Lift – கவிதை
2009 பெப்ரவரி 18
LIFT
இது பெரும்தொல்லை
வாகனத்தில் பின்னால் அமர
வழிதோரும் வீதியெங்கும் ஆட்கள்
கட்டைவிரலை உயர்த்தி உயர்த்தி
இது பெரும்தொல்லை
கட்டையாகவும் குட்டையாகவும்
வேட்டியுடனும் பள்ளியாடையுடனும்
வித வித மனிதர்கள்
நின்று ஏற்றிவிட்டாலோ
நிற்கும்வரை நில்லாது ஓசை
இது பெரும்தொல்லை
வாய்விட்டு திட்டியநேரம் பற்பல
இம்சை
டார்சர்
நடந்து போகவேண்டியது தானே
இது பெரும்தொல்லையென்றே நினைத்திருந்தேன்
அப்பா வீதியில் கட்டைவிரலை உயர்த்தி
போவோர் வருவோரை நிறுத்தி
வசை வாங்கியதை தூரத்தே காணும்வரை
- விழியன்(13/02/09)
சொல்ல வேண்டிய விஷயத்தை சும்மா நச்னு சொல்லியிருக்கிங்க
கலக்கல் விஷயன்.
Good one.
Nice one..!
Nidharsanam!
Wonderful…. Till we have/feel the pain we can not undertstand the impact of it.
Good one.
Dew
EVERYONE MUST HELP TO OTHERS.