நகைக்கும் பொய்கள் – கவிதை

2008 ஆகஸ்ட் 13
by vizhiyan

நகைக்கும் பொய்கள் – கவிதை

பொய்களுக்கும் எனக்கும் விநோத நட்புண்டு
எங்கிருந்தும் பல்லிளிக்கும்
வண்ண ஆடையிட்டு அழகாய் நிற்கையிலும்
கோபுர உச்சியில் ஒய்யாரமாய் நின்றாலும்
தார் சாலைகளில் ஊர்ந்தாலும்
லேசாய் புன்னகையேனும் உதிர்க்கும்
இருட்டின் கூடாரத்தில்
மெல்ல பதுங்கி ஓய்வெடுத்து
கோழிகள் கூச்சலில்
ஊற்றாய் நீளும் அதன் துவக்கம்.
நிதர்சனம் ஓரத்தில் அழுதாலும்
பொய்கள் கம்பீரமாய் நகைக்கின்றன.
-விழியன்

4 Responses leave one →
  1. 2008 ஆகஸ்ட் 13

    விழியன்,

    நல்ல கவிதை. பொய்மையின் பகட்டும் உண்மையின் தரித்திரமும் வாழ்வின் தொடர் முரண்கள்தான். வாழ்த்துக்கள்.

    அனுஜன்யா

  2. 2008 ஆகஸ்ட் 13
    வெண்ணை permalink

    அய்யோ சாமி தாங்கல

  3. 2008 செப்டம்பர் 6

    பொய்களுக்கும் எனக்கும் விநோத நட்புண்டு
    எங்கிருந்தும் பல்லிளிக்கும்
    வண்ண ஆடையிட்டு அழகாய் நிற்கையிலும்
    கோபுர உச்சியில் ஒய்யாரமாய் நின்றாலும்
    தார் சாலைகளில் ஊர்ந்தாலும்
    லேசாய் புன்னகையேனும் உதிர்க்கும்
    இருட்டின் கூடாரத்தில்
    மெல்ல பதுங்கி ஓய்வெடுத்து
    கோழிகள் கூச்சலில்
    ஊற்றாய் நீளும் அதன் துவக்கம்.
    நிதர்சனம் ஓரத்தில் அழுதாலும்
    பொய்கள் கம்பீரமாய் நகைக்கின்றன.
    -விழியன்

  4. 2008 அக்டோபர் 23
    Bruno permalink

    This is really nice…

Leave a Reply

Note: You can use basic XHTML in your comments. Your email address will never be published.

Subscribe to this comment feed via RSS