“தாம்தூம் சொறக்கா டூம்” – குள்ளனின் குட்டிக்கதைகள் – 1

2008 ஜூலை 9

“தாம்தூம் சொறக்கா டூம்” – குள்ளனின் குட்டிக்கதைகள் – 1

(சிறுவர்களுக்கான நாடோடி சிறுகதைகள்)

குள்ள மனிதனை பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள். ஆமாம் அவனே தான். கட்டைவிரல் அளவிற்கு மட்டுமே வளர்ந்த அவனை பற்றிய கதைகள் தான் குள்ளனின் லீலைகள்.

நீண்டவருடங்களுக்கு முன்னர் நடந்த கதைகள் இவை.

குள்ளன் படிப்பறிவு இல்லாதவன்.குள்ளன் ஒரு குறும்புக்காரன். குள்ளன் ஒரு சோம்பேறி.ஏதோ கோளாறினால் அவன் வளார்வதற்கு பதிலாக உடல் சிறுத்துக்கொண்டே சென்றான். சரி கதைக்கு வருவோம்.குள்ளனுக்கும் நெட்டையளுக்கும் திருமணமாகி மூன்று மாதம் ஆகின்றது. குள்ளன் எந்த வேலையும் செய்யவில்லை. தினமும் வீட்டில் திட்டு தான்.

குள்ளனுக்கு கோழிக்கறி என்றால் கொள்ளை பிரியம். அவன் அம்மாவிற்கு கோழிக்கறி சமைக்க தெரியாதலால் அவன் இதுவரை கோழிக்கறி குழம்பை சாப்பிட்டதே இல்லை. ஆனால் அதன் ருசியினைபற்றி நண்பர்கள் சொல்ல கேட்டு இருக்கின்றான். திருமணம் நடந்ததும் ஒரு நாள் தன் நெட்டை மனைவியிடம் கோழி வாங்கி வந்து, கோழிக்கறி குழம்பு செய்து வைக்க சொன்னான். தன் நண்பர்களிடம் சென்று இன்று கோழிக்கறி குழம்பு சாப்பிடப்போவதாக பெருமையாக பேசிவிட்டு வீடு வந்தான். வந்தவனுக்கு அதிர்ச்சி. தன் மனைவி சமைக்கும் போது குழம்பை ருசி பார்த்து இருக்கின்றாள், மிகவும் ருசித்ததால் அனைத்து குழம்பையும் அவளே சாப்பிட்டுவிட்டாள். குள்ளனுக்கு கோபம் வந்ததுவிட்டது. என்ன செய்வது என்றே தெரியவில்லை. வீட்டில் உள்ள பொருட்கள் அனைத்தையும் போட்டு உடைத்தான். யார் சொல்லியும் கேட்கவில்லை.அடங்கவில்லை.

கோபத்துடன் வீட்டைவிட்டு வெளியே வந்தான். வழியில் ஒரு முனிவரை சந்தித்தான். கோவமுடன் இருந்த குள்ளனை சாந்தப்படுத்தினார். சமாதானம் செய்ய உனக்கு என்ன வரம் வேண்டும் என்று கேட்டார். அதற்கு குள்ளன், தான் யாரை பார்த்து ஒரு மந்திரம் சொன்னாலும் அவர்கள் இறந்துவிட வேண்டும். அப்படிப்பட்ட மந்திரத்தை எனக்கு சொல்லி கொடுங்கள் என்றான். வேதனையுற்ற முனிவர் சிறிது நேரம் யோசித்துவிட்டு குள்ளனின் காதில் அந்த மந்திரத்தை கூறினார். அந்த மந்திரம் தான் “தாம்தூம் சொறக்கா டூம்”.

மாலையே மீண்டும் கோழி வாங்கி மனைவியிடம் எடுத்து சென்றான். சொல்லிவிட்டு வாசலில் வந்து உறங்கினான். மனைவி மீண்டும் அதே போல செய்துவிட்டள். அனைத்து கோழி குழம்பையும் குடித்துவிட்டாள். உள்ளே சென்ற குள்ளனுக்கு கடும் கோபம். எதுவும் பேசாமல் நின்றுகொண்டு இருந்தாள் மனைவி. உடனே “தாம்தூம் சொறக்கா டூம்” என்று தன் மனைவியினை பார்த்து கூறினான். தன் மனைவியின் உயிர் அதை சொன்ன மாத்திரம் பிரிந்தது.

