Skip to content

பெண்கள் தின வாழ்த்துக்கள்

March 8, 2006

அன்பு தங்கைக்கு,

அண்ணனின் ஆசிர்வாதங்களும் அன்பும் என்றும் உன்னோடு இருக்கும்.நீ நம்பிக்கையோடு இருக்கும் வரை நிச்சயம் நலமாய் இருப்பாய் என்று தெரியும்.பணிச்சுமை அதிகம் என வருத்தப்பட்டுகொண்டாய். முடியாது

என்று கருதினால் கடுகு கூட பாரமாகலாம், முடியும் என நினைத்துவிட்டால் பாறை கூட பனித்துளிபோல கறைந்து போகலாம். முடியும் என்று நினை, அதேசமயம் ஆனந்தமாக வேலை செய். யாருக்கு தெரியும் உன் சின்ன புன்சிரிப்பு எத்தனை காயப்பட்ட இதயங்களுக்கு மருந்தாக இருக்குமோ? சிரித்த முகத்தோடு இரு.ஆனால் சிந்தித்துக்கொண்டும் இரு.

இன்று சர்வதேச பெண்கள் தினம் என்பதை அறிவாய் என்று எண்ணுகிறேன். பெண்கள் தின வாழ்த்துக்கள் தங்கையே. இன்று என்ன செய்வதாக உத்தேசித்துள்ளாய்? எனக்கு தெரியும் என் தங்கை கண்டிப்பாக ஏதாவது ஒன்றை வித்தியாசமாக இன்று செய்வாள் என்று. அதனை உன்னிடமே விட்டுவிடுகிறேன்.

பெண்கள் தின கொண்டாட்டம் பற்றிய வரலாற்றைவிட இந்த நாள்
எதற்கு என்ற கேள்வி உனக்கு எழுவது சகஜம் தான். என்ன மகளீர் இன்னும் முன்னேறவில்லையா? எத்தனை சாதனை படைத்துள்ளனர்? எத்தனை துறைகளில் முன்னேற்றம் பெற்றுள்ளனர்? தனியாக ஒரு நாள் தேவையா? என்கிற கேள்வி நியாயம் தான, உண்மை தான். கடந்த நூற்றாண்டின் கடைசி பாதியில் அபார மாற்றங்கள், வளர்ச்சிகள், எழுச்சிகள். ஆனால் பெணகள் பல நூற்றாண்டுகளாக
ஒடுக்க பட்டுத்தான் இருக்கிறார்கள், இந்த சமூகம் ஒவ்வொரு நிலையிலும்,காலகட்டத்திலும் ஆணைவிட பெண் தாழ்த்தபட்டவள் என்று வேறு வேறு வடிவில் கற்று தந்துவிட்டது. எங்கு தப்பு ஏற்பட்டது என்று ஆராய்வதைவிட இதனை மாற்ற வழிமுறைகள் என்ன என்று ஆலோசிப்பதே சிறந்தது.

பற்பல நூற்றாண்டுக்கு முன்னர் பெண்னை தெய்வமாகவும், ஆறுகளுக்கு கூட பெண் பெயரையே வைத்தும் போற்றி வந்தனர்.தற்போது அவர்களை தெய்வமாக எண்ண வேண்டாம், சமமாக மதித்தால் அதுவே போதும். முதலில் பெண்கள் தாங்கள் ஆண்களுக்கு சளைத்தவர்கள் அல்ல என்பதை அறியவேண்டும். இருவரும் இந்த பூமியில் ஆனந்தமாக வலம் வர சமமான உரிமைகள் உண்டு. இது ஆணித்தரமாக ஒவ்வொரு நெஞ்சத்திலும் பதியவேண்டும். அது ஒரு நாளில் நடந்துவிடாது, அடிக்கடி
சொல்லப்பட வேண்டும் வேறு வேறு வடிவங்களில். அப்படி சொல்ல வந்த
நாளாகத்தான் இந்த சர்வதேச பெண்கள் தினத்தை நான் பார்க்கிறேன்.

உன் தினசரி வாழ்வில் நீ ஒரு பெண் என்பதால் நீ ஒடுக்குபடுவதாக நினைத்தால் உடனே குரல் கொடு, எதிர்த்துப் போராடு. உன்னை சுற்றி நடக்கும் அவலங்களுக்கு உன் செயல்களால் சாட்டையடி கொடு.

சரி உனக்கு நான் சொல்வது புரிந்திருக்கும் என்று நினைக்கிறேன். பாரதி கண்ட புதுமைப் பெண்ணாக வாழ வாழ்த்துகிறேன்.


உனக்கும், உன் நண்பர்கள் அனைவருக்கும் என் பெண்கள் தின வாழ்த்துக்கள்

-விழியன்

Advertisements
4 Comments leave one →
 1. March 8, 2006 12:54 pm

  Arumaiyana pathivu..

  Valthukkal..

  Niraiya Ethir Parkiroem..

  Nanban,
  NilaRaseegan.

 2. March 9, 2006 12:13 pm

  அன்பு நண்பர் உமாவின் புதிய பதிவு மகளீர் தினத்தில் அருமையான கட்டுரையுடன் தொடங்கியுள்ளது.
  வாழ்த்துக்கள்.

  உனது எழுத்துக்கள் கிறுக்கல்களல்ல, அவை சமூக அவலங்களைக் கண்டு துடிக்கும் கரங்களிலிருந்து வரும் ஆயுதம்.

 3. பரஞ்சோதி permalink
  March 11, 2006 9:49 am

  வாழ்த்துகள் விழியன்,

  மகளிர் தின பதிவு மிகவும் அருமை.

  சகோதரிக்கு நானும் இதையே கூறுகிறேன்.

 4. Deepa permalink
  March 13, 2006 3:11 am

  Anbulla Nanbar Vizhiyan,
  Ungaladhu kavidhaigalaiyum kaaturaiyaiyum padithen.. padithen enbadhai vida padithu purindhu konden endru dhaan solla vendum.
  Ezhuthu thoranam azhagaai irrukiradhu, eppodhum pola..
  Neengal men melum niraiya ezhudhi, ezhuthulagil valarndhu valam vara vendum endru vaazhthugiren.
  Anbudan,
  Deepa

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: