சென்னைவாசிகளே உஷார்

2009 ஆகஸ்ட் 26
vizhiyan ஆல்

இது பெங்களூரில் மட்டும் தான் நடக்கின்றது என நினைத்த எனக்கு, பைக் திடுதிடுப்பென ஓர் நாள் நடுவழியில் நின்ற போது தான் தெரிந்தது.

சென்னையில் அனேக பெட்ரோல் பங்கிலும் இந்த கொள்ளை நடந்து கொண்டு தான் இருக்கின்றது. நீங்கள் பெட்ரோல் போட சென்றதும் 200 ரூபாய்க்கு போடுங்கள் என்றால், உடனே ஒருவர் கேஷா கார்டா சார் என கேட்பார். இப்படி திரும்பி, மீட்டரை பார்ப்பதற்கும் 100ரை தாண்டி இருக்கும். அதற்குள்ள இவ்வளவா என்பதற்கும் 200ரை தொட்டு காசுக்கு கை நீட்டிக்கொண்டிருப்பார் ஒருவர். காரில் இருந்து பெட்ரோல் போட சொன்னால் அவர்களுக்கு அல்வா தான். சென்னையில் நிறைய பெட்ரோல் பங்குகளில் இந்த குற்றம் நடக்கின்றது. உண்மையில் பெட்ரோல் போட ஆரம்பிப்பது 100ரில் இருந்து தான். ஆனால் வசூலிப்பது 200 ரூபாய். இப்படி ஒரு வடிக்கையாளரிடம் இருந்து 50ரூபாய் முதல் 200 – 300 வரை களவாடப்படுகின்றது. திட்டமிட்டு செயல்படுகின்றார்கள். பெங்களூரில் மடிவாளாவில் ஒவ்வொருமுறையும் பிரச்சனையுடன் தான் பெட்ரோல் போட்டு வந்தேன். சென்னை வந்ததும் சரியாகிடும் என்றால் இங்கேயும் அதே கொடுமை. இன்னும் சில பங்குகளில் நிர்வாகத்திn துணையுடன் கலப்படம் நடக்கின்றதாம். மெக்கேனிக்குகளிடம் கேளுங்க எங்கே போடலாம் எங்கே வேண்டாம் என்பார்கள்

என்ன தான் உஷாராக இருந்தாலும் அதை முறியடிக்க அதை விட சிறப்பான திட்டங்கள் இருக்க தான் செய்கிறது. எப்படியும் திசை திருப்பி விடுகின்றனர். நமக்கு முன்னால் இருப்பவரை எவ்வளவு தான் நாமும் உஷார் செய்வது. கண்முன்னே திருட்டு நடக்கின்றது என்ன செய்ய?

(நன்றி: ஹிந்து)

அடுத்த முறை பெட்ரோல் பங்க் செல்லும் போது கவனிக்க வேண்டியவை

- தவறாமல் 0.00யில் இருந்து ஆரம்பிக்கின்றதா என கவனிக்கவும்

- எவ்வளவு லிட்டர் வேண்டும் என தெளிவாக சொல்லவும்

- சில சமயம் 100ரூபாய் என்றால் 200ரூபாய்க்கு போடுவார்கள். நிஜமாக அது 100ரில் இருந்து தான் ஆரம்பித்து இருக்கும்.

- தவறு நடக்கின்றது என தெரிந்தால் உடனே தட்டிக்கேளுங்கள். பலர் தட்டிகேட்காததால் குற்றம் அதிகரித்துக்கொண்டே போகின்றது.

- மேல்நிர்வாகத்திடன் தெரிவியுங்கள்.

- நண்பர்களிடத்தில் அந்த பெட்ரோல் பங்க் பற்றி தெரிவியுங்கள்

சட்டப்படி ஏதாவது செய்யலாமா? எப்படி இவர்களை சட்டத்தின் கீழ் கொண்டுவருவது?

