க.பி கவிதைகள் – 4
2008 ஜூலை 15
க.பி கவிதைகள் – 4
பொண்டாட்டி ஊருக்கு போயிட்டாப்பா… 1
அவளில்லா இரவில்
அளவில்லா சோகத்துடன் நித்திரைக்கு செல்ல…
நினைவுகள் நிஜத்திலிருந்து கனவுக்கு தாவின
கனவிலிருந்து என்னை காண்கிறேன்.
நிஜத்தில் நிம்மதியாய் உறங்குவதை கண்டு
கனவிலும் உறங்க செல்கிறேன்.
நினைவுகள் எங்கோ உலாவி
விழிக்கையில் நிஜத்தோடு தழுவின.
ஏதோ கனவு கண்டாதாய் நினைவு
-விழியன்
——————————————————————————–
பொண்டாட்டி ஊருக்கு போயிட்டாப்பா… 2
அருகாமையில் அடித்துக்கொள்ளும் பொழுதும்
அணைத்துக்கொள்ளும் கணங்களும்
அறியமுடியவில்லை..
ஓர் நாள் பிரிதலில்
நமக்கான அன்பின் உயரங்களையும்
பிரியங்களின் ஆழங்களையும்
உணர்த்தியது இல்லத்தின் வெறுமை
-விழியன்
குறிப்பு: இந்த இடுகை இடும் போது மனைவி வீடு வந்தாச்சு
நமக்கான அன்பின் உயரங்களையும்
பிரியங்களின் ஆழங்களையும்
ithu romba nalla irukku..
unjalil adum maname,
unakum payam varumo?
parava illai payapadu
pozhuthu pokattum
appadiyavathu…..
anbulla uyire,
naan manam ezhuthukiren
enaku payam ellam
illai engal vizhiyan
ezhuthum kavithaiyai
padithu paar unakum
athu porunthume….
இரண்டையும் படிச்ச உங்க மனைவியின் கருத்தையும் பதியவும்.
second kavithai romba arumai.keep it up
anubavichi… yeluthina kavithai yakkum….
//இந்த இடுகை இடும் போது மனைவி வீடு வந்தாச்சு
இந்த கடைசி சோகத்திற்கு அடி விழவில்லையே ??
கவிதை அருமை
vazhakkam pola arumaiyaana kavithai.
//நமக்கான அன்பின் உயரங்களையும்
பிரியங்களின் ஆழங்களையும்
உணர்த்தியது இல்லத்தின் வெறுமை//
verumai — THANIMAI yin parisu allava? adhai kurippidunga thalaiva!!
manaivi (anni) enna sonnanga?