அறிவியல் துணுக்குகள்

2009 மார்ச் 17
by vizhiyan

அறிவியல் துணுக்குகள்

1. பிளாஸ்டிக் உடைவதற்கு 500 ஆண்டுகள் ஆகின்றன.

2. உலகில் மிக கொடூரமான நில நடுக்கம் 1557ல் சீனாவில் நடந்தது. இதில் சுமார் 8 லட்சம் மக்கள் இறந்தனர்.

3.சூரியனிலிருந்து புறப்படும் ஒளி பூமியை அடைய 8 நிமிடம் 30 வினாடிகள் எடுக்கின்றது.

4.சராசரியாக ஒரு மனிதன் ஐந்து முறை சிரிக்கின்றான்.

5.ஆல்பிரட் நோபல் (நோபல் பரிசுகள் இவர் பெயரால் கொடுக்கப்படுகின்றன) 1866ஆம் ஆண்டு டைனமைட்டை கண்டுபிடித்தார்.

6.எபோலா என்னும் வைரஸ் தாக்கினால், ஐந்தில் நான்கு மனிதர்கள் இறந்துவிடுவார்கள்.

7.2010க்குள் கால்வாசி செடி இனங்கள் அழியும் அபாயம் உள்ளது.

8.உலகின் மிகச்சிறிய பறக்கும் பூச்சி,ஈயின் கண்ணைவிட சிறியது.

9.மிக வேகமாக விழும் மழைத்துளியின் வேகம் மணிக்கு 18 மைல்கள்.

10.பிற‌க்கும் 2000 குழ‌ந்தைக‌ளில் ஒரு குழ‌ந்தை ப‌ற்க‌ளுட‌ன் பிற‌க்கின்ற‌ன‌.

11.சில‌ வகை ச‌வுக்கு ம‌ர‌ங்க‌ள் ஒரு நாளைக்கு 3 அடி வ‌ள‌ர்கின்ற‌ன.

12.ச‌ராச‌ரியாக‌ ஒரு ம‌னித‌ன் 4850 வார்த்தைக‌ளை 24 ம‌ணி நேர‌த்தில் ப‌ய‌ன்ப‌டுத்துகின்றான்.

13.லியானார்டோ டார்வின்சி ஒரு கையில் எழுதிக்கொண்டே ம‌று கையில் வ‌ரையுவும் செய்வார்.

14. க‌ண்க‌ளை திற‌ந்துவைத்து தும்முவ‌து சாத்திய‌மில்லை

15. நாம் ப‌ய‌ன்ப‌டுத்தும் toothbrushக‌ளை க‌ழிவ‌றையில் இருந்து குறைந்த‌து ஆறு அடி த‌ள்ளி வைக்க‌ வேண்டுமென‌ ப‌ல்ம‌ருத்துவ‌ர்க‌ள் ப‌ரிந்துரைக்கின்றார்க‌ள்.

16.க‌ர‌ப்பான்பூச்சி த‌லையின்றி ப‌த்து நாள் வ‌ரை உயிர் வாழும்

17.விர‌ல்க‌ளில் ந‌க‌ங்க‌ள் வ‌ள‌ர்வ‌து இய‌ற்கை. அதில் ஆட்காட்டி விர‌லில் மிக‌ நிதான‌மாக‌வும், ந‌டுவிர‌லில் மிக‌ வேக‌மாக‌வும் வ‌ள‌ருமாம்.

18. நான்கு வய‌து குழ‌ந்தை நாளைக்கு நானூறு கேள்விக‌ள் கேட்கின்ற‌தாம்.

19. ஒவ்வொருவ‌ரின் கை ரேகையும் த‌னித்துவ‌மான‌து. அதே போல‌ தான் நா ரேகையும்

20. ப‌ன்றிக‌ள் தானாக‌ வான‌த்தை பார்ப்ப‌து சாத்திய‌மே இல்லை.

 

- விழியன்

4 பதில்கள் leave one →
  1. 2009 மார்ச் 17

    குழந்தைகளுக்காக எழுதுவதில் தனி சுகம் அடையும் நண்பர்களில் நீங்களும் ஒருவர்.

    வாழ்க வளமுடன் – என்றும் அன்புடன்,

    த.நெ.

  2. 2009 மார்ச் 19

    Good one uma.
    looking fwd next postings.

  3. 2009 மார்ச் 19

    Very Good

மறுமொழி இடுக

Note: You can use basic XHTML in your comments. Your email address will never be published.

Subscribe to this comment feed via RSS