விழியன் பக்கம் » கதை

பூக்கார செல்வி – சிறுகதை
பூக்கார செல்வி – சிறுகதை

சென்னை பரபரப்பிற்கு பஞ்சமில்லாத நகரம்.  யாருக்கும் நிற்காத மனிதர்கள்.  சில சமயம் சோம்பலாய் நாம் இருந்தாலும் மற்றவர்கள் சுறுசுறுப்புத் தொற்றிக் கொள்ளும்.  பல்லவன் பேருந்து மாநகரப் பேருந்திற்கு பெயர் மாறிவிட்டது.  பெயர் மட்டுமே மாற்றம், அதே தகரம் போன்ற வண்டிகள், ஏதாவது ஒரு இருக்கையாவது உடைந்திருக்கும், ஏதாவது கைப்பிடி காணமல் போயிருக்கும்.  இருக்கை சரியாக இருக்கின்றதா என்று தொட்ட பின்னரே அமர்ந்தான் சுரேன்.  கல்லூரியின் மூன்றாம் ஆண்டு தேர்வை முடித்து கிடைத்த ஒரு வாரத்தை சென்னையிலுள்ள தன் மாமா வீட்டில் கழிக்க வந்திருந்தான்.  போரூர் கோபால கிருஷ்ணண் தியேட்டர் பின்னால் தான் அவன் மாமாவின் வீடு.  பேருந்து பாண்டி பஜாரை நோக்கி விரைந்து கொண்டிருந்தது.  தன், பள்ளி தோழன் பாலாஜியை பாண்டி பஜார் வீதியில் “கிளோபஸ்” கடை முன்னர் சந்திப்பதாக திட்டம்.  தன்னுடைய கணிப்பொறி வகுப்புகளை முடித்துவிட்டு வருவதாக வாக்களித்திருந்தான் பாலாஜி.  சுரேன் வருடத்திற்கு ஒரு முறையாவது சென்னை வருவான். ஒரு வருடத்திற்கு முன்னர் பாண்டி பஜார் வந்திருந்தான். இப்போது மீண்டும்.

தொலைக்காட்சியில் நிமிடத்திற்கு ஒரு முறை வந்து நச்சரித்த/நச்சரிக்கும் விளம்பர கடைகளை நேரில் பார்வையிட்டான்.  வீடு திரும்ப என்ன பேருந்தை பிடிக்க வேண்டுமென மாமாவிடம் கேட்க மறந்தது நியாபகம் வந்தது. எத்தனை வழித்தடங்கள், எத்தனை பேருந்து எண்கள், எப்படித்தான் நினைவில் வைத்துக் கொண்டுள்ளார்களோ தெரியவில்லை.  தன் ஊரில் இரண்டு வழித்தடத்திற்கு இன்னும் குழம்புவான் எது எந்த வழி எண் என்று.  கடைகளை அன்னார்ந்து பார்த்துக் கொண்டே எங்கோ மோதினான்.  மோதியது செல்வி மீது.  செல்வி கீழே விழம் முன்னர் அவளை பிடித்தான் சுரேன்.  “நம் தன நம் தன என தாளம் வரும்” என்று பின்னிசை எழ வேண்டாம், செல்வி பத்து வயது குழந்தை.  பதினான்கு வயது வரை எல்லோரும் குழந்தைகள் தான்.  கழுத்திலே இருந்து தொங்கிய கயிறு, இடுப்பிலே பூக்கூடையை பிடித்திருந்தது.  மல்லிகை பூ கொஞ்சம் வாடிய நிலையில் இருந்தது.  கூடை மீது சின்ன கோணி துணி போட்டு, ஈரம் சொட்ட சொட்ட பூக்களை வாடாவிடாமல் வைத்திருந்தாள் செல்வி.

வெள்ளை நிறமா என்ற சந்தேகம் வருமளவிற்கு அழக்கேறியிருந்தது  அவள் சட்டை. நீல நிறத்தில் பாவாடை.  வருடா வருடம் இலவசமாக கிடைக்கும் பள்ளி சீருடை துணிகள் அவை.  நெற்றியில் காலையில் இட்ட சந்தனம், வேர்வை ஒழுகி, இருந்த அடையாளம் மட்டும் காட்டியது.  நல்ல வேளையாக பூக்கள் ஏதும் கீழே விழவில்லை, அதற்குள் தான் சுரேன் பிடித்துவிட்டானே. மூன்று நான்கு பேர் சூழ்ந்து விட்டனர்.  “சோமாறி ரோட்ல ஒழுங்கா போகமாட்டானே பேமானி” சுற்றி இருந்தவர்கள்.

“கொழந்தயோ பூவோ கீழ விழுந்தா நீயா துட்டு கொடுப்ப?”

“அத்தை, என் மேல தான் தப்பு, நான் தான் தடுக்கி விழுந்துட்டேன்.  அந்த அண்ணன் தான் புடிச்சாரு.  நீங்க வியாபரத்தை பாருங்க அத்தை.  அடப் போங்கண்ணே வேலைய பாருங்க” கூட்டத்தை விரட்டினாள் அந்த சிறுமி சுரேனை பார்த்து சின்னதாக புன்னகை.

ரோட்டோரத்தில் வித வித கடைகள். சகலமும் கிடைக்குமிடம்.  புத்தக  முதல் புத்தாடை வரை, வீட்டு சாமான்கள், விளையாட்டு பொம்மை, போர்வைகள், துணிமணிகள், செருப்பு முதற்கொண்டு சகலமும் இருந்தது.  பூமாலை தொடுத்து மாலை மாலையாக தொங்கியது.  எந்த தலைவர் கழுத்தில் விழப்போகிறதோ, இல்லை மறைந்தவர்களுக்கு மாலையாக எங்கே போகப் போகின்றதோ.  புத்தக கடையினில்  சில நேரம் கழித்தான் சுரேன்.  இன்னும் பாலாஜி வர முக்கால் மணியாவது ஆகும். செல்வி புத்தக கடையருகில் வந்தாள்.

“மன்னிசிடுங்க அண்ணே! பாக்காம இடுச்சிட்டேன்.  யாராவது ஏதாவது சொல்லியிருந்தா தப்பா நெனைச்சுகாதீங்க”

புத்தக கடை சோமு ”என்னாச்சு புள்ள” “ஒண்ணுமில்லைண்ணே”

“பூ வாங்கிக்கங்கண்ணே” என ஏக்கமாக பார்த்தாள் செல்வி

சுரேன் “இல்லம்மா வேண்டாம்”

நடக்க ஆரம்பித்தான்.  பின் தொடர்ந்தாள்.

“உங்க மனைவிக்கு வாங்கி கொடுங்கண்ணே, சந்தோஷப்படுவாங்க”

“இன்னும் கல்யாணம் ஆகலம்மா”

“அப்போ மனசுக்கு புடிச்சவங்களுக்கு வாங்கி தாங்க” மனதிற்கு பிடித்தவள்.  ராதாவின் பிம்பம் வந்து மறைந்தது.  மூர்ச்சையானான் அந்த இடத்திலேயே அவள் வாசம், ஸ்பரிசம்.

“ஹலோ, பிரதர்” நிஜத்திற்கு மீண்டும் வந்தான்.

“அப்படியாருமில்லைமா, இன்னும் சந்திக்கல”

“அட நான் அம்மாவுக்கோ, அக்கா தங்கச்சிக்கோ…” முடிப்பதற்குள் “எல்லாம் ஊர்ல இருக்காங்க”

“சரி, சாமிக்காச்சும் வாங்கி சுத்துங்களேன்”

“எனக்கு நம்பிக்கை இல்லை.  அதுவும் இல்லாம் இதுக்காக தேடி கோவிலுக்கு எல்லாம் போக முடியாது”. சாரி செல்வி.

தன் பெயரை கூப்பிட்டதும் சுரேன் மீது பாசம் பொங்கியது.  இதற்கு முன்னர் சந்தித்தது இல்லை பார்த்ததில்லை, பேசியதில்லை ஆனாலும் சுரேனுக்கு இவளிடம் பல வருடம் பேசிய, உறவாடிய சிநேகம் போல இருந்தது.

ஏய் சனியனை.  இங்க என்ன கதையடிச்சிட்டு இருக்க”.  எங்கிருந்து அவள் அத்தை வந்தாளென தெரியவில்லை.  சுரேன் உடலை சற்று திருப்பி டி-ஷட்டுகளை பார்த்தான், செல்வியை நோட்டம் விட்டே.

“அத்தே! இன்னிக்கு வீட்டுக்கு சீக்கிரம் போகணும். எழுத நிறைய இருக்கு.  பாடம் படிக்கணும்”.

“கழுதை, உன்னை பள்ளிக்கூடம் அனுப்பறதே, படாத பாடு படறேன்.  படிச்சு என்னத்த கிழிக்க போறியோ.  சரிசரி, இந்த கூடையில இருக்க பூவ வித்திட்டு ஊட்டுக்கு போ!  தம்பிக்கு காய்ச்சலடிக்குது நம்ம நாய்க்கர் கிட்ட காசு வாங்கியார்ரேன்.  காசு தரானோ இல்லையோ அந்த புண்ணியவான்”.

செல்வியை திட்டினாளா, பாசம் வைத்திருக்கிறாளா, சோகத்தை கொட்டினாளா, என்று குழம்பிபடியே சுரேன் அருகிலேயே நின்றிருந்தான்.

“ செல்வி, இங்க குளோபஸ் கடை எங்கிருங்கு”-சுரேன்.

குளோபஸ் எதிரே இருந்த டீக்கடையில் குடித்துக்கொண்டிருந்தான் சுரேன்.  சில நிமிடத்தில் செல்வி ஓடிவந்து டீக்கடைக்குள் ஓடினாள்.  தன் சட்டைக்குள் மறைத்து வைத்த புத்தகம் எடுத்து டீக்கடை முருகையனிடம் கொடுத்தாள்.  “மாமா, இதை மகேஷ் கிட்ட கொடுத்திருங்க, அவன் தமிழ் புக் கொடுத்தானா? நிறைய படிக்கணும் மாமா?”

“அந்த பையில் இருக்கு பாரு புள்ள”.  எடுத்துக்கொண்டு மீண்டும் ஓடினார் கடைவீதிக்கு.

“ரொம்ப சுறுசுறுப்பான பொண்ணு இல்ல”

“யாரு செல்வியையா சொல்றீங்களா?  அதுக்குள்ள தெரிஞ்சிடுச்ச அவள பத்தி”.

“மகேஷ், உங்க பையனா? ஒன்னா பாடிக்கறாங்களா செல்வியும் அவனும்? மாமான்னு கூப்பிடுதே சொந்தமா?”-அடுக்காய் கேள்விகள்.

என் புள்ள தான் மகேஷ்.  செல்வியும் அவனும் அஞ்சாங்கிலாஸ் படிக்கிறாங்க வேற வேற ஸ்கூல்.  இந்த கடையில தான் கிலாஸ் கழுவுவிட்டு இருந்தான் மகேஷ் போன வருஷம் வரைக்கும்.  இந்த பொண்ணு தான் என் கிட்ட சண்டை போட்டு அவனை ஸ்கூலுக்கு அனுப்ப சொன்னா.  படிச்சி என்  கஷ்டமெல்லாம் தீர்ப்பான்.

செல்வி எனக்கு சொந்தமில்லை தம்பி.  வயித்து சாப்பாட்டுக்கு திண்டாட்ற எல்லாரும் ஒரு இனம்.  சொந்தக்காரங்க தான்.  வந்தவர்களை கவனித்துக்கொண்டே செல்வியின் கதையினை சொன்னார் முருகையன்.

