Skip to content

மண்ணின் மைந்தனுக்கு ஒருபிடி மண்ணின் கடிதம்

March 23, 2006

மண்ணின் மைந்தனுக்கு ஒருபிடி மண்ணின் கடிதம்

வீர மைந்தனே!,

இன்று உன்னை இழந்து எழுபத்தைந்து ஆண்டுகள் சென்றுவிட்டன. இன்றும் கூட நீயும் உனது கூட்டாளிகள் ராஜகுரு, சுக்தேவ் தூக்கிலடப்பட்ட காட்சியை என்னால் மறக்காமல் இருக்கமுடியவில்லை. என்ன வீரமடா உனக்கு, “என்னை தூக்கிலிடாதீர்கள், பீரங்கியின் வாயில் என் உடலை வைத்து வெடிக்க ச் செய்யுங்கள்” என்ற உன் கடைசி ஆசையும் நிராகரித்து விட்டனர் அந்த வெள்ளையர்கள்.அந்த முழக்கம் இன்றும் கேட்டுக்கொண்டு தான் இருக்கிறது. மார்ச் 23, 1931 இந்த தேதியை இந்திய சுதந்திரப் போராட்ட வரலாறு மறக்க கூடாது. கத்தியின்றி ரத்தமின்றி இந்திய சுதந்திரம் கிடைத்துவிட்டது என்று வரலாறு தவறாகவே போதிக்கப்படுகின்றது. ஏதோ காந்தி கடை வீதியில் மிட்டாய் வாங்கி வந்தது போல் அல்லவா நமக்கு கற்பிக்க படுகின்றது. ம்ம்ம்ம்.. …எவ்வளது இரத்தம் சிந்தப்பட்டது, எத்தனை உயிர்கள் பறிக்கப்பட்டது.

“வர்க்க பேதமற்ற சமத்துவ சமூக அமைப்பை உருவாக்க வேண்டும். அதற்கு முதலில் சுதந்திரம் வேண்டும்” என்று முழக்கமிட்ட இளைஞர் பட்டாளத்தின் முது கெலும்பு நீதான் என்று எனக்குத் தெரியும். “சுதந்திரம் ஒரு ஆயுதம் மட்டுமே, அதுவே இலட்சியம் அன்று” என்று உறுதியாய் நினைத்தாய். பலே! நீ இறந்த போது உனக்கு வயது 24. நம்ப முடியவில்லை. என் வீரனே! உன் வீரமும் செயல்திறனும், இலட்சியமும், நாட்டுபற்றும் உன் வரலாறு படித்த இளைஞர்களை நிச்சயம் மாற்றிவிடும். ஆனால்! என்று அவர்கள் படிக்கப் போகிறார்கள் என்பது தெரியவில்லையே. அன்று வெள்ளையன் என்ற பேய் நாட்டை உலுக்கியது, இன்று வேறு வேறு பெயரிலே அது நாட்டை சின்னாபின்னமாக்குகின்றது. உன் வீரத்தை எம் இளசுகளுக்கு கொஞ்சம் தந்தால் என்ன? ஓ. அவர்கள் உள்ளுக்குள்ளே இருக்கிறதா?

இந்திய சுதந்திரத்தின் கறுப்பு தினம் 13-04-1919. நினைவிருக்கிறது அன்று தான் என்னை நீ கண்டெடுத்தாய். ஜாலின்வாலாபாக் படுகொலை நாட்டையும் இந்த உலகையும் உலுக்கியதே, பன்னிரெண்டு வயதில் ரயிலில் ஓடோடி வந்து ஜெனரல் டயரின் கொடுமையைக் கண்டு கொதித்துப் போனாய். அரக்கர்கள் அழிந்துவிட்டனர் என்ற புராணம் பொய்த்து அந்தக் கொடூரம் நிகழ்ந்தது. நொடிப்பொழுதில் ஆயிரம் ஆயிரம் உயிர்கள் பலி. இரத்த வெள்ளம். கிணற்றில் தண்ணீர் இருப்பதற்கு பதில் குருதியால் நிரம்பியது. எத்தனை உயிர்கள் பிரிந்தனவோ.

