயிற்சி பட்டறைகள் நடத்தலாம். குழுமத்தை பயன்படுத்துவதில் அதிகம் கணினி வல்லுனர்கள் இருப்பார்கள் என்கின்ற அடிப்படிடையில் கல்லூரி மாணவர்களுக்கு வகுப்புகள், தொழில் சம்பந்தமான விளக்கங்கள் அளிக்கலாம்.
5. வேலூருக்கு தேவையான வளர்ச்சிப்பணிகள் பற்றி விவாதித்து, தகுந்த அலுவலகத்தில் மனு கொடுக்கலாம்.
6. வேலூரில் முக்கிய தொடர்பு எண்கள் (ரயில்வே, பேருந்து,காவல் துறை, தபால் அலுவலகம்..) ஆகியவற்றை ஒரு பக்கத்தில் சேமித்து வைக்கலாம். தொடர்ந்து அதனை சரி பார்த்துக்கொள்ளலாம்.
7. குறிப்பிட்ட காலத்திற்கு ஒரு முறை ஒன்று கூடி பணிகளை நேரில் முடிவெடுக்கலாம்.
8. உலகிற்கே தெரிந்த வேலூரின் வெயிலுக்கும் நம்மால் முடிந்த முயற்சிகள் எடுத்து தீர்வினை கொடுக்க முயற்சிப்போம்.
இவை எமக்கு தோன்றிய சில எண்ணங்களே. உங்கள் கருத்துக்களையும் தெரிவியுங்கள் சேர்த்துக்கொள்வோம். உங்கள் வேலூர் நண்பர்களிடமும் இந்த குழுமத்தில் சேர சொல்லுங்க.
குழுவின் முகவரி : http://groups.google.com/group/ourvellore
-விழியன்
நல்ல முயற்சி. வெற்றி அடைய வாழ்த்துக்கள் தோழா…
2,4,5 அருமையான விசயங்கள்
பக்கத்து ஊர்காரங்கள சேத்துப்பியா உமா
சந்தோசம்.
Polur news kodukalama?
Wow! great initiative!
மிகச்சிறந்த ஆக்கப்பூர்வமான முயற்சி விழியன்!!
குழுமம் அனைத்து குறிக்கோள்களையும் நிறைவேற்றி மேலும் வளர வாழ்த்துக்கள்….
இது அனைத்து ஊர்களுக்கும் பரவ வேண்டும்…
அன்புடன்
தனசேகர்
வாழ்த்துக்கள் அண்ணா!
விழியன் எத்தனை பொருத்தமான பெயர். உங்கள் பார்வை எல்லாவற்றிலும் சிறப்பாகவும் புதுமையாகவும் உள்ளது. வாழ்த்துகள்.
very good