வாசலில் வந்து அமர்ந்தான். வழிப்போக்கர்கள் தெருவின் முனையில் உள்ள திருமண மண்டபத்தில் கோழிக்கறி விருந்து நடப்பதாக பேசிக்கொண்டு சென்றனர். குள்ளன் அங்கே விரைந்தான். மண்டப வாசலில் அவனை திருமணம் நடத்துவோர் மடக்கி அழைப்பிதழ் இருக்கின்றதா என்றனர். இல்லை என்றது அவனை விடவில்லை. அவன் தன் மந்திரத்தை பயன்படுத்தி மடக்கியவர்களை வீழ்த்தினான்.

மண்டபத்திற்குள் நுழைந்து அங்கிருந்த எல்லோரையும் பார்த்து தாம்தூம் சொறக்கா டூம் என்றது அனைவரும் விழுந்தனர். மணமக்களையும் குள்ளன் கொன்றான். சமையல்கட்டிற்கு சென்று சமையல் செய்திருந்தவர்களையும் கொன்றான். அண்டா முழுக்க இருந்த அனைத்து கோழிக்குழம்பையும் குடித்தான்.

அளவுக்கு மீறி உண்டுகொண்டே இருந்தான் குள்ளன். வயிறு பெருத்தது. அவனால் நடக்கமுடியவில்லை. மெல்ல மெல்ல நடந்து மீண்டும் ஒரு இறைச்சி துண்டை உண்டான். வாயினை திறக்கவில்லை. காக்கா ஏதேனும் கொத்தி சென்றுவிடும் அல்லவா. அவன் தொண்டைவரை உணவு இருந்தது. எப்படியோ கஷ்டப்பட்டு கண்ணாடி முன்னர் நின்றான். வயிற்றுவலி தாங்கவில்லை. கண்ணாடியில் அவனை பார்த்து “தாம்தூம் சொறக்கா டூம்” என்று சொல்லி அவனும் இறந்தான்.

எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டிருந்த முனிவர் இறந்த அனைவரையும் “ம்டூ காக்றசொ ம்தூம்தா” என்ற மந்திரம் மூலம் உயிர்பெறச்செய்தார். என்ன நடந்தது என்றே அனைவரும் மறந்துவிட்டு விட்ட இடத்திலிருந்து வாழ்கையினை தொடர்ந்தார்கள். அதன் பிறகு அந்த மந்திரத்தை முனிவரும் மறந்துவிட்டார் குள்ளனும் மறந்துவிட்டான். நீங்களும் மறந்துவிடுங்கள்.மறந்துகூட இதை நினைவில் வைத்துக்கொள்ளாதீர்கள்.

-விழியன்

5 Responses leave one →
  1. 2008 ஜூலை 9
    Surya permalink

    Hi
    Very Nice..
    Keep it up
    Surya
    butterflysurya@gmail.com

  2. 2008 ஜூலை 9

    ha ha ha :) saringa!! nalla kadhai!

  3. 2008 ஜூலை 9

    முயற்சிக்கு பாராட்டுக்கள்.

    “ம்டூ காக்றசோ ம்தூம்தா”
    திருப்பி எழுதும்போது குறில் சொ, நெடிலாகி விட்டது. திருத்திக் கொள்ளவும்.

  4. 2008 ஜூலை 9

    நன்றி கெளதம். மாற்றிவிட்டேன்.

    நன்றி ராகவா, சூர்யா.

  5. 2008 ஆகஸ்ட் 9

    மிக அருமையான கதை.

    நன்றி.

    வாழ்த்துக்கள்….

Leave a Reply

Note: You can use basic XHTML in your comments. Your email address will never be published.

Subscribe to this comment feed via RSS