“அப்பன் குடிகாரன்.  ஒரு நாள் ரோட்டோரமா செத்துக் கிடந்தான்.  அவ அம்மாவுக்கும் என்ன நோயோ தெரியல பட்டுன்னு ஒரு மாசத்துக்கப்புறம் பின்னாடியே போய் சேர்ந்துட்டா.  அவ அப்பனோட தங்கச்சி மூக்காயி கிட்ட தான் வளருது செல்வி.  முக்காயி புருஷனும் எங்க போனான்னு தெரியல யாருக்கும்.  பூக்கடை வெச்சி பொழப்பு ஓடுது.  செல்வி, முக்காயி, அவன் பையன் முனு பேரு இருக்காங்க.  படிச்சே தீருவேன்னு ஒத்த கால்ல நின்னு பள்ளிக்கூடம் போகுது.  பள்ளிக்கூடம் விட்டதும் இங்க வந்து வியாபாரத்துக்கு ஒத்தாசையா இருக்கு.  லீவு நாள்ளையும் இங்க தான்.  பத்து வயசு தான் ஆகுது ஆனா படாதபாடு படுது.  மாமா, நான் படிச்சு டாக்டராவேன்னு சொல்லும், கேக்க நல்லா தான் இருக்கும். ஆனா இந்த பொண்ணு மனசு வெச்சா சாதிச்சிடும். ராவுல அவுங்க ஊட்ல கரண்ட் இல்ல, மகேசும் அவளும் எங்க குடிசையில தான் படிப்பாங்க”

சுரேன் கண்கள் குளமாயிருந்தது. தன்னை பற்றி யோசித்த் பார்த்தான். அப்பாவிடம் கல்லூரி செல்ல வண்டி வேண்டும், இல்லையெனில் போகவே மாட்டேன் என மிரட்டிய நாட்கள், தனி அறை வேண்டும் படிப்பதற்கு என்று முரண்டு பிடித்து மொட்டை மாடியில் அப்பா கடன் வாங்கி அறை கட்டிய நாட்கள், சுட்ட தோசை சரியில்லையென காசு வாங்கி ஓட்டலுக்கு சென்ற தினங்கள், இன்னும் என்னென்னமோ எண்ணங்கள் தன்னையும் செல்வியின் நிலையினையும் ஒப்பிட்டு பார்த்துக்கொண்டான். ஒப்பிடுதல் பல நேரங்களில் சரியில்லை தான். ஆயினும் சில நேரம் நம்மையும் தாண்டி ஒப்பிட செய்வதே மனித இயல்பு. வெட்கமாய் இருந்தது அவனுக்கு. மனது ஏதோ செய்தது. குமட்டலாகவும், தொண்டை வரண்டது போன்றும் இருந்தது.

சற்று நேரத்திற்கெல்லாம் பாலாஜி வந்து சேர்ந்தான். டீயும் ஒரு சிகிரெட்டும் வாங்கினான். பற்ற வைத்தான்.

“என்னடா இது புதுசா? “

“சாமியார் இன்னும் மாறலையா? தேர்டு இயர் போயிட்ட இன்னும் தம்மு கூட இல்லையா? என்னாடா வாழ்கை வாழற..”

அது கிண்டலும் கேலியுமாக. தொடர்ந்து பேசிக்கொண்டே இருந்தாலும் சுரேனின் மனம் செல்வியை விட்டு விலகவில்லை.

“என்னடா ஒரு மாதிரி இருக்க மாமா..வீட்ல ஏதாச்சும் பிரச்சனையா?”

“கையில எவ்வளவு காசிருக்குடா?”

“நான் ஒன்னு கேட்டா நீ ஒன்னு கேக்குற. ஏன் திடீர்னு? ரெண்டு நூறு ரூபா நோட்டு இருக்கு..”

சட்டைபையில் கைவிட்டு தாள்களை எடுத்தான். கடைவீதிக்குள் சென்று செல்வியை தேடிப்பிடித்தான். பார்த்ததும் புன்னகை பூத்தாள். இத்தனை பூகம்பத்திற்குள்ளும் என்ன சாந்தம். படித்துவிட்டோம் என்ற கர்வம் தலையில் இருந்து வேகமாக இறங்கியது. படிக்க வேண்டிய நிறைய இருக்கும் மனிதர்களிடம் இருந்து.

“செல்வி, எல்லா பூவையும் என் கிட்ட தா..”

“என்னண்ணே கோவில் கண்டுபுடிச்சிட்டீங்களா?”

அவளிடம் இரு நூறு ரூபாய் கொடுத்துவிட்டு ‘சில்லரை எல்லாம் வேணாம் செல்வி, மீதிய நீயே வெச்சுக்க, நோட்டோ படிப்பு செலவுக்கோ வெச்சிக்க. நல்லா படி. என்னால இப்போதைக்கு இது தான் முடிச்சது. உனக்கும் புரியுதான்னு தெரியல செல்வி, எங்கயோ போயிட்டு இருந்தவனை ஓங்கி அடிச்சி நீ போகவேண்டிய இது இல்லைன்னு உன் புன்னகை சொல்லிச்சு. என்ன செய்ய போறேன்னு இப்போதைக்கு சொல்ல முடியல, ஆனா நிச்சயம் செய்வேன். திரும்ப நான் இங்க வந்தா உன்னை பெரிய ஆளா பாக்கனும் செல்வி..”

அந்த சின்ன பெண் தன் கண்ணீரை பார்ப்பது முறையல்ல என்று வெட்கப்பட்டு, அவள் முகம் பாராமல் திரும்பி நடந்தான் டீக்கடைக்கு.

சுரேன் பாலாஜியிடம் “அக்காகிட்ட பூவை கொடுடா..”

“இவ்வளவா? எதுக்குடா? லூசாடா நீ?”

செல்வி அத்தையிடம் “ அத்தை, இந்தாங்க தம்பி மருந்து செலவுக்கு காசு “

- விழியன்

அன்பு – குறுங்க‌தை
அன்பு – குறுங்க‌தை

நான் ஒரு செவிலி.அது ப‌ர‌ப‌ர‌ப்பான‌ காலைப்பொழுது.ம‌ணி 8.30. என்ப‌து வ‌ய‌து ம‌திக்க‌த்த‌க்க‌ வ‌ய‌தான‌ பெரிய‌வ‌ர் ஒருவ‌ர் த‌ன் க‌ட்டைவிர‌லில் இருக்கும் தைய‌ல்க‌ளை பிரிக்க‌ வ‌ந்திருந்தார்.தான் அவ‌ச‌ர‌த்தில் உள்ள‌தாக‌வும், 9.00ம‌ணிக்கு முக்கிய‌ ப‌ணி இருப்ப‌தாக‌ தெரிவித்தார். அவ‌ர‌து அவ‌ச‌ர‌த்தை க‌ண்க‌ளில் உண‌ர்ந்தும் வரிசையில்  அம‌ர்த்தினேன்.எப்ப‌டியும் ம‌ருத்துவ‌ர் பார்க்க‌ ஒரு ம‌ணியேனும் ஆகும். அவ‌ர் த‌ன் கைக‌டிகார‌த்தை அடிக்கடி பார்த்துக்கொண்டே இருந்தார்.

நான் அவ‌ரிட‌ம் சென்று அவ‌ரின் காய‌த்தை பார்வையிட்டேன். ஆறிப்போய் இருந்த‌து.ம‌ருத்துவ‌ர் ஒருவ‌ரிட‌ம் ஆலோசித்து, தைய‌ல்க‌ளை பிரித்துவிட்டு மீண்டும் சாதார‌ண‌ க‌ட்டுக‌ளை போட‌ ஆர‌ம்பித்தேன்.இப்ப‌டி செய்யும் போதே அவ‌ரிட‌ம் பேச்சுகொடுக்க‌லானேன்.

“என்ன‌ காலையில் அவ‌ச‌ர‌ம், வேறு ஏதேனும் முக்கிய‌ ந‌ப‌ரை ச‌ந்திக்க‌னுமா” என்றேன்.

இல்லை, தான் வேறு ம‌ருத்துவ‌ம‌னைக்கு சென்று த‌ன் ம‌னைவியுட‌ன் காலை உண‌வு உண்ணவேண்டும் என்றார்.

விசாரித்த‌தில் த‌ன் ம‌னைவிக்கு தீவிர நோய்தாக்கி க‌ட‌ந்த ஐந்து வ‌ருட‌மாக மருத்துவமனையில் இருப்ப‌து தெரிய‌வ‌ந்த‌து.பேசிய‌ப‌டியே க‌ட்டு போட்டு முடித்தேன்.

“தாம‌த‌மாகிவிட்ட‌தா? ம‌னைவி கோவித்து கொள்வார்க‌ளா” என‌ கேட்டேன்..சிரித்துக்கொண்டே..”அவ‌ள் கோவித்துக்கொள்ள‌ மாட்டாள்.அவ‌ளுக்கு என்னை யார் என்றே தெரியாது.எல்லாம் ம‌ற‌ந்துவிட்ட‌து. என்னை அவ‌ளுக்கு அடையாள‌ம் தெரிய‌வில்லை. ஐந்து வ‌ருட‌மாகின்ற‌து..” என்றார்.

ஆச்ச‌ரிய‌த்தில் உறைந்திருந்தேன்.”உங்க‌ளை யார் என்றே தெரியாத‌வ‌ரிட‌ம் தின‌மும் காலை உண‌வு உண்டு, நாள் முழுக்க‌ க‌ழிக்கின்றீர்க‌ளா?” என‌ வின‌வினேன்.

“அவ‌ளுக்கு தெரிய‌வில்லை என்றால் என்ன‌? என‌க்கு அவ‌ளை தெரியுமே..”

அவ‌ர் போன‌ பின்ன‌ர் உட‌ல் முழுக்க‌ ஏதோ செய்வ‌து போல‌ ஓர் உண‌ர்வு.உண்மையான‌ அன்பை த‌ரிசித்த‌ ஆன‌ந்த‌ம்.ம‌ன‌ம் க‌ன‌த்த‌தா இல்லை லேசாகி போன‌தா என‌ தெரிய‌வில்லை.

உண்மையான அன்பு எதையும் எதிர்பார்ப்பதில்லை. அது உடல் சம்பந்தப்பட்டதோ வசீகரமானதோ அல்ல.உண்மையான‌ அன்பு அனைத்தையும் ஏற்றுக்கொள்வ‌து இருப்ப‌தையும் இல்லாத‌தையும்.

(ம‌ட‌லில் வ‌ந்த‌தை மொழிபெய‌ர்த்துள்ளேன்)

-    விழிய‌ன்

அப்பப மெதுவா நடக்கனும்னு தோனுது
“அப்பப மெதுவா நடக்கனும்னு தோனுது”

இப்படி ஒரு நாள் அமைதியா கிடைக்காதான்னு ஏங்கிட்டே இருந்தப்ப தான் அந்த நாள் வந்துச்சு. பெங்களூர் போய் கிட்டத்தட்ட நாலு வருஷமாச்சு. வேலூர் வீட்ல ரொம்ப அலுப்பு தட்டியதால வீட்டை விட்டு கிளம்பி ஒரு பெரிய நடை போகலாம்னு கிளம்பிட்டேன். பஸ் நிறுத்தத்திற்கு வந்துட்டேன். எந்த பக்கம் போறதுன்னு குழப்பம் நிலவியது. காலேஜ் ரவுண்டானா நிறுத்தத்தில் இருந்தேன். சரி சில்க் மில் ஸ்டாப் வரைக்கும் நடந்து போகலாம்னு தோனுச்சு. வேலூரில் இருந்து காட்பாடி வரும் போது பாலாறு பாலம், குமரன் மருத்துவமனை, விருதம்பட்டு, சில்க் மில், கல்யாண மண்டபம், போலிஸ் ஸ்டேஷன், E.B ஸ்டாப், காலேஜ் ரவுண்டானா, ஓடைபிள்ளையார் கோவில், சித்தூர் பஸ் ஸ்டாப், ரயில்வே ஸ்டேஷன், காட்பாடி என வழித்தடம். நான் நிற்பது காலேஜ் ரவுண்டானா.

