பாட்டை விரும்பிய ரித்திக்கா – கவிதை
2009 பெப்ரவரி 11

பாட்டை விரும்பிய ரித்திக்கா
பாட்டு பிடிக்கும் என்றாள் ரித்திகா
பைத்தியம் போல இதையே கேட்கின்றாளென
அம்மா வருத்தப்பட்டாள்.
“மாமா உங்க செல்லுல அந்த பாட்ட போடுங்க”
பாட்டை பாடியவன் நண்பன்.
கெஞ்சி அவனை வீட்டுக்கு அழைத்து சென்றேன்.
“யார்??”
“உன் பாட்டை பாடியவன்”
நண்பன் சிரித்தான் பூரித்தான்.
“இல்லை! இவர் இல்லை. வேற ஒருத்தர்”
அழுதபடியே உள்ளே ஓடினாள்.
நானும் நண்பனும் வந்துவிட்டோம்.
வாயசைத்தவனை எனக்கு தெரியாது.
- விழியன்(11/02/09)
விழியன்… எங்க ஊர்க்காரன்..
சுகமா விழியன்..
வாழ்த்துக்கள்..
அன்புடன் இளங்கோவன், அமீரகம்
அன்பின் விழியன்..வலியினை மறந்தேன்..உன் வலையினில் விழுந்து.. வாழ்த்துக்கள்..நண்பனே
அன்புடன் இளங்கோவன்
http://elangovan68.blogspot.com
nice poem .. says practical life
கவிதையும் குழந்தையும் அழகு
விழியன்… என் நண்பன்.
JSaraboji.
நலமே இளங்கோவன் ஐயா.அமீரகம் என்போது சென்றீர்கள். சென்ற இடமெல்லாம் உமக்கு சிறப்பு.
நன்றி நண்பர்களே!!
Really super Uma,
Great… Dhool kilapuriknga…
All the very Best.
Siva, Adambakkam.