கத்தியும் புத்தியும் – குறும்பட திரைக்கதை

2007 டிசம்பர் 20
by vizhiyan

“விழி வழி” வழங்கும் “கத்தியும் புத்தியும்”

[இந்த குறும்படத்தில் வரும் காட்சிகளும் கதாப்பாத்திரங்களும் கற்பனை அல்ல.]

முதல் Frame : கணினியில் ஒருவர் www.tamilmatrimony.com என்று அடிக்கின்றார்.விரல்களை காண்பிக்கிறோம், திரையினை காண்பிக்கிறோம். கட்

அடுத்த Frame: “…திருமண மையம்”. அதற்குள் ஒருவர் நுழைகின்றார்.
அடுத்த Frame: கத்தையான தாள்களுடன் வெளியே வருகின்றார்.
: காகிதங்கள் ஒவ்வொன்றாக கிழிக்கப்படுகின்றது. வேகமாக தொலைபேசியில் எண் அடிக்கப்படுகின்றது
: ‘கல்யாண முடிச்சிடுச்சு..’ ..’ மாப்பிள்ளை அமெரிக்கா போகனும்..’..
‘ தற்போது உபயோகத்தில் இல்லை..’ ‘இல்ல சார் வெளிய குடுக்கல’… பின்னணி குரல்கள்.
அடுத்த Frame : அலைபேசி. “ஹலோ இன்னும் அஞ்சு நிமிஷத்துல அங்க இருக்கேன் சார்..”
பின்னணியில் ரம்மியமான இசை. இளைஞரும் வயதான ஒருவரும் பச்சையாக பூத்துக்குலுங்கும் பூங்கா ஒன்றில் சந்திக்கின்றார்கள். கைக்குலுக்கல். புன்னகை இரண்டு முகங்களிலும். பேசுகின்றார்கள். பின்னணி இசை வேகமாகின்றது. “உங்க ஜாதகத்தை தரீங்களா?”. இளைஞன் முகம் மாறுகின்றது. தாள் ஒன்றை நீட்டுகிறான். தருகிறான்.
“மூல நட்சத்திரமா?. அய்யோ பொண்ணோட அப்பாக்கு ஆபத்தாச்சே..ம்கும்..இது சரிவராது சார்.”..ஜங் என நிற்கின்றது்கின்றது இசை. நிசப்தம். கேமரா இளைஞனின் முகத்தையும் அந்த வயதானவர் முகத்தையும் மாறி மாறி காண்பிக்கின்றது. கட்.

அடுத்த Frame: கேமரா இளைஞனின் பின் மண்டையினை காட்டுகின்றது. “சொல்லுங்க சார்..இப்ப சொல்லுங்க. பொண்ணோட அப்பா கல்யாணத்தை பாக்கணுமா இல்லை இப்பவே மேல போகனுமா? சொல்லுங்க சார்…” கேமரா அப்படியே மேலே உயர்கின்றது. இளைஞன் வயதானவர் கழுத்தில் கத்தி வைத்துக்கொண்டு பேசிக்கொண்டு இருக்கிறார். வயதானவர் முகத்தில் சிரிப்பு.

கடைசி Frame: கருப்பான ஒரு குழிக்குள் இருந்து கேமரா Zoom Outடாகின்றது. நாதஸ்வரம். டும் டும் டும்..

தயாரிப்பாளர்கள் உடனே தேவை :)

கதை, திரைக்கதை, வசனம், இசை, கேமரா : விழியன்

உதவி: (இன்று பொன்விழா பிறந்தநாள் கொண்டாடும்) : கந்தா

8 Responses leave one →
  1. 2007 டிசம்பர் 20
    shanv permalink

    Vizhiyan,

    Good Good…. ithu enna ungaludiaya puthiya parimanama…. :-)

  2. 2007 டிசம்பர் 20

    :) )

    முடிச்சிடலாம்

  3. 2007 டிசம்பர் 20
    Kathaiku Sonthakaran permalink

    En kathaiyai thirudittaan…

  4. 2007 டிசம்பர் 21
    selvaraj permalink

    kalakittinga anna…

  5. 2007 டிசம்பர் 21
    vimalprasath permalink

    Nice one ………

  6. 2007 டிசம்பர் 26
    loveish permalink

    Good approach…….Maybe i can think of producing…later part!

  7. 2008 ஜனவரி 7
    abee permalink

    A New Dimension of yours in a New year…

    Let many new things wrap up in the new year . Happy New Year.

    I think , ambalai payanukku moola natchatiram iruntha athanala ponnoda appaku pirachanai illai.

    Emba enakku kidaika irukara ponnungalayum , ippadi pottu kidaika vidama panreenga

    hahahha jus kidding . Nice One

  8. 2008 ஜனவரி 7

    Budjet enna nu sollu.

Leave a Reply

Note: You can use basic XHTML in your comments. Your email address will never be published.

Subscribe to this comment feed via RSS