என்ன இருந்தாலும் நம்ம ஊர்ல நடக்கற சுகம் எங்க நடந்தாலும் வரல. அங்க இங்க பார்த்த முகம். பள்ளியில ஜூனிரியரா பார்த்த முகங்கள்ல மீசை, வீராப்பு, சிகிரெட் அப்படின்னு நிறைய மாற்றம். சர் சர்னு வண்டில வேற. இப்ப புதுசா செல்போன்.E.B. ஸ்டாப்பிங் தாண்டி வந்துட்டேன். இடப்பக்கம் ஒரு முதியோர் இல்லம். புதுசா வந்திருக்கு போல. ஐஞ்சு நிமிஷம் அந்த போர்ட்டுல என்ன இருக்குன்னு படிச்சிட்டு இருந்தேன். உள்ளே போகலாம்னு ஒரு மனசு சொல்ல, வேண்டாம்னு இன்னொரு பக்கம் இழுத்துடுச்சு. சில துணிமனிகள் வெளியே காய்ஞ்சிட்டு இருந்தது. வெள்ளை கதர் சட்டைகள். காகங்கள் இரண்டு கத்திட்டு போச்சு. தூரத்துல பாட்டு கேட்டுச்சு. கால் அது பாட்டுக்கு அடுத்த அடி எடுத்து வெச்சிடுச்சு.

வலப்பக்கமா போஸ்ட் ஆபிஸ். இது மட்டும் தான் நிறைய மாறவில்லை இத்தனை ஆண்டுகள்ல. தோற்றத்தை தான் சொல்றேன். பள்ளி முடிந்த நாட்கள்ல சில கடித நண்பர்கள் இருந்தாங்க. அடிக்கடி லெட்டர் போட வருவேன். அம்மா டெலிபோன் பில் கட்ட அனுப்புவாங்க, ஏதாச்சும் காரணம் சொல்லி தப்பிச்சிடுவேன். புது வருடம், பொங்கல், தீபாவளி வந்தா கட்டு கட்டா கடிதம், வாழ்த்து அட்டை (நானே செய்வது) போட வருவேன். அப்பா எப்பவாச்சு ஸ்டேம்ப் வாங்க அனுப்புவார்.நானும் நிறைய வாங்குவேன். லெட்டர் போட்றது இருக்கே அது தனி சொகம். அது ஒரு வகையான சந்தோஷம். எழுதி வெச்சிருந்த முகவரி எல்லாம் எங்க போச்சுன்னு தெரியல. அந்த லெட்டர் போட்ற பழக்கமும் எங்க போச்சுன்னு தெரியல. பத்து வருஷமாச்சு. அப்ப வந்த லெட்டர் எல்லாம் எங்க வெச்சேன்? எங்கயோ பத்திரமா தான் இருக்கும். முகவரிங்க கூட எங்க போச்சுன்னு தெரியல. அந்த நண்பர்களும் காணாம தான் போயிட்டாங்க. வீட்டுக்கு போனது அந்த கடிதங்கள், வந்த அட்டைகளை எல்லாம் தேடனும். போஸ்ட் ஆபிஸ்ல நிறைய மரங்கள் இருந்துச்சு, இப்ப கம்மியாயிடுச்சு. காரணத்தை ஆராய மனசு போகல..விருப்பம்மில்ல.

எனக்கு முன்னால வயசானவர் வேகமா நடந்து போறார். என்ன உற்சாகம். அப்பாடி. கையை வீசிகிட்டு சிரிச்ச முகத்தோட. மனசுக்கு எந்த கவலையும் இல்லையா இவருக்கு? அப்படியும் மனுசங்க இருக்காங்கலா என்ன? வேலைக்கு போன நாலு வருஷத்துல நமக்கு அலுத்து போச்சோ? இல்லை இன்னும் வாழ்க்கைய சரியா புரிஞ்சிக்கலையா? யோசனையில் அவரை கோட்டை விட்டுட்டேன். தூரத்தில புள்ளியா தெரிஞ்சார்.

டான்பாஸ்கோ விளையாட்டு அரங்கம். இப்ப தான் காம்பெளண்ட் எல்லாம் போட்டிருக்காங்க.முன்ன வெறும் வேலி தான். ரோட்டில நடக்கும் போதும் கடக்கும் போது விளையாட்றது நல்லா தெரியும். நுழைவு வாசல்ல நிறைய சைக்கிள் இருந்தது. உள்ள போய் ஒரு ரவுண்ட் வரலாம்னு நெனச்சேன். இல்ல உள்ள போறதுக்கு ஏதாச்சும் அனுமதி வாங்கனுமா? உள்ளாற போயிட்டேன். இரண்டு அணிகள் கால்பந்து விளையாடிட்டு இருந்தாங்க. பயிற்சி தான். சுமார் இருபத்தி எட்டு போர் அந்த அரங்கத்தில் இருந்தார்கள். “மாஸ்டர் மாஸ்டர் டிபண்ட் பண்ணுங்க” “முத்தண்ணா தூக்கிடுங்க” “பாஸ்கர் முன்ன போ” “விடு விடு”..”பாஸ் ஹியர்” விசில் சத்தம். பந்து மேலே பறந்தது. கீழே வரும் போது பந்தை தடுத்தது மணீஷ் (என் பள்ளியில் விளையாட்டு சேம்பியன்). ஆடு களத்தில கமலேஷ், விஷ்னு, சரவணன், வினோத் (எல்லோரும் பள்ளி தோழர்கள்). அடப்பாவிங்களா பள்ளி உடையில சின்ன பசங்களா இருக்கானுங்க? அய்யோ அந்த போஸ்ட் பக்கத்துல “டேய் என்னையும் சேத்துங்கங்கடா”ன்னு நான் தான் அழுதுட்டு நிக்கறேன். ச்சே அப்படியே சின்ன வயசுக்கு போயிட்டேன். நினைவுகளுக்கு தான் எத்தனை வேகம் பாருங்களேன்.

மரத்தின் கீழே திண்ணை போன்ற அமைப்பு. காம்பெளண்ட் ஒட்டினாற் போல இருந்தது. அமர்ந்தேன். சின்ன வயதில் பள்ளியில் இருந்து போது எங்கள் பள்ளிக்கு என பெரிய விளையாட்டு அரங்கம் ஏதும் இல்லை. ஏதேனும் விழாக்கள் என்றால் டான்பாஸ்கோ மைதானத்தில் தான் நடைபெறும். நடனம், விளையாட்டு விழா போட்டிகள் எல்லாம் இங்கே தான். இரண்டு முறை நடனம் ஆடி இருக்கேன். பள்ளியில் இருந்து சாரை சாரையாக வரிசையில் வருவோம்.முதலும் கடைசியுமாக மூன்று பேர் கொண்ட குண்டெரிதல் போட்டியில் கஷ்டப்பட்டு மூன்றாம் பரிசு பெற்றேன். இது தான் விளையாடி வாங்கின ஒரே பரிசு.

டப்புன்னு ஒரு சத்தம். பந்து என்னருகே வந்து விழுந்தது. “சார் பாஸ் ..” எழுந்து எட்டி விட்டேன். பறந்து போனது பந்து. ஏதோ நிறைய வெற்றி பெற்றத் போல இருந்தது. என்ன சொல்வது..ஆங்..பீலிங்ஸ். அப்படியே எழுந்து நடந்து வெளியே வந்தேன். தெம்பாக வேகமாக நடந்தது கால்கள். விருதம்பட்டு காவல் நிலையம் வலப்பக்கத்தில் இருந்தது. காவல் நிலையம் பார்த்த உடனே வேகம் கூடியது. பயம் தான். பாஸ்போர்ட் விசாரணைக்காக ஒரே ஒரு முறை உள்ளே போய் வந்தேன். தபால் அட்டை ஒன்று வந்தது “Come to Passport Enquiry 25-12-2001”. தம்பி ஒரே ஒரு கொயர் பேப்பர் வாங்கி தந்துட்டு போங்க” என்று காக்கி உடையில் இருந்தவர் கூறினார். சினிமா அத்தனை பயத்தை கிளப்பிவிட்டதா என்று தெரியவில்லை.

புதுசா நிறைய கட்டிடங்கள் இந்த சாலையில் நிறை வந்துவிட்டு இருக்கின்றது. சின்ன மருத்துவமனை, பன்னாட்டு நிறுவனத்தின் கிளை என புதிய கடைகள். சில வீடுகளில் அடர்த்தியான செடிகள். காற்றில் ஆடிக்கொண்டே இருந்தது திடீர்னு குழந்தை அழும் சத்தம் கேட்டது, கார் ஒன்று நின்றுகொண்டு இருந்தது ஒரு வீட்டின் வாசலில் பிரியா விடை கொடுத்தபடி அந்த வீட்டுவாசிகள். கணவன்,மனைவி குழந்தை வாசலில். கார் கதவை திறந்தபடி ஒரு இளைஞர், கையில் குழந்தையுடன் ஒரு இளம்பெண். அந்த கையில் இருந்த குழந்தை தான் சத்தம் போட்டுக்கொண்டு இருந்தது.”அக்கா இங்க தான் இருப்பாங்க. நாம அடுத்த வாரம் வரலாம். டாட்டா சொல்லு” அழுகை நிற்கவே இல்லை. விட்டால் வாசலில் இருந்த குழந்தையும் அழுதுவிடும் நிலைமை. அழுகுரல் நின்றது. “டாட்டா அக்கா,பை ஆண்டி”. கார் மெதுவாக நகர்ந்தது. பாவம், அங்கிளுக்கு ஏன் பை செல்லவில்லை என வேண்டாத கேள்வி எழுந்து சிரிப்பை அடக்கி நடந்தேன்.

தெரிந்த உருவம் கண்ணில் பட்டது. ஆமாம் அவரே தான். வேதியல் (தமிழில் கெமிஸ்டிரி) டியூசன் வாத்தியார். பன்னிரெண்டாம் வகுப்பின் போது ஈசல் போல மாணவர்கள் டியூசன் செண்டர்களில் தவம் கிடப்போம். பள்ளியிலும் கடுமையான பயிற்சி இருக்கும். ஆனாலும் வெளியே டியூசன் படித்தால் தான் சாத்தியம் என்று நினைத்ததுண்டு. எல்லாம் நினைப்பு மட்டும் தான். ஒரு பயம் தான். “ஹலோ சார். நல்லா இருக்கீங்களா?”

“என்னப்பா நல்லா இருக்கியா?”

“இருக்கேன் சார்…”

“எங்க வேலை பண்ற?பசங்கெல்லாம் என்ன பண்றாங்க?”

விசாரிப்புகள். வீட்டில் எல்லோர் பற்றியும் விசாரிப்புகள். அப்பாவிடம் அவருக்கு பழக்கம் உண்டு. அவரின் அடுத்த திட்டங்கள் என பேச்சு வளர்ந்தது. அவரிடம் படித்த மாணவர்களின் வளர்ச்சியில் தான் எத்தனை பெருமிதம், எத்தனை பரவசம் அவருக்கு. அவர் அருகாமையில் புத்தகத்தோடு பவ்வியமாக மாணவன் ஒருவன். அவன் கண்களில் ஆர்வம், வேட்கை இன்னும் நிறைய தெரிந்தது. “சரி சரி வரேன்” “ரொம்ப நன்றிபா. அவனவன் ரோட்ல பஸ்ல என்னைய பார்த்தா ஏதோ தெரியாதா ஆளுங்க பாக்கிற மாதிரி ஓடுவான். எங்களுக்கெல்லாம் நீங்க நல்லா இருக்கிறது தான்பா பெரிய டானிக்கே. நல்லா இரு”

நியாயமான உணர்வுகள் தான். முன்னர் சிறிய அறையில் டியூசன் நடத்தி வந்தவர் இப்பொழுது பெரிய வீட்டில் நடத்துகின்றார்.

கல்யாண மண்டபம் பஸ் ஸ்டாப் வந்தாச்சு. பிருந்தா கேப்னு ஒரு ஓட்டல் இருந்துச்சு. அந்த இடத்தில அதை காணல. இப்ப கல்லூரி நினைவுகள் வந்துடுச்சு. வருஷப்பிறப்பு ஒன்றிற்கு எங்களை பற்றி தெரியாமல் Buffet (unlimited) விருந்து  செஞ்சிருந்தான். மகனே விடிய விடிய வெட்டினோம். பேசி பேசி சோர்ந்து போய் மீண்டும் சாப்பிட்டோம். சிரிப்பு வெடி தான். மனசுல எந்த கவலையும் இல்லாம இருந்த காலம் அது. பசுமையான நினைவுகள்.

