WCF என்றால் என்ன?
2008 நவம்பர் 25
WCF என்றால் என்ன?
WCF என்பது .NET சட்டமைப்பின் 3.5 (.NET Framework 3.5)லின் நான்கு தூண்களில் ஒரு முக்கிய தூணாக கருதப்படுகின்றது. மைக்ரோஸாப்ட் நிறுவனம் எப்பொழுதும் எல்லா சேவைகளையும் ஒரு சேர ஒரு குடையின் கீழ் கொண்டு வர வேண்டும் என்று துடிக்கும் ஓர் நிறுவனம். அதில் லாபகர நோக்கம் இருப்பதை தவிர்க்க இயலாது. அந்த நோக்கத்தின் அடிப்படையில் கொண்டுவரப்பட்டதே .NET சட்டமைப்பும் அதன் துணை மென்பொருட்களும். அதன் சமீபத்திய வெளியீடு WCF – Windows Communciation Foundation.
WCF- (சாளர தொடர்பு கட்டமைப்பு) இது எல்லா சேவைகளையும் ஒன்றிணைக்க வந்த மற்று சேவை. ஏற்கனவே Webservices, MSMQ, Remoting ஆகிய தொழில்நுட்பச்சேவைகளை ஒன்றிணைக்க வந்த மாற்று சேவை.மேற்கூறப்பட்ட சேவைகள் ஒவ்வொன்று ஒவ்வொரு விதத்தில் சிறந்தவை. ஆனால் இந்த சேவைகள் ஏதோ ஒரு விதிமுறைக்கு(Protocol) உட்பட்டவை. WCFஐ உருவாக்கும் போது அது சேவைநோக்கு கட்டமைப்பின்படி (Service Oriented Architecture) செயல்படவேண்டும் என்று உருவாக்கினர்.
சாளர தொடர்பு கட்டமைப்பின் சிறப்புக்கள்
- அக இணையத்திலும் புற இணையத்திலும் செயல்படும் வல்லமை மிக்கது.
- பொதுவாக ஒரு வகையில் நிரல்களை எழுதி அதை ஏற்றம்(Hosting) செய்யும் போது எப்படி அதனுடன் தொடர்பு கொள்ளலாம் என அறிவிக்கலாம்.
- இதன் தொடர்பு SOAP தரவுகள் மூலமும் XML தரவுகள் மூலமும் செயல்படும்.
சாளர தொடர்பு கட்டமைப்பின் சிறப்புக்கள்
- அக இணையத்திலும் புற இணையத்திலும் செயல்படும் வல்லமை மிக்கது.
- பொதுவாக ஒரு வகையில் நிரல்களை எழுதி அதை ஏற்றம்(Hosting) செய்யும் போது எப்படி அதனுடன் தொடர்பு கொள்ளலாம் என அறிவிக்கலாம்.
- இதன் தொடர்பு SOAP தரவுகள் மூலமும் XML தரவுகள் மூலமும் செயல்படும்.
WCF ஆன்னா ஆவண்ணா…
சாளர தொடர்பு கட்டமைப்பின் மூன்று முக்கிய பகுதிகள்
1. முகவரி (Address)
2. பிணைப்பு (Binding)
3. ஒப்பந்தம் (Contract)
முகவரி – எங்கே சேவை இருக்கின்றது என தெரிவிக்கும்,
பிணைப்பு – எப்படி சேவையுடன் பேசலாம் என தெரிவிக்கும்,
ஒப்பந்தம் – தரவுகள் எப்படி இருக்க வேண்டும் என்பதை சொல்லும் ஒப்பந்தம்.
பிணைப்பு – எப்படி சேவையுடன் பேசலாம் என தெரிவிக்கும்,
ஒப்பந்தம் – தரவுகள் எப்படி இருக்க வேண்டும் என்பதை சொல்லும் ஒப்பந்தம்.
அடுத்த பதிவில் WCF ஏற்றுவது எப்படி?
(நீண்ட நாட்களாக ஒரு தொழில்நுட்பக் கட்டுரைகள் எழுத வேண்டும் என்கின்ற ஆவல். அதன் விளைவாக ஒரு சிறு முயற்சி)
-விழியன்
-விழியன்
Not having much idea about .NET as I am into J2EE
)
Good luck for the endeavors thalaiva. Thanks for the article!!
நல்ல முயற்சி விழியன்! தொடர்ந்து எழுதுங்கள்! பயனுள்ள தொடர்!
நன்றி!
Useful one, Expecting more like this.
நல்ல அறிமுக கட்டுரை உமா. வாழ்த்துக்கள்.
நல்ல முயற்சி… வாழ்த்துக்கள்
இது தான் முதல் பதிவா? இதன் தொடர்பில்.
திடிரென்று நுழைந்துவிட்டது போல் இருந்தது,எனக்கு.
Very useful article…Expecting more on this…
Thank U
சென்றிடுவீ ரெட்டுத் திக்கும் – கலைச்
செல்வங்கள் யாவுங் கொணர்ந் திங்கு சேர்ப்பீர்!
பாரதியின் கனவை
நனவாக்கும் கட்டுரை
வாழ்த்துக்கள்
ஆவலோடு…………..
தமிழ்தாசன்
இதை. இதைத் தான் உங்களிடமிருந்து எதிர்பார்த்திருந்தோம்.
மிக்க நன்றி நண்பர் அவர்களே!
என்றும் அன்புடன்
தமிழ்நெஞ்சம்
Good. Keep it up!
Umanath, Excellent, i like it very much. Looking forward to see next versions soon. Thanks.
xlant article..plz continue tis things..very very nice
I recently came across your blog and have been reading along. I thought I would leave my first comment. I don’t know what to say except that I have enjoyed reading. Nice blog. I will keep visiting this blog very often.
Ruth
http://www.infrared-sauna-spot.info