- விழியன்

வாய்மையே வெல்லும் – கவிதை

2009 ஆகஸ்ட் 19
vizhiyan ஆல்
வாய்மையே வெல்லும்
 
என்றுமே போராட்டம் தான்
வாய்மைக்கும் பொய்மைக்கும்
வெகு இயல்பாய் வெல்கிறது
வாய்மையை அடக்கியபடி பொய்மை
சப்பை காரணங்களை தனதாக்கியபடி
முதல்வரிசை இருக்கையில் அமர்கிறது
பளபளக்கும் முகம் காட்டி பல்லிளிக்கிறது
தொடர் போராட்டத்தில்
எங்காவது தவறி ஜெயம் கொள்கிறது வாய்மை

விழியன்

1 லட்சத்தை கடந்தது!!! நன்றி நன்றி…

2009 ஆகஸ்ட் 18
vizhiyan ஆல்

இன்று விழியன் பக்கம் ஒரு லட்சம் பார்வைகளை கடந்தது. தொடர்ந்து வாசித்தும் ஊக்குவித்தும் எழுத வைக்கும் அன்பர்களுக்கு மனமார்ந்த நன்றி.

- விழியன்

Vizhiyan Photography – UK British Museum 3

2009 ஆகஸ்ட் 18
vizhiyan ஆல்

1. பிரம்மாண்ட செதுக்கல்
muse001
2. டம் டமக்க டும் டுமக்க
museum11
3. கலைகளின் அணிவகுப்பு
museum11
4. இந்த கதைகள் போதுமா?
museum11
5. வீரர்களே முந்திச்செல்லுங்கள்
museum11
6. அநியாயமா என்னை சாச்சுப்புட்டூங்களே மக்கா..
museum11
7. அச்சச்சோ..
museum11
8. சூன்னியக்காரி
museum11
9. மூடிகளின் சங்கமம்.
museum11

- விழியன்

Vizhiyan Photography – UK British Museum 2

2009 ஆகஸ்ட் 15

லண்டன் அருங்காட்சியகத்தில் கிடைத்த சிலிர்ப்பு நான்கு மாதம் கடந்து இன்றும் நினைவில் நிற்கின்றது. அந்த பிரம்மாண்டம், அந்த அருக்காட்சியம் எடுத்து சென்ற உலகம், கண்ணீர் சிந்த வைத்த சிற்பங்கள், மெய்சிலிரிக்க வைத்த வரலாறுகள், உடைகள், உடைமைகள், பொருட்கள், கலைப்படைப்புகள், சாகசங்கள்..அப்பப்பா..!!! இதோ இன்னும் சில புகைப்படங்கள் உங்களிடம் பகிர்கிறேன்…

1.கூஜாக்களில் கவுஜைகள்
museum02
2.மஹாவீரர்
museum02
3. அழகு விசைப்பலகை
museum02
4. என்ன கண்கள். சில ஓவியங்கள் கலைத்தாயின் உச்சப்படைப்பு.
museum02
5. என்ன விலை அழகே!!
museum02
6. விற்கப்பட்ட பழங்கள் கூட நளினமாக.
museum02
7. கல் மனிதன்
museum02
8. அப்பொழுதே துவங்கிவிட்டது உழும் விவசாயின் அழுகுரல்.
museum02
9. டண்டனக்கா.. டணக்குனக்கான்…ஹி ஹி
museum02

-விழியன்

முத்தம் – புகைப்படம்

2009 ஆகஸ்ட் 13
vizhiyan ஆல்

mutham

கேலி(ளி)ர் – கவிதை

2009 ஆகஸ்ட் 4
vizhiyan ஆல்

உறவினரின் மணப்பேச்சுகள் எரிச்சலுற
அடுத்த வீதி கோவிலுக்கு நடக்கலானேன்
தரிசனம் முடித்து வெளிவர
யாசகம் கேட்டபடி அமர்ந்திருந்தனர் பெரியவர்கள்
உறவினர்கள் போன்றே தோன்றியது
உறவினர்கள் அல்ல.
- விழியன்

நெரடுதல் – கவிதை

2009 ஆகஸ்ட் 4
vizhiyan ஆல்

நெரடுதல்

காகித கப்பலின் கவிழ்பிற்கே
கலங்கி நிற்கும்  குட்டிக்கு
கண்முன்னே அரங்கேறும் அவலங்களை
கண்டும் காணாமல் அமைதியாய் நழுவும்
கல்மனம் எப்போது வளரும்


விழியன்

Solar Eclipse Photographs From Marina – Vizhiyan

2009 ஜூலை 22

அதிகாலை மெரினாவில் இருந்து எடுத்த சில புகைப்படங்கள்.

