What is SOA?
சேவை நோக்கு கட்டமைப்பு:
சேவை நோக்கு கட்டமைப்பு என்பது ஏற்கனவே இயங்கும் கட்டமைப்பில் இருந்து சிறப்பு அம்சங்களை உள்வாங்கி புதிகாக உருவெடுத்துள்ள நல்லதொரு கட்டமைப்பாகும். மென்பொருள் துறையில் ஏராளமான மாற்றங்கள் வந்துகொண்டே இருக்கின்றன, இருக்கும். எல்லா நிலைகளிலும் என்ன மாற்றம் நடக்கின்றது என அறிந்துகொள்வது மிக அவசியமாகிவிடுகின்றது. நிகழும் உலகியல் மாற்றங்களுக்கு ஏற்ப இந்த தொழிலில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம் என்கின்ற நிலையும் உள்ளது. இந்த துறையில் எந்த நிலையில் இருந்தாலும் எங்கேனும் இந்த (SOA)சேவை நோக்கு கட்டமைப்பு வார்த்தை காதில் விழுந்து இருக்கும்.
சேவை நோக்கு கட்டமைப்பில் சேவைகள், சேவைகளை பயன்படுத்தும் வாங்கிகள்(Consumers,clients), சேவைகளை தயாரிக்கும் வழங்கிகள்(producers,Servers) எல்லோரும் புழங்கும் இடமாகவும், ஆனால் மற்றவர் மீதான சார்புதன்மை அற்றதாகவும் தனித்தனியே இயங்கும் வல்லமை பெற்றதாக இருக்கும். SOA என்பது எந்த ஒரு தொழில்நுட்பத்தை சார்த்த ஒரு கோட்பாடு அல்ல. வாங்கிகள் ஒரு இயக்க அமைப்பிலும், வழங்கிகள் ஒரு இயக்க அமைப்பிலும(Operating system), வழங்கிகள் வேறு இயக்க அமைப்பிலும் செயல்படலாம். அதே போல தான் நிரல் மொழியும். ஒவ்வொரு அங்கமும் தனித்தனியே இயங்குவதால் மறுபயன்பாடு சாத்தியமாகின்றது. SOA தேவைகள் வேகமாக மாறும் திட்டங்களுக்கு உகந்தது.

சேவை நோக்கு கட்டமைப்பில் அங்கங்கள் பற்றி பார்வையிடுவோம்:
1. வழங்கிகள் – குறிப்பான சில சேவைகளை வழங்கும் அங்கம்.
2. வாங்கிகள் – வழங்கிகள் வழங்கும் சேவைகளை விழுங்குபவை.
3. சேவைகள் – நிர்ணயக்கப்பட்ட வேலைகளை செய்வது (Services)
4. ஒப்பந்தங்கள் – எப்படி தரவு பரிமாற்றம் நடைபெறும் என அறிவிக்கும் அங்கம்.
சேவை நோக்கு கட்டமைப்பின் அற்புதம் என்னவெனில் ஏற்கனவே இயங்கும் கட்டமைப்பில் இருந்து இந்த கட்டமைப்பிற்கு மாற்றம் செய்ய குறைந்த செலவும் நேரமும் எடுக்கும். அதே சமயம் அதன்பிறகு என்ன மாற்றங்கள் நிகழந்தாலும் அதனை எளிதாக உட்கொள்ளும். நிறுவனம் ஒன்றின் தொழில்முறைகள் (Business Process) வழமையாக வெவ்வேறு தளங்களில் செயல்படும், அவற்றை எல்லாம் ஒன்றினைக்க நமது SOA வை பயன்படுத்தலாம்.
தவறான நம்பிக்கைகளும் உண்மையும்:
1. SOA எல்லா மென்பொருள் தேவைகளுக்கான தீர்வு:
எல்லா மென்பொருள் தேவைகளுக்கான தீர்வாக சேவை நோக்கு கட்டமைப்பு தீர்வாக வாய்பில்லை. தேவைகளை பொருத்தே அதனை கூற முடியும்.அதே போல இது ஒரு கட்டமைப்பு மட்டும் தான், தொழில் சார்ந்த தீர்வுகளை (Business Solutions) SOA அளிக்க முடியாது.அதே போல தீர்வின்(solutions) எல்லா அடுக்குகளில் SOAவின் பயன்பாடு இருந்தால் அந்த தீர்வு முழுமைபெரும்.
2. SOAவை தரவிறக்கம் செய்து பயன்படுத்தலாம்:
நிச்சயம் கிடையாது. SOA என்பது கட்டமைப்பு ரீதியான அனுகுமுறை. SOAவை ஒரு மென்பொருளாக பார்க்க முடியாது. அது ரெடிமேட் சட்டையல்ல, எப்படி சட்டையை வெட்டினால் சட்டை அழகாக, எளிதாக தயாரிக்கலாம் என்று சொல்லும் முறை மட்டுமே.
3.SOAவை வலைச்சேவைகள் மூலம்மட்டுமே பயன்படுத்தமுடியும்:
SOA எந்த தொழில்நுட்பத்தையும் சார்ந்தது அல்ல. தொழில்நுட்பத்தினை தேர்ந்தெடுக்க பல காரணிகள் உண்டு. தொழில் தேவைகள், திட்டத்திற்கான நிதி நிலவரம், கால நிர்ணயம் ஆகியவைகளை கணக்கில் கொண்டே தொழில்நுட்பம் தேர்தெடுக்கப்படும். வலைச்சேவைகள்(Web services) எளிதாக SOAவை செயல்படுத்த உதவுகின்றன. ஆனால் அதன் மூலம் மட்டுமே பயன்படுத்தமுடியும் என்றில்லை.
சேவைநோக்கு கட்டமைப்பினை பற்றிய சில குறிப்புகள்
- இந்த கட்டமைபிற்கும் செந்தர வரையேடுகள் இருக்கின்றன.
- இது மிக எளிமையான தீர்வு
- சார்புத்தன்மை அற்றது
- சேவைகளை மீண்டும் மீ’ண்டும் பயன்படுத்தலாம்
- மென்பொருள் நெகிழ்ச்சி (Software Flexibility) அதிகமாக உள்ளது
மேலும் அறிந்துகொள்ள:
1. http://en.wikipedia.org/wiki/Service-oriented_architecture
2. http://www.service-architecture.com/web-services/articles/service-oriented_architecture_soa_definition.html
- விழியன்
(WCF பற்றி பேசும்பொழுது முக்கியமாக SOA பற்றி அறிந்திருக்க வேண்டும். அதானால் WCF வரிசையில் நடுவே இந்த கட்டுரை வந்துவிட்டது)
nalla muyaRchi. sila thamiz choRkaLukku innamum Angilacchol enna enpathai kuRikkavENdumO enath thOndRukiRathu
What should I do in my computer to send comments in Tamil. Please send a step by step note. Thanks.