ஈ(ர)ழத்துளிகள்
ஈ(ர)ழத்துளிகள்
பதுங்கியிரு இப்பதுகுழியில்
அப்பா வந்தாலும் வருவேன்
________________________________________
கணக்குப் பாடம்
ஒன்று
இரண்டு
மூனு
நாலு
அம்மா மொத்தம் நாலு குண்டுகள்
உன் மீது?
________________________________________
மழை வேண்டாமென வேண்டும்
விசித்திர மனிதர்கள் நாங்கள்..
குண்டுமழை வேண்டாமென வேண்டும்
மனிதர்கள் நாங்கள்.
சில சமயம் சந்தேகம் வலுக்கின்றது
நாங்கள் மனிதர்கள் தானா?
________________________________________
அப்பா எனக்கு
பேய் பூதம் பிசாசு என
வரைந்தேதும் காட்டியதில்லை
நேரில் நிறைய பார்த்ததுண்டு
________________________________________
இயலாமையின் உச்சத்தில்
வழிவதெல்லாம் மெளனம் தான்
அழுவதற்கும் சக்தியெல்லாம்
என்றோ போய்விட்டது
________________________________________
ஆற்றின் நிறமென்னவென கேட்டதற்கு
சிகப்பு என்கின்றான்.
என்னிடம் இனி கேள்வியில்லை.
- விழியன்
kanneer varavalaikum kanakkup paadam
we are shameless people…
வருத்தங்களும், கையறுநிலையும் மாறி மாறி கொல்கின்றன….
நிகழ்ந்ததை நினைத்து
வருத்தத்தை விட
நிகழப்போவதை நினைத்தே
மனம் வலி கொள்கிறது
அவர்கள் தமிழர்களென்று
தலைவர்கள் கூவுகிறார்கள்
அவர்கள் மனிதர்களென்று
யார் வாடுகிறார்
\\இயலாமையின் உச்சத்தில்
வழிவதெல்லாம் மெளனம் தான்
அழுவதற்கும் சக்தியெல்லாம்
என்றோ போய்விட்டது
\\
Too good.
6.5 kodi makkal vaazhum Thamizhnadu endru solvadharkku naa koosukiradhu….125 kodi makkal vaazhum India endru solvadharku en udambe koosukiradhu.