கவிதை – 42

2008 மார்ச் 14
by vizhiyan

உடைந்து கொண்டுதானிருக்கின்றது
காரணங்களை தானே உருவாக்கியபடி
தூரத்தே நிகழும் உடைப்புகள்
ஆழத்திலிக்கும் பெரும்வலியினை மீட்டெடுத்து
கனக்கிறது கசிவுடன்
யாருக்காக வருந்துவது?
அடுத்த கணம் ஏதும்நடவாததுபோல்
இதழோர புன்னகையுடன் கடந்துவிடுகிறேன்
வலிகள் கொடுத்த வலுவில்
-விழியன்

One Response leave one →
  1. 2008 மார்ச் 18

    //ஆழத்திலிக்கும் பெரும்வலியினை மீட்டெடுத்து
    கனக்கிறது கசிவுடன்//

    //வலிகள் கொடுத்த வலுவில்//

    உண்மைதான் விழியன்.
    வலிகள் தான் நமக்கு வலுசேர்க்கின்றன.

Leave a Reply

Note: You can use basic XHTML in your comments. Your email address will never be published.

Subscribe to this comment feed via RSS