குழலியால்..(4)
2009 ஜூலை 1
அமுதப்பார்வை
தனித்துவிடப்பட்ட மாலைப்பொழுதில்
சந்தனம் தெளித்தாள் மகளவள்
துணியெடுத்து துடைத்தேன்
சத்தம்போடாமல் சுத்தமிட்டேன்
இல்லாள் அறை நுழைந்த சமயம்
“பார் நான் என்னெல்லாம் செய்கிறேன்”
பெருமிதத்தேன் என் செய்கைக்கு
பார்வையால் காட்டிய திசையில்
மலையளவு அழுக்குத் துணிகள்
–
விழியன்