மனசுல இருந்த பாரம் கொறஞ்சது போல இருந்துச்சு. எதையோ தொலைச்சுட்டு வேற எதையோ தேடுற மாதிரி உணர்வு. கால் வலிச்சுது. வந்த காட்பாடி பஸ்ஸில ஏறிட்டேன். “வேகமான பஸ் ஓட்டத்தில் மெதுவாக நடந்து வந்த சுகம் ஏதும் கண்ணில் கூட படவில்லை” நான் அடிக்கடி கொஞ்சம் மெதுவா நடக்க பழகிக்கனும்…

- விழியன்

வானில் குள்ளன் – குள்ளனின் குட்டிக்கதைகள் – 2
வானில் குள்ளன் – குள்ளனின் குட்டிக்கதைகள் – 2

(சிறுவர்களுக்கான நாடோடி சிறுகதைகள்)

குள்ள மனிதனை பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள். ஆமாம் அவனே தான். கட்டைவிரல் அளவிற்கு மட்டுமே வளர்ந்த அவனை பற்றிய கதை தான் இது. குள்ளனுக்கு நெட்டையளுக்கும் திருமணமாகி மூன்று மாதம் ஆகின்றது. குள்ளன் எந்த வேலையும் செய்யவில்லை. அவன் மனைவி அவனை திட்டிக்கொண்டே இருந்தாள். அவள் வாழ்கை பாழாய் போனது என புலம்பினாள். காசு சம்பாதிக்காமல் வீட்டிற்கே வராதீர்கள் என மனைவி விரட்டிவிட்டாள்.

மனம் உடைந்த குள்ளன் தன் நிலத்திற்கு சென்று நெல்களை உலர்த்தினான்.நெல்களை உலர்த்திவிட்டு அருகே இருக்கும் கட்டிலில் உறங்க சென்றான். மதியம் தூங்கியவன் மறுநாள் காலை எழுந்தான். எழுந்தவனுக்கு அதிர்ச்சி. உலர்த்தியதில் பாதி நெல் நாசமாகி இருந்தது, மீதி காணாமல் போயிருந்தது. இரவு இந்திரலோகத்தில் இருந்து ஒரு வெள்ளை யானை வந்து நெல்களை நாசமாக்கிவிட்டிருந்தது. இது குள்ளனுக்கு தெரியவில்லை. யானையின் கால் தடங்களை பார்த்துவிட்டு ஏதோ உரல் தான் இந்த நாசவேலையை செய்தது என்று எண்ணி ஊரில் இருந்த அனைத்து உரல்களையும் கட்டிப்போட்டான்.

மறுநாளும் இதே போல நடந்தது. குள்ளன் குழம்பிவிட்டான்.யாரது இந்த வேலையை செய்வது என தீவிரமாக யோசித்து யோசித்து இரவு மீண்டும் வந்துவிட்டது. சரி இரவு தூங்காமல் விழித்திருக்க வேண்டும் என தீர்மானித்து விழித்து இருந்தான். அதிசயம். வானில் இருந்து பெரிய வெள்ளை யானை தரை இறங்கியது. யானையின் கழுத்தின் தங்க ஆபரணங்கள். அதன் மீது பளபளக்கும் போர்வை. நீண்ட தந்தம். ஒரு நிமிடம் அசையாமல் ஆச்சரியத்தில் நின்றான் குள்ளன். சமாளித்துக்கொண்டு யானையின் அருகே சென்றான். யானைக்கு தெரியாமல் அதன் வாலை பிடித்துக்கொண்டான். யானை நெல்களை சாப்பிட்டு வானில் பறந்தது. குள்ளனும் அதனுடன் பறந்து சென்றான்.

இந்திரலோகத்திற்கு சென்ற வெள்ளை யானை தன் இருப்பிடத்திற்கு சென்றது.குள்ளன் இறங்கி சுற்றி பார்த்தான். பெரிய பெரிய அறைகள். ஒவ்வொரு அறையிலும் தங்க கட்டிகள், வெள்ளி கட்டிகள் , ஆபரணங்கள் என ஜொலித்தது. தன்னால் முடிந்த அளவு தங்கத்தை எடுத்துக்கொண்டான். மறுநாள் வரை யானையின் பின்னாலே ஒளிந்துகொண்டான். மறுநாள் இரவும் யானை பூமிக்கு புறப்பட்டது. தன் நிலத்திற்கு வந்தபோது இறங்கிக்கொண்டான். இப்படியே அடிக்கடி நிறைய தங்கம் எடுத்துவந்தான்.

நெட்டையள் மிகவும் சந்தோஷப்பட்டாள். கணவன் கை நிறைய தங்கம் கொண்டு வரும் ரகசியத்தை குள்ளனிடம் கேட்டள். நீண்டநாட்களுக்கு பிறகு அவன் அந்த ரகசியத்தை கூறினான். மனிதர்களுக்கே உண்டான பேராசை நெட்டையளையும் பற்றிக்கொண்டது. அடுத்த நாள் இரவு தானும் வருவதாகவும், அவள் வந்தாள் நிறைய தங்கம், எடுத்துவரலாம். நிறைய ஆபரண போட்டு வரலாம். குள்ளன் நூறுமுறை சென்று வருவதும் அவள் ஒரு முறை வருவதும் ஒன்று என்றாள்.ம்ம் சரி சரி என்றான் குள்ளன்.

மறுநாள் நெல் காயவைக்கப்பட்டது. வெள்ளை யானை வானிலிருந்து பறந்துவந்தது. நெட்டையள் வாயை பிளந்தாள். அதன் அழகை கண்டு. குள்ளனின் யோசனைப்படி யானை பறக்கும் போது குள்ளன் அதன் வாலினை பிடித்துக்கொள்வான், நெட்டையள் குள்ளனின் காலினை பிடித்துக்கொள்வாள். இந்திரலோகம் சென்றது இருவரும் பெரிய அறைகளுக்கு சென்று தங்கம் எடுத்து வரவேண்டும்.

அதன்படியே யானை பறக்கும் சமயம் குள்ளன் அதன் வாலை பற்றிக்கொள்ள குள்ளனின் காலினை நெட்டையள் பற்றிக்கொள்ள மூவரும் வானத்தில் பறந்தனர். பறந்து கொண்டு இருக்கும் போதே…”ஏங்க இன்னும் எவ்வளவு தூரம்..? ” என்றாள். “அரை மணி நேரத்தில் போய்விடலாம்..” என்றான். அமைதியாக இருக்காமல். ” ஏங்க அங்க என்ன என்ன இருக்குங்க…” ” எத்தனைமுறை சொல்வது, தங்கம், வைரம், வைடூர்யம், வெள்ளி எல்லாம்…” என்றான்.

“என்னங்க அங்க எவ்வளவு தங்கமுங்க இருக்கும்..”

“அடி செல்லமே. இவ்வளவு தங்கம் இருக்கும்…” என கைகளை அகல விரித்தான் குள்ளன். பறந்து கொண்டு இருந்தது ஒன்று மட்டும் தான். விழுந்துகொண்டிருந்தது குள்ளனும் அவன் மனைவியும். தொப்பென அந்த யானை போட்டுச்சென்ற சாணத்தில் விழுந்து உயிர் தப்பினர்.

இந்த சம்பவம் பிறகு யானை திரும்ப வரவே இல்லை. அதுவரை கிடைத்த தங்கம் வைத்து புதிய தொழில் தொடங்க யோசித்து வருகின்றான் குள்ளன். நீங்களும் உங்க யோசனையை சொல்லுங்க குள்ளனுக்கு.

- விழியன்

“தாம்தூம் சொறக்கா டூம்” – குள்ளனின் குட்டிக்கதைகள் – 1
“தாம்தூம் சொறக்கா டூம்” – குள்ளனின் குட்டிக்கதைகள் – 1

(சிறுவர்களுக்கான நாடோடி சிறுகதைகள்)

குள்ள மனிதனை பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள். ஆமாம் அவனே தான். கட்டைவிரல் அளவிற்கு மட்டுமே வளர்ந்த அவனை பற்றிய கதைகள் தான் குள்ளனின் லீலைகள்.

நீண்டவருடங்களுக்கு முன்னர் நடந்த கதைகள் இவை.

குள்ளன் படிப்பறிவு இல்லாதவன்.குள்ளன் ஒரு குறும்புக்காரன். குள்ளன் ஒரு சோம்பேறி.ஏதோ கோளாறினால் அவன் வளார்வதற்கு பதிலாக உடல் சிறுத்துக்கொண்டே சென்றான். சரி கதைக்கு வருவோம்.குள்ளனுக்கும் நெட்டையளுக்கும் திருமணமாகி மூன்று மாதம் ஆகின்றது. குள்ளன் எந்த வேலையும் செய்யவில்லை. தினமும் வீட்டில் திட்டு தான்.

குள்ளனுக்கு கோழிக்கறி என்றால் கொள்ளை பிரியம். அவன் அம்மாவிற்கு கோழிக்கறி சமைக்க தெரியாதலால் அவன் இதுவரை கோழிக்கறி குழம்பை சாப்பிட்டதே இல்லை. ஆனால் அதன் ருசியினைபற்றி நண்பர்கள் சொல்ல கேட்டு இருக்கின்றான். திருமணம் நடந்ததும் ஒரு நாள் தன் நெட்டை மனைவியிடம் கோழி வாங்கி வந்து, கோழிக்கறி குழம்பு செய்து வைக்க சொன்னான். தன் நண்பர்களிடம் சென்று இன்று கோழிக்கறி குழம்பு சாப்பிடப்போவதாக பெருமையாக பேசிவிட்டு வீடு வந்தான். வந்தவனுக்கு அதிர்ச்சி. தன் மனைவி சமைக்கும் போது குழம்பை ருசி பார்த்து இருக்கின்றாள், மிகவும் ருசித்ததால் அனைத்து குழம்பையும் அவளே சாப்பிட்டுவிட்டாள். குள்ளனுக்கு கோபம் வந்ததுவிட்டது. என்ன செய்வது என்றே தெரியவில்லை. வீட்டில் உள்ள பொருட்கள் அனைத்தையும் போட்டு உடைத்தான். யார் சொல்லியும் கேட்கவில்லை.அடங்கவில்லை.

கோபத்துடன் வீட்டைவிட்டு வெளியே வந்தான். வழியில் ஒரு முனிவரை சந்தித்தான். கோவமுடன் இருந்த குள்ளனை சாந்தப்படுத்தினார். சமாதானம் செய்ய உனக்கு என்ன வரம் வேண்டும் என்று கேட்டார். அதற்கு குள்ளன், தான் யாரை பார்த்து ஒரு மந்திரம் சொன்னாலும் அவர்கள் இறந்துவிட வேண்டும். அப்படிப்பட்ட மந்திரத்தை எனக்கு சொல்லி கொடுங்கள் என்றான். வேதனையுற்ற முனிவர் சிறிது நேரம் யோசித்துவிட்டு குள்ளனின் காதில் அந்த மந்திரத்தை கூறினார். அந்த மந்திரம் தான் “தாம்தூம் சொறக்கா டூம்”.

மாலையே மீண்டும் கோழி வாங்கி மனைவியிடம் எடுத்து சென்றான். சொல்லிவிட்டு வாசலில் வந்து உறங்கினான். மனைவி மீண்டும் அதே போல செய்துவிட்டள். அனைத்து கோழி குழம்பையும் குடித்துவிட்டாள். உள்ளே சென்ற குள்ளனுக்கு கடும் கோபம். எதுவும் பேசாமல் நின்றுகொண்டு இருந்தாள் மனைவி. உடனே “தாம்தூம் சொறக்கா டூம்” என்று தன் மனைவியினை பார்த்து கூறினான். தன் மனைவியின் உயிர் அதை சொன்ன மாத்திரம் பிரிந்தது.

வாசலில் வந்து அமர்ந்தான். வழிப்போக்கர்கள் தெருவின் முனையில் உள்ள திருமண மண்டபத்தில் கோழிக்கறி விருந்து நடப்பதாக பேசிக்கொண்டு சென்றனர். குள்ளன் அங்கே விரைந்தான். மண்டப வாசலில் அவனை திருமணம் நடத்துவோர் மடக்கி அழைப்பிதழ் இருக்கின்றதா என்றனர். இல்லை என்றது அவனை விடவில்லை. அவன் தன் மந்திரத்தை பயன்படுத்தி மடக்கியவர்களை வீழ்த்தினான்.

