What is your choice?
உங்கள் தேர்வு எது? ஏன்?
பெங்களூரில் வாடகைக்கு வீடு பிடிப்பது என்பது சாதரண காரியமல்ல. அதுவும் திருமணம் ஆகாத இளைஞர்கள் என்றால்?? அப்படி ஒன்றும் பெரிய விஷயம் இல்லை. எல்லா தெருக்களிலும் ஏராளமான இடைத்தரகர்கள் இருக்கின்றார்கள். ஆனால் என்ன 10 வீடு காட்டிவிட்டு வீட்டின் வாடகைக்கு சரிசமனான தொகையினை நம்மிடம் பெற்றுக்கொள்வார்கள். நிற்க.
இந்த சூழ்நிலையில் நீங்கள் என்ன செய்வீர்கள்?
இன்னும் இரண்டு நாட்களில் நீங்கள் தங்கும் வீட்டினை காலி செய்தாக வேண்டும். உங்களுடன் நான்கு நண்பர்களும் இருக்கின்றார்கள். தேடி பிடித்து மூன்று வீடு கிடைக்கின்றது.
முதல் வீட்டில் ஐந்து பேர் தங்க அனுமதி இல்லை என்று சொல்லிவிட்டார்கள்.
இரண்டாவது வீடு பெரிய வீடு. அறைகள் பெரிதாக நல்ல காற்று வசதியுடன் மூன்றாம் மாடியில் இருக்கின்றது. வீட்டின் எதிரிலேயே நல்ல உணவகம் இருக்கின்றது.
மூன்றாவது வீடு இரண்டாவது வீட்டைவிட சின்ன வீடு. 500 ரூபாய் குறைவான வாடகை.
பிரச்சனை எங்கே என்றால் இரண்டாம் வீடு தெருக்குத்து வீடாம். மூன்றாம் வீட்டின் வாசலில் அந்த பகுதியின் மிகப்பெரிய கால்வாய் செல்கின்றது. நண்பர்களிடம் விசாரித்ததில் நிறைய கொசுக்கள் காசு வாங்காமல் எந்நேரமும் ஊசி போடுமாம், மழை காலங்களில் கால்வாய் வழிந்து வீட்டின் முன்னர் சாக்கடை தேங்குமாம்.
இந்த இரண்டு வீட்டில் எதை தேர்தெடுப்பீர்கள்?
The same situation has happend just 15 days before in chennai. House owner was ticking the time.(but 4 of us including me). No way. No way. At last moment, 4 of us went and stayed 4 different friends room. Some how we managed for 15 days. Just 5th of this month only we found a new house and united again. Romba Kastam…
இந்த பேச்சலர்க்கு எங்க போனாலும் பிரச்சினை
மூன்று வீடுகளில் இரண்டாவது சரியெனப் படுகிறது .. எல்லா குத்துகளையும் தள்ளி வைக்கத் தயாரானால்
இளைஞர்களிடம் தெருக்குத்து,மூலைக்குத்து இவைகளை நல்ல மனதைரியம் கான்ஃபிடன்ட் மூலம் வென்று விடலாம். கொசுக்கடியை வெல்வதற்கு கான்ஃபிடன்ட் மாத்திரம் உதவாது.
காற்றுவசதி,உணவகம்,வெளிச்சம்,விசாலமான அறைகள் இவைகளின் முன்னே எந்தவிதமான கொசுக்கடியோ, 500 ரூபாய் அதிகமோ, உள் / வெளிக்குத்துகளோ, எவையும் காணாமல் போகிவிடும்.
அப்படி மீறிக்கொண்டு உள்குத்து / தெருக்குத்து இருந்ததெனில் மதம் மாறிவிடவேண்டியதுதான். எந்த மதத்தில் இந்தக் குத்துகள் இல்லையோ அந்த மதத்திற்கு மாறிவிடவேண்டியதுதான்.. (இது தமாசு இல்லைங்க).
just choose the second one
2nd house is the better one
எங்க பாட்டி மாதிரி சீட்டு எழுதி போட்டு பார்ப்பேன்..
hi
i prefer second one….