க.பி. கவிதைகள் – 3
2008 ஜூலை 11
க.பி. கவிதைகள் – 3
எனக்கான வீரம்
தொல்லைகொடுத்த கரப்பான்களை
தேடி அடித்து வெளியேற்றுவதில்
நின்றுவிடுகின்றது எனக்கான வீரம்
வீதியெங்கும் விரவிக்கிடக்கும் விஷமங்களை
கண்டு கொள்ளாமல்
கண்டும் கொல்லாமல்..
-விழியன்
நாங்கள்
புரிந்துகொள்கிறாள்
என் வார்த்தைகளுக்கு நடுவே உலவும்
மெளனத்தையும்
விடுபட்ட சொற்களையும்
மறைத்துவைத்த அர்த்தங்களையும்..
நவீன கவிதை படித்த முட்டாளாய்
முழித்துக்கொண்டே இருக்கின்றேன்
அவள் தெளிவாய் எதை சொன்னாலும்
-விழியன்
both are good.. expecailly first is very good…
nalla nidharsanam!
both of them are very nice!! keep it up thalai!
first one is really v good.
kanavukale ….
mariyathaikuriya vizhiyanuku
vazhi vidungal , ungal vekam
avaruku pothathu….
இரண்டுமே அருமை விழியன்
)
இரண்டு கவிதைகளுமே அழகு விழியன் …
முதல் கவிதை மென்பொறியாளர்களுக்கும் பொறுந்தும் ! நம்மில் பலரின் வாழ்க்கையும், தொல்லை கொடுக்கும் பூச்சிகளைக் கொன்று(bugs
), விட்டில் பூச்சிகளய் வாழ்வைத் தொலைப்பதிலேயே முடிந்து விடுகிறது !
Good work Vizhiyan…
நன்று
//கண்டு கொள்ளாமல்
கண்டும் கொல்லாமல்..//
azhagu!!
very nice anna……….second one is ultimate