மண்டபத்திற்குள் நுழைந்து அங்கிருந்த எல்லோரையும் பார்த்து தாம்தூம் சொறக்கா டூம் என்றது அனைவரும் விழுந்தனர். மணமக்களையும் குள்ளன் கொன்றான். சமையல்கட்டிற்கு சென்று சமையல் செய்திருந்தவர்களையும் கொன்றான். அண்டா முழுக்க இருந்த அனைத்து கோழிக்குழம்பையும் குடித்தான்.

அளவுக்கு மீறி உண்டுகொண்டே இருந்தான் குள்ளன். வயிறு பெருத்தது. அவனால் நடக்கமுடியவில்லை. மெல்ல மெல்ல நடந்து மீண்டும் ஒரு இறைச்சி துண்டை உண்டான். வாயினை திறக்கவில்லை. காக்கா ஏதேனும் கொத்தி சென்றுவிடும் அல்லவா. அவன் தொண்டைவரை உணவு இருந்தது. எப்படியோ கஷ்டப்பட்டு கண்ணாடி முன்னர் நின்றான். வயிற்றுவலி தாங்கவில்லை. கண்ணாடியில் அவனை பார்த்து “தாம்தூம் சொறக்கா டூம்” என்று சொல்லி அவனும் இறந்தான்.

எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டிருந்த முனிவர் இறந்த அனைவரையும் “ம்டூ காக்றசொ ம்தூம்தா” என்ற மந்திரம் மூலம் உயிர்பெறச்செய்தார். என்ன நடந்தது என்றே அனைவரும் மறந்துவிட்டு விட்ட இடத்திலிருந்து வாழ்கையினை தொடர்ந்தார்கள். அதன் பிறகு அந்த மந்திரத்தை முனிவரும் மறந்துவிட்டார் குள்ளனும் மறந்துவிட்டான். நீங்களும் மறந்துவிடுங்கள்.மறந்துகூட இதை நினைவில் வைத்துக்கொள்ளாதீர்கள்.

-விழியன்

இரவின் இருட்டில் – சிறுகதை
இரவின் இருட்டில் – சிறுகதை

மூன்று வருடம் இருக்கும். அந்த இரவின் ஒவ்வொரு நிகழ்வும் இப்போது நினைத்தாலும் கண்முன்னே விரிகின்றது. இரவு ஒரு மணிக்கு எனது இரயில். விடுமுறையில் ஊருக்கு சென்றிருந்த நான், அன்று இரவு அம்மா அப்பாவுடன் சண்டை போட்டிருந்தேன். மாதம் ஒரு முறை வீடு வரும் போதும் இப்படி தான் சாப்பிட வெறும் சாம்பார், ரசம் மட்டும் வைப்பீர்களா? இன்றாவது நல்ல சாப்பாடு செய்யக்கூடாதா என்று கத்தியிருந்தேன். என் சத்தத்தில் தம்பி பயந்திருந்தான். அம்மா, அப்பா யாரும் பேசவில்லை அந்த கூச்சலுக்கு பின்னர். அப்பா ஏற்கனவே நொறுங்கிபோயிருந்தார் ஏகப்பட்ட பிரச்சனைகளில். அம்மாவை அத்தனை சொல்லியும் நான் கிளம்பும் போது வந்து வழியனுப்பி வைத்துவிட்டே சென்றார்கள்.

“கிளம்பு, என்ன ஸ்டேஷன்ல விட்டுட்டுவா” என்றதும் தம்பி மறுப்பேதும் சொல்லாமல் லுங்கியில் இருந்து பேண்டுக்கு மாறி அப்பாவின் பழைய டி.வீ.ஸ் 50யினை வெளியில் தள்ளினான்.

“வரேன்மா..”

“எப்ப திரும்ப வர. போனது போன் பண்ணு சங்கர்..”

“ம்ம்ம்…”

தம்பி என்னை ஸ்டேஷனில் விடும்வரை ஏதும் பேச்சில்லை. இறங்கிய போது ஏதோ சொல்ல வாயெடுத்தான். அவனுக்கான தேவைகள் நிறைய இருக்கும். இருந்தும் “ட்ரெயின் வர வரைக்கும் இருக்கவா அண்ணா?” என்றான்.

“இல்லடா நான் பாத்துகறேன்.பனி நெறைய இருக்கு. நீ வீட்டுக்கு போ. கைல காசிருக்கா? “

“வேண்டண்ணா…”

சட்டை பையில் இரண்டு காந்தி சிரிக்கும் சின்ன நோட்டுகளை வைத்தேன்.அவன் போன திசையில் சிறிது நேரம் பார்த்துவிட்டு ரயில் எத்தனை மணிக்கு வருகின்றது என பார்க்க சென்றேன். அடடா தம்பியை இருக்க சொல்லி இருக்கலாம் என்று தோன்றியது. ஒரு மணி நேர கால தாமதம். புத்தக வாசிப்பு அன்றைய காலகட்டத்தில் எனக்கு புதிய விஷயம். புத்தகத்தின்பால் ஈர்க்கப்பட்ட ஆரம்பகாலம்.இரண்டு புத்தகங்கள் பையில் இருந்தது. ஒரு மணி நேரத்தை கடத்துவதா கடினம்.

இரவில் ரயில் நிலையம் நான் இன்றும் ரசிக்கும் விஷயங்களில் முக்கிய இடம் வகிக்கும். எப்போதும் நிற்கும் கூட்ஸ் வண்டிகள்.அடுத்த ரயிலுக்காக காத்திருக்கும் கேண்டீன் பையன்கள், பச்சை கொடியினை கையில் பிடித்தபடி வெள்ளை ஆடையில் ஓருவர். எல்லையில் போரிடும் மிலிட்டரி மனிதர் ஒருவர் நிலைய அதிகாரியிடம் சண்டையிட்டுக்கொண்டிருந்தார். நிறைய சாமான்கள் இருப்பதற்காக அதிகாரி அதிக பணம் கேட்டார் என்பதற்காக சண்டை இருக்கலாம் என்பது என் ஊகம். மெல்ல நடந்து சூடான காபியினை வாங்கி நிலையத்தின் கடைசிவரை நடக்கலானேன்.

நிலையத்தின் கடைசி விளக்கினை அடைந்த போது, எதிர்புறம் இருந்த ரயில்வே காவல் நிலையத்தில் ஏதோ பரபரப்பு. இரண்டு மூன்று தொப்பை ஆசாமிகள் வெளியே வந்தனர். அதே நேரத்தில் எதிர்புறம் ரயில் ஒன்று வந்தது. நின்றது. கிளம்பியது. அந்த தொப்பை ஆசாமிகள், ஒல்லியான தோகத்தில் இருக்கும் ஒருவனை பிடித்திருந்தனர். “எங்கடா எங்ககிட்டயே உன் கைவரிசைய காட்றியா” என்று லத்தியில் அடிவிழுந்தது. “சார். அடிக்கற வேலையெல்லாம் வேணாம்..” ஏதோ கல்லூரி தோழனிடம் பேசுவது போல சாதாரணமாக பேசினார் அவர். எப்படி இவர்களுக்கு இந்த ரயிலில் இந்த பெட்டியின் இப்படி ஒரு திருடன் வருகிறான் என தெரிந்தது? இவர்களுக்கு எல்லாம் தெரியுமோ? நான் யோசிப்பது கூட எங்கே கண்டுபிடித்திடுவார்களோ என்று நான் நழுவத்துவங்கினேன்.

அம்மாவின் நினைவு மீண்டும் வந்தது. அப்படி பேசி இருக்க கூடாதோ. அட நாம மாசத்திற்கு ஒருமுறை வருகிறோம், வெளியூருல இருக்கான் பையன் எப்படி சாப்பிடுறானோ, எங்க சாப்பிடுறானோ வீட்டுலயாவது நல்ல சாப்பாடு போடலாம்னு இருக்கா? ஆனாலும் அம்மா பாவம் தான். என்ன முப்பது நாள்ல ரெண்டு நாள் தான வரேன்.அது கூட செய்ய முடியாதா? சின்ன வயசில் இருந்தே எனக்கு புளிசாதம் என்றால் உயிர். அதும் அம்மா செய்தால் அருமையோ அருமை. வேலைக்கு சென்ற ஆரம்பத்தில் தூக்கு நிறைய புளி தொக்கு செய்து ஊருக்கு எடுத்து செல்வேன். அப்போது அறையில் சமைத்துக்கொண்டு இருந்தோம். வேலை அதிகமானதால் விட்டுவிட்டோம். அப்பளம், வத்தல் அது கூட தொட்டுக்க இல்லை இன்று. நான் சொல்லி தான் இதெல்லாம் தெரியனுமா? அம்மாவுக்கே இதெல்லாம் தெரியக்கூடாது? அம்மா மாலை எங்கோ வெளி சென்று வந்ததால் சோர்வாக இருந்தார்கள். அதனால செய்ய முடியாம போயிருக்கலாம். இரண்டு பக்கமும் மனம் மாறி மாறி பேசிக்கொண்டே போனது. கேண்டீன் எதிரே அமர இடம் இருந்தது.

திண்ணை போல வட்டமாக இருந்த அந்த இடத்தில் அமர்ந்தேன். மின்விசிறியின் சத்தம் மட்டும் சில சமயம் அதிகமாக கேட்டது. பையில் இருந்து புத்தகத்தினை எடுத்து படிக்க துவங்கினேன். தூரத்தில் நாயின் குரைச்சல். நாளைய வேலையின் எண்ணங்கள். ரயில் ஒரு மணி தாமதம் என்றால் சில வேலைகள் தடைபடும். அச்சோ, சவரம் செய்யவேண்டும் என நினைத்திருந்தேன், ஏற்கனவே நிறைய தாடி வளர்ந்துவிட்டு இருந்தது. மேலாளர் கடிந்து கொள்வார். வண்டி ஸ்டேஷனில் இருக்கு, பத்திரமாக இருக்குமா? போன முறை கொஞ்சம் பெட்ரோல் காணவில்லை.இந்த முறை கொஞ்சமாக இருந்த போது தான் விட்டுவைத்து வந்திருக்கிறேன். எப்படியும் காலை பெட்ரோல் பங்க் திறந்திருக்கும். புத்தகங்களில் பக்கங்கள் நகரவில்லை.

இன்னும் ரயில் வர அரைமணி நேரம் இருந்தது. கண் லேசாக அயர துவங்கியது. அப்போது கருத்த உருவம் என்னை நோக்கி வந்தது. என் தம்பி வயது இருக்கலாம். அல்லது ஒன்று இரண்டு வயது கூட குறைச்சல் இருக்கலாம். தம்பி கண்ணாடி அணிந்திருப்பான், இவன் கண்ணாடி அணியவில்லை. காலில் செருப்பு ஏதும் இல்லை. அடுத்த முறை தம்பிக்கு நல்ல செருப்பு வாங்கி வர வேண்டும், அல்லது  கடைக்கு அவனை கூட்டிக்கொண்டு வாங்கி தர வேண்டும். பாவம் ஹவாய் செருப்பு தான் பயன்படுத்துகிறேன். இவனுக்கு அது கூட வாங்கி தர ஆளில்லை போலும். நீட்டு முகம். வாரப்படாத தலை முடி. கருப்பு என்றால் அட்டை கருப்பெல்லாம் கிடையாது.

அவன் என்னை நோக்கி வருவது தெரிந்தது. என்னையே பார்த்துக்கொண்டு வந்தான். அந்த பகுதியில் அப்போது யாரும் இல்லை. அந்த மிலிட்டரி ஆளும் எப்போழுதோ சென்றுவிட்டார். அதிகாரி காணவில்லை. காவல் நிலையத்தில் அந்த ஆளை கவனிக்க தொப்பையர்கள் உள்ளே சென்றுவிட்டார்கள். கேண்டீன் ஆளும் அடுத்த ரயில் வரும் வரை உறங்க சென்றிருக்க வேண்டும். இவன் பார்வையே சரியில்லையே. இவன் திருடனாக இருக்க கூடும், என் கண்களை உறங்குவது போல மூடிக்கொள்கிறேன். நமக்கான தைரியம் எல்லாம் நம்மைவிட அடங்கி இருப்பவர்கள் இடத்தில் மட்டும் தானே இருக்கும்.