பிரிந்த உயிர்களைக் கண்டு நீ உஷ்ணப்பட்டாய். என்னருகே இருந்த என் சினேகித மண்களை நெற்றியில் பூசிக்கொண்டாய். அப்போதே பெருமிதம் அடைந்தேன். குருதி படிந்த என்னை ஒரு கண்ணாடிப் புட்டியில் எடுத்து வீடு சென்றாய். அன்று உன் வீட்டில் உனக்கு மிக பிடித்த உணவு தயார்செய்து இருந்தனர். அந்த வயதிலும் உண்ணாவிரதம் இருந்தாய். உன் சகோதரியிடம் என்னைக் காட்டி ஆவேசப்பட்டாய். தினம் தினம் என் மீது பூக்கள் தூவி நீ எழுச்சியுற்றாய். அன்று முதல் நீ என்னை பிரியவேயில்லை. உன்னோடு என்றும் நான் இருந்தேன்.என் மேல் ஏற்பட்ட இரத்தக் கறை இன்றும் அழியவில்லை மாவீரனே!. அதை விட நீ சூடும் கதகதப்பு இன்றும் இருக்கிறது.

வாழும் போது மனிதர்கள் மண்ணுக்கு ஆசைப்படுகிறார்கள், நீயோ ஒரு பிடி மண்ணுக்கு ஆசைப்பட்டாய்.மனிதர்கள் இறந்தால் மரணம். மாவீரன் நீ இறந்ததால் அது வரலாறு.

இந்த மண்ணின் மைந்தனுக்கு என் வீரவணக்கம்

இரத்தக் கறைகளோடும், உன் சூட்டோடும்
ஒரு பிடி மண்.

~~~~~~~~~~~~~~~~~~~
-விழியன்

20 Comments leave one →
  1. Shanv permalink
    March 23, 2007 7:16 am

    very good article about bhagat singh…

  2. Balaganesh permalink
    March 23, 2007 7:17 am

    Really Great!!!

  3. March 23, 2007 8:04 am

    நல்லதொரு பதிவு தலை…

    வீரவணக்கம் பகத்சிங்கிற்கு!! நிச்சயம் வரலாறுகளைப் பாடப்புத்தகத்தில் படிக்கும்போதே மெய் சிலிர்த்தது எனக்கு!!

    தூக்குக்கயிற்றை முத்தமிட்ட வீரனாயிற்றே!!

  4. March 23, 2007 9:04 am

    நாட்டுப்பற்றை தூண்டும் நல்ல பதிவு நண்பா

  5. Aravind permalink
    March 23, 2007 11:30 am

    Good Work Boss 🙂

  6. Muthu Nilavan permalink
    March 23, 2007 5:32 pm

    At Bog ID: 2006? Is it not 2007?
    Naa.Muthu Nilavan

  7. Muthu Nilavan permalink
    March 23, 2007 5:34 pm

    A treamendous article, wonderful imagination with full of History!
    Keep it up Vizi!
    Naa.Muthu Nilavan

  8. surya permalink
    March 24, 2007 5:44 am

    நல்ல பதிவு நண்பா,

    அந்த மாவீரனுக்கு வீர வண்க்கங்கள்

    பகத்சிங் பற்றி அறிய
    சுபவீ எழுதிய “பகத்சிங்கும் இந்திய
    அரசியலும்” படிக்கலாம்.

    சூர்யா
    துபாய்

  9. Kamalesh permalink
    March 24, 2007 5:33 pm

    Nice one but the comment on Gandhi was not good.Anyways its an open debate..each one will have his/her own opinion. Nice work and keep up the work.

  10. Shobana permalink
    March 26, 2007 11:18 am

    Hi anna,

    Excellent job!!!

  11. பிரசாத் permalink
    March 23, 2011 5:24 am

    அருமையான பதிவு அண்ணா…

  12. sundaramg permalink
    March 25, 2011 4:21 am

    Mannil puthithai piranthathupol oru unarvu…

    the article stick on my heart…atleast to live 1 hr like Bhagat Singh..

    Jai Hind..

    Valgha Bharatham..

    Anbudan,
    G.Sundaram

  13. Dhilip permalink
    March 23, 2012 6:36 am

    Hello sir,

    Such great article… Its very inspiring…

    Expecting more from you.

    Thanks
    Dhilip

  14. Pandiaraj permalink
    March 23, 2012 8:05 am

    Great. Thanks to remind about our national hero.

  15. Gopinathan permalink
    March 23, 2012 2:17 pm

    Nice Article, Anna….we always salute him (immortal soul)…..

  16. Sashidharan V permalink
    March 23, 2012 11:31 pm

    Good one Vizhiyan

  17. imtiaz permalink
    March 29, 2012 8:47 am

    Innum konjam bhagat sing pathi kood eludhi irukalamo — yendru ena thonugiradhu

Leave a reply to vizhiyan Cancel reply