துவ்வு – கவிதை
2009 அக்டோபர் 11
துவ்வு
தலை கனத்த மதியமொன்றில்
புத்தகம் கையில் வரப்பெற்றதும்
வாசல் கதவை தட்டினார் முதியவர்
புன்முறுவலுடன் அறையில் ஒன்றினார்
மெளனித்தே கடந்தன நிமிடங்கள்
சடாலென சட்டை பிடித்து உலுக்கி
சன்னலை கடந்து வெளியை வெறித்தார்
பகிராத என் மனதின் நினைவுகள்
நாணியபடி வெளியேற
மெல்ல தலை கோதினார்
திகைப்பு
கண்ணீர்
இன்முகம்
மாலை சூரியனை உண்டு முடிக்க
பளிச்சிட்ட மின்னலில் மறைந்தார்
கடைசி பக்கம் மின்னியது
அவரின் இளவயது புகைப்படத்துடன்
- விழியன்
what i smean by துவ்வு
துவ்வு – அனுபவி ;