என் மிக அருகில் வந்துவிட்டான். நான் உறங்குகிறேனா என என்னை எட்டிப்பார்க்கிறான். கேண்டீனை நோக்கி திரும்புகிறான். என் மீது ஒரு பார்வை இருந்து கொண்டே இருந்தது. அங்கே குளிர்பானங்களை அடுக்கி வைத்திருந்த பெட்டிகள் மீது கைகள் போனது. காலி பாட்டில்கள் தான் இருந்தன. கல்லாப்பெட்டியில் கைவைக்க போகிறான், நான் உடனே அவனை பிடித்துவிடுவேன். கூச்சலிடுவேன். போலிஸ் காரர்கள் வந்துவிடுவார்கள், அல்லது கேண்டீன்கார்கள் வந்துவிடுவார்கள், இல்லை யாரேனும் வந்துவிடுவார்கள். இல்லை விட்டுவிடலாமா? என்னை அவன் அடித்துவிட்டால், போலிஸ் கேசு என்று ரயிலை விட்டுவிட்டால்…..ஒரு நாள் வேலை தடைபட்டுவிடும். மேலாளரிடம் திட்டு விழும். மீண்டும் வீட்டிற்கு இரவே சென்றுவிட வேண்டும். வேண்டாம் விட்டுவிடலாம்.

காலி பாட்டில் ஒன்றினை கையில் எடுத்தான். என்னை பார்த்தான். என் மண்டையை உடைக்கவா? அய்யோ !!.. சற்றே அவனை உன்னிப்பாக கவனிக்கிறேன்.அவன் பார்வையில் கொடூரம் ஏதும் தெரியவில்லை. சுற்றும் முற்றும் பார்த்தான். அந்த பாட்டிலை நேராக அவன் வாயருகில் எடுத்து சென்றான். யாரோ ஒரு புண்ணியவான் /புண்ணியவதி பாட்டிலில் கடைசி சொட்டு விட்டுவைத்திருக்கிறார்கள். அந்த ஒரு சொட்டு பானம், அவன் தொண்டை வழியே பயணித்தது மிகத்துள்ளியமாய் தெரிந்தது. எத்தனை நாளாச்சோ அவ்வழியே ஒரு குவளை சோறு சென்று . பசி எத்தனை கொடூரமானது. பாட்டிலை ஒரு உலுக்கு உலுக்கினான். அடுத்த பாட்டிலை எடுத்தான், அதற்கு மேல் ஏதும் தெரியவில்லை. கண் முன்னே குளம் தோன்றியிருந்தது.

நான் நினைத்திருந்தால் அவனுக்கு உதவி செய்திருக்கலாம். காசு ஏதேனும் கொடுத்திருக்கலாம், அதெல்லாம் பெரிய உதவியா தெரியவில்லை. அவன் வாங்கி இருப்பானா என்பது அடுத்த விஷயம். ஆனாலும் அந்த நொடியில் எதுவும் செய்ய முடியாமல் இருந்துவிட்டேன். அவன் சென்ற திசையினை பார்க்க கூட திராணி இல்லை. என்னையும் அவனையும் ஒரே நிமிடம் ஒப்பிட்டு பார்த்துக்கொண்டேன். இப்பொழுதெல்லாம் பசிக்கும் பொழுதெல்லாம் ஒரு சொட்டு பானம் அவன் தொண்டைக்குள் பயணிக்கும் காட்சி கண்ணில் வந்துபோகும்.

- விழியன்

கத்தியும் புத்தியும் – குறும்பட திரைக்கதை
“விழி வழி”  வழங்கும் “கத்தியும் புத்தியும்”

[இந்த  குறும்படத்தில் வரும் காட்சிகளும் கதாப்பாத்திரங்களும் கற்பனை  அல்ல.]

முதல் Frame : கணினியில் ஒருவர் www.tamilmatrimony.com என்று அடிக்கின்றார்.விரல்களை காண்பிக்கிறோம், திரையினை காண்பிக்கிறோம். கட்

அடுத்த Frame: “…திருமண மையம்”. அதற்குள் ஒருவர் நுழைகின்றார்.

அடுத்த Frame: கத்தையான தாள்களுடன் வெளியே வருகின்றார்.

: காகிதங்கள் ஒவ்வொன்றாக கிழிக்கப்படுகின்றது. வேகமாக தொலைபேசியில் எண் அடிக்கப்படுகின்றது

: ‘கல்யாண முடிச்சிடுச்சு..’ ..’ மாப்பிள்ளை அமெரிக்கா போகனும்..’..

‘ தற்போது உபயோகத்தில் இல்லை..’ ‘இல்ல சார் வெளிய குடுக்கல’… பின்னணி குரல்கள்.

அடுத்த Frame : அலைபேசி. “ஹலோ இன்னும் அஞ்சு நிமிஷத்துல அங்க இருக்கேன் சார்..”

பின்னணியில் ரம்மியமான இசை. இளைஞரும் வயதான ஒருவரும் பச்சையாக பூத்துக்குலுங்கும் பூங்கா ஒன்றில் சந்திக்கின்றார்கள். கைக்குலுக்கல். புன்னகை இரண்டு முகங்களிலும். பேசுகின்றார்கள். பின்னணி இசை வேகமாகின்றது. “உங்க ஜாதகத்தை தரீங்களா?”. இளைஞன் முகம் மாறுகின்றது. தாள் ஒன்றை நீட்டுகிறான். தருகிறான்.

“மூல நட்சத்திரமா?. அய்யோ பொண்ணோட அப்பாக்கு ஆபத்தாச்சே..ம்கும்..இது சரிவராது சார்.”..ஜங் என நிற்கின்றது்கின்றது இசை. நிசப்தம். கேமரா இளைஞனின் முகத்தையும் அந்த வயதானவர் முகத்தையும் மாறி மாறி காண்பிக்கின்றது. கட்.

அடுத்த Frame: கேமரா இளைஞனின் பின் மண்டையினை காட்டுகின்றது. “சொல்லுங்க சார்..இப்ப சொல்லுங்க. பொண்ணோட அப்பா கல்யாணத்தை பாக்கணுமா இல்லை இப்பவே மேல போகனுமா? சொல்லுங்க சார்…” கேமரா அப்படியே மேலே உயர்கின்றது. இளைஞன் வயதானவர் கழுத்தில் கத்தி வைத்துக்கொண்டு பேசிக்கொண்டு இருக்கிறார். வயதானவர் முகத்தில் சிரிப்பு.

கடைசி Frame: கருப்பான ஒரு குழிக்குள் இருந்து கேமரா Zoom Outடாகின்றது. நாதஸ்வரம். டும் டும் டும்..

தயாரிப்பாளர்கள் உடனே தேவை

கதை, திரைக்கதை, வசனம், இசை, கேமரா : விழியன்

உதவி: (இன்று பொன்விழா பிறந்தநாள் கொண்டாடும்) : கந்தா

எருமை வாசகம் – சிறுவர் கதை
எருமை வாசகம் – சிறுவர் கதை

முதன் முதலாக அதை கவனித்து சொன்னது சங்கர் தான் என்று நினைக்கிறேன். நாங்கள் பள்ளிக்கு செல்வதே தினம் தினம் சுவாரஸ்யமான விஷயம் தான். எங்கள் தெருவில் இருந்து சைக்கிளில் சென்றாலும், சுமார் ஆறு ஏழு பேர் ஒன்றாக சைக்கிள் தள்ளியபடி மெதுவாக நடந்து செல்வோம். தாமதமாகிவிட்டது என்றால் தான் சைக்கிளை ஓட்டி செல்வோம். அன்று சங்கர் தான் முதலில் பார்த்து..”அங்கபாருங்கடா எருமை மாட்ட”. எருமை மாடு என்பது எங்கள் பகுதிக்கு புதிதான ஒன்றில்லை. எங்கள் பகுதி நகரமும் அல்லாத கிராமமும் அல்லாத குடியிருப்பு பகுதி. அருகே இருக்கும் சுள்ளூர், நல்லாபுரம் கிராமங்களில் இருந்து ஏராளமான பசு மாடுகள், எருமைகள், ஆடுகள் எங்கள் பகுதிக்கு வரும்.

சங்கர் சுட்டிய திசையில் இருந்த எருமையின் மீது “நன்றே செய், அதை இன்றே செய்” என்று எழுதி இருந்தது. சைக்கிள்கள் நின்றது. மதி மிகவும் மெதுவாக தான் வாசிப்பான், “ந ன் றே..நன்றே செ ய் செய்..அ தை அதை இ ன் றே இன்றே செ ய் செய்…” வாசித்து முடிந்தான். யார் அதன் மீது எழுதி இருப்பார்கள் என்று எங்களுக்கு குழப்பம். மாடுகள் எங்கிருந்து வருகின்றது? மாடு மேய்ப்பவர்கள் என்று யாராவது இருப்பார்களா? சுற்றிலும் யாரையும் காணவில்லை. தூரத்தில் ஒரு வயதான பாட்டி மட்டும் இருந்தாள். மற்றொரு மாட்டினை மரம் ஒன்றில் கட்டிக்கொண்டு இருந்தாள். இந்த பாட்டியா எழுதி இருப்பாள்? எதை வைத்து எழுதி இருப்பாள் என்று எங்களுக்குள் விவாதம். “பல்பம் ” என்றான் சுருளி. “பாவம் அழுத்தி எழுதினா மாட்டுக்கு வலிக்கும் இல்லை” என்றான் மதி. “பாட்டி எந்த பள்ளிக்கூடத்தில் படித்தது?” என்றான் குள்ளமாக இருக்கும் சுந்தர். இப்படியாக வேறு வேறு கேள்விகள். அட பள்ளிக்கூடம் வந்துவிட்டது.

காலை இடைவேளையின் போது மீண்டும் இந்த விவாதம் தொடர்ந்தது. இன்னும் சில மாணவர்களும் சேர்ந்து கொண்டனர். அவர்களுக்கும் ஆச்சர்யம். “அது படித்த மாடாக இருக்கலாம். அதுவே எழுதிக்கொண்டு இருக்க கூடும்” என்றான் ஆதி. “எருமை மாடு என்ன கலர்டா?” என்ற அசோக்கினை எல்லோரும் ஒரு பார்வை பார்த்தனர். கப்சிப் என அடங்கிவிட்டான். கூட்டமாக இருந்ததை பார்த்த பி.டி மாஸ்டர் “என்னட அங்கே மாநாடு? வகுப்பிற்கு போங்க நேரமாச்சு” என்று விரட்டினார். இவருக்கு எப்படி தெரியும் இந்த எருமையின் விவகாரம்.

மதியம் சீக்கிரமாக உணவினை உண்டு முடித்துவிட்டு ஆறு சைக்கிள்களில் எங்கள் சகாக்கள் கூட்டம் அந்த எருமை மாட்டை பார்க்க கிளம்பியது. பள்ளியில் இருந்து அரை கிலோ மீட்டர் தொலைவில் தான் நாங்கள் அதை வரும்போது பார்த்தோம்.அதே இடத்திற்கு சொன்றோம். தற்போது எருமைகளின் கூட்டம் அதிகரித்து இருந்தது. அந்த படித்த எருமையை கண்டுபிடிப்பது சற்று சிரமமாக தான் இருந்தது. “ஆமாண்டா..அங்க பாரேன். எருமை மீது யாரோ எழுதி இருக்காங்க..” . அதுவரையில் இந்த சம்பவத்தை நம்பாத ஆதியின் கண்களுக்கு தான் முதலில் தெரிந்தது. எல்லோர் கண்களும் அந்த எருமை மீதே. அது யாரையும் சட்டை செய்து கொள்ளவில்லை. தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருந்தது. “அடுத்து தமிழ் மிஸ் க்ளாஸ்டா..வாங்க சீக்கிரம் பள்ளிக்கு போவோம்.”