1. தனியே ரசிக்கிறார் அற்புதக காட்சியினை
Ecl01

2. நண்பர்களோடு.
Ecl01

3. சுனாமி வரும் எந்த அறிகுறியும் இல்லை
Ecl01

4. ஆஹா…
Ecl01

5. இது நிலவல்ல..சூரியன் தானுங்கோ
Ecl01

6.  சூரியனை விழுங்கும் சந்திரன்.
Ecl01

7. ரசனை
Ecl01

8. ம்ம்ம்..என்னத சொல்ல.
Ecl01

9. பகலில் இரவின் காட்சி
Ecl01

10. அப்பா எப்ப கிரகணம் வரும்?
Ecl01

11. படகிலிருந்து கிரகண தரிசனம்
Ecl01

12.  தலைகீழாய் நின்று வெறுப்பேற்றினார்.
Ecl01

13. அதிகாலை கடற்கரை காட்சி
Ecl01

- விழியன்

Vizhiyan Photography – CSR Event

2009 ஜூலை 21

நான் பணி புரியும் நிறுவனத்தில் CSR – Corporate Social Responsibility என்னும் குழு சார்பாகா செயிண்ட் தாமஸ் மவுண்டில் உள்ள வெப் மொம்மோரியில் என்னும் இல்லத்திற்கு சென்று அவர்களுக்கு விளையாட்டுகள் வைத்து, நாங்களும் உங்களுக்கு இருக்கின்றோம் என்று ஆழமாக அழகாக சொல்ல ஒரு நிகழ்ச்சி நடைபெற்றது. காலை முதல் மாலை வரை  நிகழ்ச்சிகள் நடைபெற்றது. பெரும்பாலான மாணவர்கள் ஆதரவற்றோர், சிலருக்கு தாய் தந்தை இருந்தாலும் படிக்கும் வசதி இல்லாததால் இங்கே தங்கி படிக்கின்றார்கள். விழுப்புரம், சென்னையின் சுற்றுப்புறம் மற்றும் இதர இடங்களில் இருந்து மாணவர்கள் இங்கு வந்து தங்குகின்றனர். ஹாஸ்டல், இரண்டு கட்டிடங்கள் தள்ளி பள்ளிக்கூடம்.

சில குழந்தைகள் பார்க்கும் பொழுதே அவர்களின் நிலை தெரிந்துவிடுகின்றது. மிகவும் ஏழ்மை. ஆடைகள் கூட சரியாக இருக்கவில்லை. உற்சாகமாக போட்டிகளில் கலந்து கொண்டனர். அலுவக நண்பர்கள் குழந்தைகளுடன் ஒன்றி விளையாடியது மகிழ்வாக இருந்தது. மதியம் அவர்களுக்கு உணவளித்து, மாலை வரை விளையாடி, சுற்றுப்புற உறுதிமொழி எடுத்து, பரிசுகள் வழங்கி நாள் நிறைவடைந்தது.

இது சின்ன அடிதான். கடக்க வேண்டியது நிறைய தூரம். இந்த செயல்கள் போதாது போதாது, போதவே போதாது.

இதோ உங்களுக்காக எடுத்த சில படங்கள்.

1. தனியே தன்னந்தனியே

2. வேண்டும் ஓர் வீடு

3. அண்ணாத்தை வணக்கம்

4.ஒளி கக்கும் கண்கள்

5. அழிப்பானை தாங்களேன், எங்க சோகங்களை அழித்திட

6. தலையெழுத்து மாறப்போவது கைரேகையில் தெரிகின்றதா?

7.நாங்கள் வெற்றி பெறுவோமா…? — நிச்சயம் கண்ணே..

8. நன்றி, வாழ்த்துக்கள், பாராட்டுக்கள். அலுவலக நண்பர்களுக்கு..

9. காகித ராசா. (காகிதம் வைத்து உடை தயாரிக்கும் போட்டியில் முதல் பரிசு பெற்றவன்)

10. போஸ் ப்ளீஸ்

11. போலிஸின் மிடுக்கும் கம்பீரமும்

12.அழகிய தமிழ்மகன்.

13. கொஞ்சும் கண்ணில் கொஞ்சம் கண்ணீர்

14. பாவாடை சட்டை கிழிஞ்சி போச்சுதே…பள்ளிக்கூட பசங்க எல்லாம் கேலி பேசுதே

15.அள்ள அள்ள உற்சாகம்

- விழியன்