தேசபக்தி என்றால் என்ன?

2008 ஆகஸ்ட் 13

தேசபக்தி என்றால் என்ன?

சுதந்திர தினம் வருகின்றது. வீதியெங்கும் மூவண்ண கொடிகள் விற்பனைக்கு வந்திருக்கின்றன. சட்டையில் மாட்டிக்கொள்ளவும், மேஜையில் வைக்குவும், வண்டிகளில் மாட்டிக்கொள்ளவும் கொடிகள் வகைவகையாக கிடைக்கின்றன். பள்ளிகளில் சொன்னது நினைவிற்கு வந்தது. அனைவருக்கும் தேசபக்தி இருக்க வேண்டும் தேசபக்தி இருக்கவேண்டும் என்று.

திடீரென ஒரு சந்தேகம். இந்த தேசபத்தி தேசபத்தின்னு சொல்றோமே அப்படி என்றால் என்ன? அதுற்கு வரைமுறை ஏதேனும் இருக்கா. இந்த சந்தர்பத்தில இப்ப நடந்துகொள்ளனும்னு இருக்கா? அப்படியே யோசித்தபோது எழுந்த சில கேள்விகள் இவை

* எது தேசபத்தி?

* சுதந்திர தினம், குடியரசு தினம் ஆகிய இரு நாட்கள் மட்டும் கொடி ஏற்றி அதற்கு வணக்கம் வைப்பது தேசபத்தியா? அந்த இரு நாட்களும் விடுமுறை கிடைத்துவிட்டது என காலைமுதலே தொலைக்காட்சிகளில் மூழ்குவது சரியா? பள்ளியோடும் கல்லூரியோடும் முடிந்துவிடுமா அந்த பழக்கம்?

* அன்னிய பொருட்கள் வேண்டாம், தேசத்தில் உற்பத்தி செய்யும் பொருட்களை மட்டும் பயன்படுத்த வேண்டும் என்பதா தேசபத்தி?

* இந்திய அணி கிரிக்கெட் விளையாடும் போது அந்த அணியினை உற்சாகப்படுத்து மட்டும் தேசபத்தியா?

* எங்கேனும் ஜனகன பாடல் கேட்டால் அந்த பாடல் முடியும் வரை அமைதியாக நிற்பது தேசபத்தியா? ஜனகனமன பாடலில் முழு வரிகளும் தெரியாமல் இருப்பதலால் எனக்கு தேசபத்தி இல்லை என்றாகிவிடுமா?

* இந்தியாவை பற்றி தரக்குறைவாக யாரேனும் பேசும் போது என்ன செய்ய வேண்டும்? எனக்கு தேசபத்தி இருக்கிறது என்றால் என்ன செய்யவேண்டும்? அமைதி காக்க வேண்டுமா? அவர்களுக்கு விளக்கம் தரவேண்டுமா?

* வீதியில் ஓர் அநியாயம் நடக்கின்றது. அதை தட்டிக்கேட்காமல் செல்கின்றேன். அட வீதி தானே என்று விட்டுவிடலாம் தானே. இதற்கு தேசபத்திக்கும் ஏதேனும் சம்பந்தம் உண்டா?

* தேசபத்தி என்றால் தேசத்தை நேசிக்க வேண்டும் என்கின்றார்கள். தேசத்தில் இருக்கும் மக்களை நேசிக்க வேண்டும். எனக்கு என் குடியிருப்பில் எதிர்வீட்டில் இருப்பவர் பெயர் கூட தெரியாதே. அவருக்கும் என்னை தெரியாதே. எங்களுக்கு தேசபத்தி இல்லை என்றாகிவிடுமா?

* எல்லைகளில் நிற்கும் வீரர்களுக்கு தேசபத்தி உண்டு என்கின்றார்கள். நாட்டில் வாழும் நாம் எப்படி தேசபத்தியினை வெளிப்படுத்த வேண்டும்?

* தேசபத்திக்கும் தேசவெறிக்கும் என்ன வித்யாசம்? என்ன வேறுபாடு? என்ன வரைமுறை?

இவை எதுவுமே இல்லை. தேசபத்தி எல்லாம் வெறும் ஏட்டு வார்த்தைகள். அவை சுதந்திரம் கிடைத்தபோதே நீர்த்து போய்விட்டது. சுத்த ஹம்பக் என்ற நிலைக்கு சென்றுவிட்டதா? அய்யோ யாராச்சும் சொல்லுங்களேன் தேசபத்தி என்றால் என்னவென்று? தேசபத்தியினை நான் எப்படி வெளிப்படுத்த வேண்டும்?

-விழியன்

7 Responses leave one →
  1. 2008 ஆகஸ்ட் 13
    Bala permalink

    Desa bakthi?

    even if you are not doing any good thing for the country where you have born, at least don’t do anything harmful to that. That itself a great patriotism.

  2. 2008 ஆகஸ்ட் 13
    வெண்ணை permalink

    இது எல்லாம் ஒரு பதிவு தூ

  3. 2008 ஆகஸ்ட் 13
    Sathish Rajamani permalink

    A Good Question Umanath ..

  4. 2008 ஆகஸ்ட் 13

    ???

  5. 2008 ஆகஸ்ட் 14

    ஹ்ம்ம்.. தன்னுடைய சுற்றுப்புறத்துக்கும், சுற்றியிருக்கும் மக்களுக்கும் தீங்கின்றி, உதவ முடிந்தால் உதவி இருப்பதே நாட்டுப்பற்று.. every big journey starts with a small step,such small collective things make huge differences

  6. 2008 ஆகஸ்ட் 15
    சிக்கிமுக்கிகொக்கன் permalink

    ஐயோ! இது தெரியாதா?

    ஆட்சியில் – பதவியில் –
    உள்ளவர்கள் மற்றவர்களுக்கு இருக்கவேண்டும் என்று சொல்லும் அறிவுரை!

  7. 2008 ஆகஸ்ட் 19

    If we have self control and obedience, that is also patriotism

    Few examples are….
    Self control while waiting for the signal,
    Obedience in following the government rules (includes politicians and government employees)
    Following a queue.
    etc..

Leave a Reply

Note: You can use basic XHTML in your comments. Your email address will never be published.

Subscribe to this comment feed via RSS