எங்கள் வகுப்பு, அடுத்த வகுப்பு, குமார் வகுப்பு என்று எல்லா வகுப்புகளிலும் இந்த படித்த எருமை பற்றின விஷயம் பரவ ஆரம்பித்தது. அன்றைய நாள் முழுவது இதே பேச்சு தான். அன்று மாலை மீண்டும் வீட்டிற்கு செல்லும் வழியில் அந்த எருமை இருக்கின்றதா என்று பார்த்தோம். காணவே இல்லை. மாலை அதன் இருப்பிடத்திற்கு சென்று இருக்க வேண்டும்.

மறுநாள் காலை வழக்கமான நேரத்திற்கு முன்னரே கிளம்பி, சைக்கிளை மிதித்துக்கொண்டு அதே இடத்திற்கு வந்து சேர்ந்தோம். எங்களுக்கு முன்னரே சில மாணவர்கள் அங்கே இருந்தார்கள். இன்று “பெரியோரை வணங்கு” என்று எழுதி இருந்தது. நாட்பட தினமும் இந்த வாசகத்தை படிப்பது சுவாரஸ்யமாகிவிட்டது. யார் எழுதுவது, எப்படி எழுதுகின்றார்கள், யாருடைய மாடு, எப்படி வந்தது போன்ற பேச்சுக்கள் குறைந்து என்ன எழுதி இருக்கின்றதோ அதனை பற்றிய பேச்சுக்கள் துவங்கியது. பள்ளியின் தலைமை ஆசிரியர் அறை முன்னதாக பெரிய கரும் பலகை ஒன்று இருந்தது. வருடத்திற்கு இரண்டு முறை ஏதேனும் அறிவிப்பு எழுதி இருக்கும். ஒரு நாள் நான் எருமை மாட்டின் மீது இருந்த வாசகத்தினை அந்த கரும்பலகையில் எழுதினேன். தலைமை ஆசிரியர் பாராட்டினார். தினமும் எழுது என்றார். அந்த மாட்டின் மீது என்ன எழுதி இருக்குமோ அப்படியே எழுதினேன்.

யார் எழுதுவது பற்றியது என்பதனை ஆராய மனம் செல்லவில்லை. ஆனாலும் அதில் எழுதி இருக்கும் வாசகங்கள் எங்களில் வாழ்கையினை கொஞ்சம் கொஞ்சமாக மாற்றிக்கொண்டு வந்தது உண்மை தான்.வாசகங்களை படிப்பதோடு நிறுத்தாமல் முடிந்த அளவு எங்கள் வாழ்விலும் அதனை பின்பற்றினோம். வருடங்கள் கடந்து சென்றது. விடுமுறை நாட்களிலும் தவறாமல் அங்கு வந்து படித்துவிட்டு போகும் அளவிற்கு ஈர்த்துவிட்டது.

பள்ளி இறுதி ஆண்டு முடித்து மேல் படிப்பிற்கு வேறு ஊருக்கு சென்றுவிட்டேன். இப்போது கூட ஊருக்கு சென்றால் அந்த எருமை மாட்டினை தேடுவேன். ஆனால் அது அதன் பின்னர் கிடைக்கவே இல்லை. யார் எழுதினார்களோ தெரியாது ஆனால் அந்த வாசகங்கள் என் நெஞ்சிற்குள் ஆழமாக பதிந்து விட்டது. வாழ்கையை திசை திருப்பிவிட்டது.எருமை வாசகங்கள் அருமையான வாசகங்கள்

- விழியன்

வழிநடையில் – சிறுகதை
வழிநடையில் – சிறுகதை

“த்த..அந்த தெருவுக்கு போயிடு”  சலித்துக்கொண்டபடி பாண்டியம்மாள். கருத்த தோல். அறுபதைத் தாண்டிய சுருக்கங்கள்.கையிலே குச்சி.நாய்களை விரட்டுவதற்கா, ஊன்றுகோலாக பயன்படுத்தவா என்று தெரியவில்லை.கையில் சிமெண்ட் சாக்கு ப் பை. உள்ளே இரண்டு சீலைகள்.பாண்டியம்மாள் ரவிக்கை போட்டு முப்பது வருடமாச்சு. பாண்டியம்மாள் விரட்டியது அந்த ஊருக்கு புதிதாக வந்த இவள் போட்டியாளரை தான்.இவளுக்கு யார் அந்த போட்டியாளர்?

பவுன்குஞ்சு பாண்டியம்மாளைவிட இந்த பூவுலகை சில வருடம் அதிகமாக பார்த்தவர். இப்படியும் சொல்லலாம், பாண்டியம்மாவை விட சில வருடம் அதிகமாக இந்த உலகில் துன்பப்பட்டவர்.வெள்ளை சட்டை போட்டிருக்கிறார் என்றால், அதை சொல்பவரை மேலும் கீழும் வித்தியாசமாக பார்க்கும் இந்த உலகம்.அவர் வெள்ளை சட்டை போட்டிருந்தார்.இறந்த காலம்.எத்தனை சாலைகளை நெடுச்சாலைகளை க் கடந்து வந்திருப்பாரோ அத்தனை கோடுகள் நெற்றியில்.தற்கொலை என்னும் கொடூரத்திற்கு பலியாகி விழாமல் ஆந்திராவில் இருந்து தப்பித்து, நடந்து ஓடி வந்தவர்.

மாலையும் இரவும் சந்திக்கும் வேளையில் மீண்டும் சந்தித்துக்கொண்டனர் பவுனாரும், பாண்டியம்மாளும்.கூரைகள் என்னேரமும் விழும் அந்த பள்ளிக்கூட வாசலிலே நிகழ்ந்தது அந்த சந்திப்பு. மழைக்கு கூட பள்ளி யில் ஒதுங்க கூடாது என்ற வீறாப்பில் இருந்த பவுனார் இப்போதெல்லாம் பள்ளியில் தான் பாதி இரவுகளைக் கழிக்கின்றார்.ஊருக்கு ஊர் எது இல்லாமல் போனாலும் பள்ளிக்கூடங்கள் இருந்துவிடுகின்றது. அதில் ஆசிரியர்களும் நிர்வாகமும் ஒழுங்காக இருக்கின்றதா என்பது வேறு கதை.இந்த ஊர் புதிதாக இருந்ததால் பவுனாருக்கு யாரும் யாசகம் செய்யவில்லையா என்று தெரியவில்லை.ஓ..பவுனாரின் தொழிலும் பாண்டியம்மாளின் தொழிலும் ஒன்று தான் என குறிப்பிடாததற்கு மன்னிக்கவும்.இருவரும் வீட்டு வாசலில் தென்படும் தர்ம உள்ளங்களை நம்பியே வாழ்கின்றனர். கால் வயிறு கூட நிரம்பாத தின வலியில் வானத்தை வெறித்துக்கொண்டிருந்தார்.பாண்டியம்மாளிடம் கடைசியாக கிடைத்த அரை தட்டு சாதத்தை கருணையின் அடிப்படையில் பவுனாருக்கு சென்றது அவரின் அன்றைய லட்சியத்தை நிறைவேற்றியது. கடந்த கால வடுக்களை பாதி இரவில் பகிர்ந்து கொள்ள துவங்கினர், கொசுக்களி ன் பின்னிசையோடு.

மறுநாள் முதல் இருவரும் தத்தம் தெருக்களைப் பிரித்துக்கொண்டனர்.யார் யார் வீட்டில் உணவு கிடைக்கும், எந்த திருமண மண்டபத்தில் எந்த இடத்தில் மிச்சங்கள் கிடைக்கும் என விலாவாரியாக சொன்ன பாண்டியம்மாளின் சொற்படியே நடக்க துவங்கிவிட்டார் பவுனார்.தினமும் இப்படியே நாள் ஓடியது. மதிய வேளையும் , இரவும் எங்கேனும் சந்தித்திக்கொண்டு கிடைத்த உணவினை பற்றி பேசுவார்கள்.பழைய நினைவுகளை அசை போடுவார்கள். தெலுங்கும் தமிழும் கலந்த மொழியொன்றில் பேசுவார் பவுனார். வீட்டு வாசல் முன்னர் சென்று சத்தம் போட்டு ஏதும் கேட்க மாட்டார். அரை மணி நேரமானாலும் வாசலிலேயே காத்து கிடப்பார். ஏதோ அவருக்கு “அம்மா..ஐய்யா ” என்று அழைப்பதில் அத்தனை வருத்தம். அரை சாண்  வயிறு மட்டும் இல்லாமல் போயிருந்தால் எந்த கவலையும் இல்லாமல் வாழ்ந்திருக்கலாமோ என அடிக்கடி பவுனார் எண்ணுவதுண்டு.

மற்ற ஊர்களுக்கு சென்று வரலாம் என்ற யோசனை சரி எனப்பட்டது பாண்டியம்மாளுக்கு.பவுனார் ஒரே ஊரில் தங்கியது கிடையாது.ஏற்கனவே அவர் நாடோடி தான்.இந்த ஊரில் தான் அதிக நாட்கள் தங்கிவிட்டார்.பாண்டியம்மாளிடம் அடுத்த ஊருக்கு செல்லும் யோசனையை அவரே தெரிவித்தார். தயங்கியபடி தான் ஒத்துக்கொண்டாள். அங்கே சரிபடவில்லையெனில் மீண்டும் வந்துவிடலாம் என்ற முடிவி ன்  பேரில் கிளம்பினார்கள்.மூட்டை முடிச்சுகள் என்று பெரிதாக ஏதும் இல்லாததால் அடுத்த நாளே கிளம்பிவிட்டனர்.

தனியாக இருந்த பிள்ளையாருடன் இரவினை செலவிட்டனர்.இரண்டு ஊருக்கும் இடையே இருந்த அந்த கோவிலில் ஒரு இரவு தங்குவதற்கு எந்த தொந்தரவும் இல்லை அந்த கோவில் பூசாரி வரும் வரையில். “ச்சீ போ..” என்று விரட்டி விட்டார்.இரண்டு ஜிவன்கள் அடுத்த ஊரை அடைந்தது.

விடியற்காலை வேளையில் சூரியன் பூமியில் படரும் முன்னர் இவர்கள் ஊரை படர்ந்தனர். முந்தைய ஊரை விட சற்றே பெரிய ஊர். சின்ன நகரம் என்றும் கொள்ளலாம்.சற்றே அதிகமான அரசல்புரசல்,நெருக்கடி, அவசரம். யாரும் இவர்களை கவனித்தபாடாக இல்லை. எந்த வீட்டிலும் இவர்களுக்கு உணவும் கிடைக்கவில்லை.கோவில் ஒன்றில் கிடைத்த பிரசாதம் இரண்டு நாள் பிழைப்பை ஓட்டியது.

அலுத்து ஓய்ந்த மாலை வேளையில், பவுனாரும் பாண்டியம்மாளும் நகர உலா வந்து கொண்டிருந்தனர்.இந்த ஊருக்கு வந்ததில் இருந்தே பவுனாருக்கு சற்று உடல் சரியில்லாமல் போய்விட்டது.சரியாக உணவு கிடைக்காதது வேறு  இவரின் நிலையை மோசமாக்கியது.குறுக்கு சந்தில் ஒருவர் கருமையாக அமர்ந்து இருப்பாரே அவர் ஒரு வேட்டியை பரிசாக கொடுத்தார். என்ன தாராள குணம் அவருக்கு, ஏழு எட்டு ஓட்டைகள் வேட்டியில். இருந்தாலும் பழைய வேட்டியை விட, துணி என்று குறிப்பிட்டால் தகும், இந்த வேட்டி சிறப்பாக இருந்ததால், மாற்றி விட்டார்.பாண்டியம்மாளுக்கு ஏதாவது சீலை கிடைக்குமா என்று ஏக்கம் அதிகரித்துக்கொண்டே இருந்தது.

முணுமுணுக்க துவங்கிவிட்டாள். நான் என் ஊருக்கே போகிறேன். என் பிராணன் என் ஊரிலே போகட்டும் என சொல்ல துவங்கிவிட்டாள்.உடல்நிலை மோசமாகிக்கொண்டிருந்தது என்னவோ தலைவருக்கு.சில தினங்களில் சென்றுவிடலாம் என தீர்மானித்துவிட்டனர். முன்பிருந்த ஊரைப்போல வெறும் உணவு மட்டும் கேட்காமல், இங்கு கேட்காமலே சில்லரைகள் தேறிவிட்டது. திரும்ப செல்லும் போது பேருந்தில் போகலாம் என்றார் பவுனார்.இனி நடக்க முடியாது என நினைத்தாரோ என்னவோ. நகர உலா முடிக்கும் போது தான் அந்த சம்பவம் நிகழ்ந்தது.

