Skip to content

First Kirukal

March 21, 2006

இது என்னுடைய முதல் கிறுக்கல்..சுமார் ஒரு வருடம் முன்னர் எழுதியது..
———————————————————————————————————–

நெஞ்சில் பாரம்

———————-
மத்திய வேளை.

அலுவலக நண்பன் ஏதோ காரணத்துக்கு விருந்தளிதான்..

சைனீஷ் உணவகம்,

தாம் தூம் என ஆடர்கள்

வெட்டி பேச்சும் கும்மாளமும்.

பசி எடுக்க ஒரு ரசம் (Soup )

பசித்த பின் துவக்க உணவு (Starter)

அதன் பின் முக்கிய உணவு

கடைசியில் குளிர் பானம்..

பாதி உணவு வீணாய்.

ஏழு பேருக்கு 1475 ரூபாய்

காலாற நடந்தோம் நடாக்கமுடியாமல்..

மீண்டும் அலுவலகம் ..

வரவேற்பறையில் கல்லூரி நாண்பன் ஒருவன் காத்திக்க.

மாத கணக்காகியும் வேலை இல்லாமல் அவன்

என்னை கண்டவுடன் முகதில் மலர்ச்சி..

“நேர்முக தேர்வுக்கு வந்தேன், மீண்டும் தோல்வி”

வாடியது முகம்.

“சாப்பிட்டாயா?”

“பசி இல்லை”..

காலையும் உண்ணாத களைப்பு அவன் முகத்தில்..

“நீ சாப்பிட்டாயா?”

கண்களில் கண்ணீர் மறைத்தேன்..

வார்த்தைகள் வாயில் வர போராடின..

உருக்கத்தை மறைக்க வேலை இருப்பதாய் உளரினேன்..

விரைவாய் கிளம்பினேன்..

அவன் மெதுவாய் “அறைக்கு செல்ல காசில்லை, 10 ரூபாய் சில்லரை இருக்கா?”.

பல 10 ரூபாய் நோட்டிருந்தும் “சில்லரை இல்லை , இந்த 100 ரூபாய்”

அவன் மறுக்க மறுக்க சட்டை பையில் நொந்தினேன்..

யாரை நோவது?

கனத்த மனதுடன்..அவன் போகும் பாதையை நோக்கி..

மனதில் ஆயிரம் ஆயிரம் கேள்விகளுடன்…

—- விழியன்

4 Comments leave one →
  1. Ramesh permalink
    April 7, 2006 1:19 pm

    Hi Umanath,

    This is a good one. Can be an eye-opener if U give a deep thought on this.

    —-
    Ramesh

  2. பரமேஸ்வரி permalink
    June 16, 2006 2:20 pm

    ஏற்கனவே இதை பற்றி கூறிவிட்டேன் என்று நினைக்கிறேன்…. இருந்தாலும் இன்று இந்த பதிவை தேடிக் கண்டுப் பிடித்து எழுத வேண்டும் என்று தோன்றியது..ஏன் என்று தெரியவில்லை… தீடீர் எண்ணம்..
    என்னை பாதித்த சில சொற்கள்….
    //“சாப்பிட்டாயா?”

    “பசி இல்லை”..
    //
    //“நீ சாப்பிட்டாயா?”

    கண்களில் கண்ணீர் மறைத்தேன்..
    //
    //பல 10 ரூபாய் நோட்டிருந்தும் “சில்லரை இல்லை , இந்த 100 ரூபாய்”//

  3. Muthuraman permalink
    June 29, 2007 6:35 am

    Thsi is very nice …..

  4. July 10, 2007 5:35 pm

    hi…

    its really nice…

    good. keep it up…

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: