Vizhiyan Photography – 12 (Single Shot)

2007 அக்டோபர் 4
by vizhiyan

நான்கு நாட்கள் வால்பாறை மற்றும் குருவாயூருக்கு செல்ல போட்ட திட்டம் பயணச்சீட்டு கிடைக்காததால் ரத்தானது. நீண்ட நாட்களாக கிராமம் ஒன்றிற்கு சென்று வரவேண்டும் என்ற எண்ணத்தை நிறைவேற்றிக்கொண்டேன். அம்மா வழி பாட்டியின், மூத்த சகோதரியின் இளையமகன்(மாமா) வீட்டிற்கு சென்றேன். ஆரணியில் இருந்து சுமார் 15 கி.மீ. எந்த வளர்ச்சியும் காணாத கிராமம். மூட்டை மூட்டையாய் பாசம். நான் சென்ற முன் தினம் பலத்த மழை பெய்ததால் கழனி முழுக்க தண்ணீர். சீக்கிரம் நடவு செய்ய டிராக்டர் கழனியில் ஓட்டப்பட்டது.வரப்பில் இருந்து ரசித்தேன்.

வெயிலில் களைத்து கல்மீது அமர்ந்த போது தான் அங்கு ஏராளமான தட்டான்கள் பறந்ததை கண்டேன். எத்தனை முயன்றும் சரிவர புகைப்படத்தை எடுக்க முடியவில்லை. சொன்னால் சிரிப்பாக இருக்கும், ஒரு தட்டானிடம் “ப்ளீஸ் ஒரே ஒரு கிளிக்” என்று கெஞ்சினேன். நான் சொன்னது புரிந்ததா தெரியவில்லை. வளைத்து வளைத்து புகைப்படம் எடுத்தேன். அமைதியாக நின்றது. ஒரே ஒரு புகைப்படத்தில் நேருக்கு நேர் நின்று போதுமா என்றது போல காட்சிதந்தது. இதோ அந்த புகைப்படத்தை இங்கே உங்கள் பார்வைக்கு வைக்கின்றேன்.

இந்த Pose போதுமா ?

-  விழியன்

23 பதில்கள் leave one →
  1. 2007 அக்டோபர் 4

    புகைப்படம் நல்லா வந்துருக்கு உமா. எவ்வளவு நேரம் கேமராவோட அதே இடத்துல நின்ன? picture perfect :)

  2. 2007 அக்டோபர் 4

    மன்னிக்கனும் ஜென்டில்மேன், படுத்துட்டு எடுத்த படம் இது. :)

  3. 2007 அக்டோபர் 4

    Really very cute :-)

  4. 2007 அக்டோபர் 4

    படுத்துகிட்டா….

    சூப்பர் சகா…

    இது போதும்…..:)

  5. 2007 அக்டோபர் 4

    இயற்கை ஹெலிகேப்டர்…அழகு

  6. 2007 அக்டோபர் 4

    Nice picture

  7. 2007 அக்டோபர் 4

    good, the insect appears like a copter ready to take off

  8. 2007 அக்டோபர் 4

    Dear Vizhiyan!

    Excellent shot. Keep it up! It is true that if we request lovingly and silently, creatures do respond.

    Love,

    ramanan

  9. 2007 அக்டோபர் 4

    //படுத்துட்டு எடுத்த படம் இது//

    நான் சிரிக்கல…

    சொன்னா நம்பனும்.

  10. 2007 அக்டோபர் 4

    WOW!!!
    Awesome Macro!!!

  11. 2007 அக்டோபர் 4

    Exif details கொடுத்தா சௌகரியமா இருக்குமே!! :-)

  12. 2007 அக்டோபர் 4

    இப்படி ரொம்ப டெக்கின்கலா பேசினா எனக்கு தெரியாது சீ.வீ.ஆர். :-(

    நீங்க எடுத்த மோட் கேக்கறீங்கன்னு நினைக்கிறேன்
    Exposure time : 1/500 sec
    F-Number : F/5.66
    focal length : 55mm
    Camera Model: Canon EOS Digital Rebel XTi

  13. 2007 அக்டோபர் 4

    அட்டகாசமான படம்.

  14. 2007 அக்டோபர் 4

    படம் அருமையா இருக்குங்க.
    வேலைய பாக்குறீங்கலா? இல்ல .. ;-)

  15. 2007 அக்டோபர் 5

    அட்டகாசமான படம்.

    நீங்களும் சி.வீ.ஆர் மாதிரி புகைப்படக் கலை பற்றி பதிவு போடலாமே ?? :)

    அன்புடன்
    தனசேகர்

  16. 2007 அக்டோபர் 5

    hi umanath,

    simply great photography…

    the nature’s beauty….

    awesome…

    no words to say more…

  17. 2007 அக்டோபர் 5

    நன்றி நண்பர்களே..!!

    On JK
    நம்பிட்டேன்..

    on Suresh
    சத்தியமா நான் விடுமுறை நாட்களில் தான் படம் பிடிக்கிறேன். மம்மி…

    On Dhanasekar
    கண்டிப்பா எழுதறேன். அதுக்கு முன்னாடி கத்துக்கறேன்.

  18. 2007 அக்டோபர் 5

    வாவ்வ்வ்வ்வ்வ்,…..

    நிஜமா ரொம்ப அழகா, தத்ரூபமா இருக்கு தலை!! சூப்பர்…

    கலக்குறீங்க.. புகைப்படக் கலையில் மென்மேலும் மெருகேற வாழ்த்துக்கள்..

    படங்களைப் பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி!

  19. 2007 அக்டோபர் 5

    யாரும் சத்தம் போடாதீர்கள். தட்டான் பறந்துவிடப் போகின்றது.

  20. 2007 அக்டோபர் 9

    Superoooo super! Wonderful photography, think you are a professional! Best Wishes and Keep it up.

  21. 2008 ஜனவரி 2

    Hi,
    Its Excellent photohraphy.

    Please let me know about ur cam details.

மறுமொழி இடுக

Note: You can use basic XHTML in your comments. Your email address will never be published.

Subscribe to this comment feed via RSS