வழக்கமாக தங்கும் இடத்தினை நோக்கி நடக்கின்றனர்.பழைய இரும்புக்கடையினை கடக்கின்றனர்.வங்கி வந்தது.வங்கி வாசலில் ஸ்தம்பித்து நின்றார் பவுனார். அங்கே நாற்பது வயதுமிக்க நபரை பார்த்து முகத்தை மறைக்கும் முயற்சியில் ஈடுபட்டார்.இருவர் பார்வையும் சந்தித்தபோது, இவர்களுக்குள் ஏதோ பந்தம் இருப்பதாக உணர்ந்தாள். பவுனாரால் நடக்க முடியவில்லை. கால்களை அசைக்க முயன்றும் நகர மறுத்தது. அந்த நபர் இவர் அருகில் வந்துவிட்டார். பாண்டியம்மாளை மேலும் கீழும் பார்த்தார்.ஏளனப்பார்வையில் துவங்கி சட்டென்று கண்களில் கண்ணீர் கரைபுரல்வதை மிக எளிதாக கண்டுபிடித்துவிடலாம்.எந்த வார்த்தையும் செலவிடப்படவில்லை.ஓரமாக இருந்த காரை தரையில் உட்கார்ந்து கொண்டார் பவுனார் நிற்கமுடியாமல். நடுவயதுக்காரர் நகரவில்லை சற்றே பதபதத்தார். தன் பையில் இருந்து சில நூறு ரூபாய் நோட்டுக்களை எடுத்து பவுனார் பையில் வைத்துவிட்டு திரும்பி கூட பார்க்காமல் வேகமாக நடந்து விரைந்தார்.

யார் அது என்று என்ன கேட்டாலும், எந்த பதிலும் கிடைக்கவில்லை. இரவு உணவும் வேண்டாம் என்று சொல்லிவிட்டார். கிடைப்பதே குதிரைக்கொம்பு.பவுனாரின் உடல் மோசமாகிவிட்டது.வழக்கமாக இவர்கள் தங்கும் பேருந்து நிலைய கட்டிடத்தில் தங்கியிருந்தனர். மேல் மூச்சும் கீழ்மூச்சும் வேகமாக அடித்தது. பாண்டியம்மாளுக்கு புரிந்து விட்டது இவை  கடைசி மூச்சுக்கள் என்று. இரவின் குளுமையும் இருட்டும் அதிகரிக்க அதிகரிக்க, பவுனாரின் இன்னல்களும் அதிகரித்தது.பாண்டியம்மாள் எந்த பதட்டமும் அடையவில்லை.விடியற்காலையில் பவுனாரில் பையில் இருந்த அந்த ரூபாய் நோட்டுக்களை எடுத்துக்கொண்டு, முதல் பேருந்திற்கு தனியாக கிளம்பினார். பவுனாரின் கடைசி மூச்சு கதிரவனை தரிசித்துவிட்டு,வாழ்வின் எந்த சூட்சுமத்தையும் புரிந்து கொள்ளாமல் பிரிந்தது.

விழியன்

Keywords: Short Story Tamil

கதைக்கு வெளியே ஒரு கதை
கதைக்கு வெளியே ஒரு கதை

“வெற்றிகரமாக முடிச்சிட்டேன்” என்ற தகவலை அவன் இணைய நண்பனுக்கு மடலிட்டான். வெற்றிகரமாக முடித்தது ஓரு குழந்தைகளுக்கான பக்க சிறுகதை. அதுவும் ஒரு மொழிபெயர்ப்பு சிறுகதை.இவனுக்கு ஒரு வித்தியாசமான பழக்கம். ஒவ்வொரு முறை மனதிற்கு நிறைவான செயலை செய்யும் போதும் தனக்கு தானே பரிசளித்துக்கொள்வான். அலுவலகத்தில் இருந்து வெளிவந்து எதிரே இருந்த கடைக்குள் புகுந்தான். 200 ரூபாய் மதிப்பில் பேனா வாங்கினான்.” நமக்கு தான் பேனாவை ஒரு வாரத்திற்கு மேல் வைத்திருக்க முடியாதே.பிறகென்ன 200 ரூபாய்க்கு பேனா?”

“அட பரவாயில்லை. இப்படியேச்சும் பத்திரமா வைத்துக்கொள்கிறேனா பார்க்கலாமே”

வீட்டிற்கு கிளம்பினான்.வழியில் போகும் போது தான், தன் மனைவி ஊரில் இல்லை என்பது நினைவிற்கு வந்தது. வெளியில் தான் சாப்பாடு.வீட்டின் அருகே ஒரு மெஸ் உள்ளது. பெங்களூரில் இப்படி ஒரு மெஸ் கல்யாணமாகாத காளையர்களுக்கு ஒரு வரப்பிரசாதம். போகும் போதே சாப்பிட்டு போய்விடலாம். கடையில் கூட்டம் இல்லை

மொத்தம் பத்து பேர் தான் உட்கார முடியும்.சின்ன இடமானாலும் சுத்தமாக இருந்தது. கல்யாணமாகாத காலத்தில் தினமும் இங்கு தான் சாப்பாடு அவனுக்கு

“வாங்க சார்.. என்ன அண்ணி ஊரில் இல்லையா”

“ஆமாம். நல்லா இருக்கியா?”

“எனக்கென்ன சார். சோக்கா இருக்கேன்”

“கடை சுத்தமா இருக்கு? நான் சொன்னப்ப கேட்டதேயில்ல?”

“அதுவா? ஊரில் இருந்து ஒரு பொடியன் வந்திருக்கான் சார். அவன் தான் சுத்தமா வைக்கிறான்.”

சாப்பிடும் போது இடையில் அந்த சிறுவன் தென்பட்டான். பத்து வயதிற்கு குறைவாக தான் இருக்க வேண்டும். நல்ல சுறுசுறுப்பு. கடையில் யாரும் இல்லை. இவன் மட்டும் தான் இருந்தான். கடைசி வாடிக்கையாளர்.திடீர் என்று யோசனை தோன்றியது. “ஏன் நீ எழுதிய கதையை இந்த சிறுவனிடம் படித்துக்காட்ட கூடாது”.

“அட நல்ல யோசனையா இருக்கே”

அந்த சிறுவனை அழைத்தான். மெஸ் வெளியே இருந்த மைதானத்தில் வெளிச்சமிருந்தது. ஒரு இருக்கையில் அமர்ந்தனர். சிறுவன் சொந்த ஊரை கேட்டான்.

“நான் ஒரு கதை சொல்லட்டுமா?”

“சொல்லுங்க சார்”

சிறுவர்களுக்கான கதை

மின்மினி….கண்மணி

கோடைகாலம் வந்தாச்சு. பள்ளிக்கு விடுமுறை விட்டாச்சு.

தாமரை ஊரில் இருந்து தன் அத்தை வீட்டிற்கு வந்திருந்தாள்.வருடா வருடம் வருவாள்.

இந்த முறை அத்தை வீட்டில் இரண்டு அழகான குட்டிப் பூனைகள் இருந்தன.

தாமரைக்கு பூனை என்றால் கொள்ளை ஆசை.

“அத்தை… இதன் பெயர்கள் என்ன?”

“மின்மினி, கண்மணி”

சொல்லிவிட்டு அத்தை சமையல் செய்ய ஆரம்பித்துவிட்டாள்.

மின்மினி வெள்ளை நிறம்.

கண்மனியும் வெள்ளை நிறம்.

“மாமா இதில் எதில் கண்மனி, எது மின்மினி?”

“கண்மணியின் வால் நீளமாக இருக்கும்..”

தன் பையில் இருந்த அளவுகோளை எடுத்தாள். வாலை அளந்து பார்த்தாள்

மின்மனியிலன் வால் நீளம் 30 செ,மீட்டர்.

கண்மணியின் வால் நீளம் 30 செ,மீட்டர்.

“அண்ணா, எப்படி கண்டுபிடிக்கிறீர்கள்?”

“மின்மினிக்கு மச்சம் இருக்கும் என்று நினைக்கிறேன்”

மின்மினிக்கு முதுகில் சின்ன மச்சம்.

கண்மணிக்கும் முதுகில் சின்ன மச்சம்.

ஏதாவது வழி இருக்கும் என்று எண்ணினாள்.

“மியாவ்.. மியாவ்” என்றாள்.

மின்மினியும் “மியாவ்.. மியாவ்” என்றது.

கண்மணியும் “மியாவ்.. மியாவ்” என்றது.

தாமரை அவற்றின் கண்களை உற்றுப் பார்த்தாள்.

மின்மினியின் கண் இளம்பச்சை நிறத்தில் இருந்தது.

கண்மணியின் கண்ணும் இளம்பச்சை நிறத்தில் இருந்தது.

தன் அருகே இருந்த பூனையிடம்

“நீ யாரு?”

“நான் மின்மினி. அவன் கண்மனி.” பூனை பதில் சொல்லியது “நீ என்னிடம் அல்லவா கேட்டிருக்க வேண்டும்?”

“ஹலோ மின்மினி!!! ஹலோ கண்மணி”

மூவரும் விளையாட ஆரம்பித்தனர்.

கோடை விடுமுறை முழுதும்..

“என்ன தம்பி கதை புரியுதா?” சத்தமேதுல் இல்லை

“என்னப்பா ஏதாச்சும் சொல்லு?” மெளனம்…

“பூனை உனக்கு பிடிக்குமா?” “ம்.ம்.ம்”

“ஏன் எதுவும் பேசமாட்டேங்குற.நல்லா தான பேசிட்டு இருந்த?”

சற்றே தலையை திருப்பி பார்த்தப் பின்னர்தான் அந்த சிறுவன் அழுது கொண்டிருப்பது தெரிந்தது.கண்களில் கண்ணீர்.

“தம்பி..”

“சார். என்னை யாரும் தம்பீன்னு கூப்பிட்டது இல்லை..”

“அதற்காகவா அழுகின்றாய்”

“இல்லை…”

“அப்போ?”

“அந்த கதையில..”

அச்சோ கதையில பயப்படும்படியாகவோ அழும்படியோ ஏதும் இல்லையே.இந்த பிஞ்சு மனது வாடும் அளவிற்கு என்ன தப்பு இருக்கு. இல்லை கதையை கிழித்துவிடலாம். என்ன தான் பாதித்து என்று தெரியவில்லையே?

“கோடைக்கால விடுமுறை போன வருடம் வரை இருந்தது சார். இனி நான் திரும்ப பள்ளிக்கு போவேனான்னு தெரியாது. அப்புறம் எங்க விடுமுறை எல்லாம்?”

அவன் மனம் படும் வேதனை இவன் மனதை கிழித்தது. அவனிடம் இந்தக் கதையை சொல்லியிருக்கவேண்டாமோ என்று மனம் நினைத்தது. ச்ச்..சே தவறு செய்துவிட்டேனோ என்று வருந்தியது. இப்படி எத்தனை சிறார்கள் இளம்வயதில் வீட்டைவிட்டு வந்து பல இடங்களில் வேலை செய்கிறார்கள் என்று நினைக்கும்பொழுது இயலாமையால் நெஞ்சம் அழுதது. என்னால் தற்போதைக்கு என்ன வேறு என்னதான் செய்யமுடியும் என் மன நிறைவிற்கான பேனாவை அவனுக்கு மனநிறைவை தருவதை விட?

போய்விட்டான். அவனுக்கு இப்பவும் மனநிறைவா இருக்கா இல்லை குறைவா இருக்கான்னு தெரியவில்லை..

கதையின் முதல்வரியும் கடைசிவரியும் எடுத்துவிட்டான்.

Note: இந்த கதை திசைகள் என்ற இணைய பத்திரி்கையில் கடந்த ஜூன் 2006ஆண்டு வந்தது.தற்போது அந்த பத்திரிகை நின்றுவிட்டது.