Skip to content

மரணம் ஏற்படுத்திய ரோதனம்

April 17, 2006

மூன்று நாள் சென்னை பயணம் பல்வேறு புதிய எண்ணங்களையும்,மனிதர்களையும், மகான்களையும், நண்பர்களையும், எதிர்கால பாதையையும் எனக்கு அடையாளம் காட்டியது.பல புதுமுகங்கள்…..

மறக்கமுடியவில்லை ஒரே ஒரு முகம் மட்டும்..

இணையத்தில் அறிமுகமாகி ஓராண்டு கழித்து முதல்முதலாக ஆனந்த் வைத்தியா(இவரும் முத்தமிழின் அன்பர்) என்னும் நண்பனை சந்தித்தேன். 3 மணி நேரம் உரையாடினோம். இரவு 10 மணிக்கு பேருந்து நிலையத்தில் இருசக்கர வாகனத்தில் கொண்டுவிட்டார். அவரின் கடந்தகால அனுபவங்களை,ரணங்களை,வேதனைகளை, சந்தோஷங்களை பகிர்ந்தபடி பேசிக்கொண்டு இருந்தோம்.

நான் செல்லவேண்டிய பேருந்து வந்தது. மூட்டை முடிச்சுகளை பேருந்தின் கீழே உள்ள இடத்தில் ஒவ்வொருவராக வைத்தோம். 

                  மூன்று சின்ன நாய்குட்டிகள் இங்கும் அங்கும் ஓடிக்கொண்டிருந்தன..ஒரு நாயின் வயிறு ஊப்பி இருந்தது. எங்கோ நல்ல சாப்பாடு கிடைத்து இருக்கவேண்டும்.நல்ல வெள்ளை. எப்படி தெருநாய்கள் இப்படி வெண்மையாக இருக்கின்றது என்ற ஆச்சர்யம் வேறு..

மாலை நடந்த கூட்டத்தில் இரவா சொன்னற்போல விலங்குகள் தான் குழந்தைகளுக்கு பிடிக்கும், இதை முக்கிய பாத்திரமா வைத்து எழுதினால் மழலைகளுக்கு பிடிக்கும் என்று சொன்னார்.ஏன் ஒரு நாய்குட்டியில் இருந்து ஆரம்பிக்க கூடாதுன்னு அதன் நடவடிக்கையா பேசிக்கொண்டே கவனித்துவந்தேன். அட அதற்கென ஒரு தனி உலகம். சில கால்களை நக்கியபடி,மனிதர்களோடு சினேகம் செய்ய எத்தனை ஆசை. 

அப்போது தான் அது நடந்தது. 

விளையாடிக்கொண்டிருந்த நாய்குட்டிகளில் ஒன்று குறுக்கே வந்த 

வால்வோ பேருந்தின் சக்கரத்தில் மாட்டி தலை நசுங்கியது. அம்மா என்ன ஒரு அகோரம். தலை நசுங்கியதை நேரடியாக பார்த்தேன். இப்போது நினைக்கும் போதும் படபடக்கின்றது. பாவம் அந்த பிஞ்சு. பார்க்கமுடியவில்லை,பார்க்காமல் இருக்கவும் முடியவில்லை. அச்சோ, ஒரு நிமிடம் முன்னர் ஆனந்தமாக ஓடியாடியதே…அதெனோடு விளையாடிய மற்ற இரண்டு நாய்க்குட்டிகள் தன் தோழன் எங்கே என்கிற சோகம். இறப்பு என்பது இது தான் என்று அவற்றுக்கு தெரியுமா?

மனது பிசைந்தது. சொல்லமுடியாத, விவரிக்க முடியாத வலி.வேதனை. சற்று நேரத்திற்க்கெல்லாம் தாய் நாய் அந்த சக்கர தடங்களின் வழியே மோப்பமிட்டபடி வந்து. தன் முன்னர் ஒரு அடி தூரத்தில் அதன் பிஞ்சு பஞ்சாகி போனது தெரியவில்லை. உடல் நடுவே மோப்பமிட்டது, அதன் பிள்ளைதானா என்கின்ற சந்தேகம். மீண்டும் 20 அடிக்கு அப்பால் ஓடி, அங்கிருந்த வழித்தடத்தில் இருந்து , இரத்தத்தை மோப்பமிட்டபடி வந்தது. இம்முறை ஊர்ஜிதப்படுத்தியது. அந்த முகத்தில் என்ன ஒரு இனைவு.கோபம், இயலாமை, ஆற்றாமை. பேருந்து சென்று 5 நிமிடமாகி இருக்கும், ஆனாலும் அந்த திசையில் ஓடமிட்டபடியே, குரைத்தபடியே ஓடியது, திரும்ப வந்தது….

அந்த கலவரத்தில் பார்த்த கண்களுக்கும் இந்த கண்ணீர் கண்களுக்கு எத்தனன வித்தியாசம்.ம்.ம்.ம்..

வண்டி ஓட்டும்போது நிதானித்து ஓட்டுங்கள், அன்பனின் சின்ன வேண்டுகோள்.

 

சின்ன கவனம்

சிதறா கவனம்

சிதறலை தவிர்க்கும்

-விழியன் 

(எழுத்து பிழைகள் இருப்பின் மன்னிக்க.. சற்று மங்களாகவே தெரிந்தது கணிப்பொறி..கண்ணீர் மறைத்தபடியால்…) 

இது மரணம் ஏற்படுத்திய சலனம் இல்லை..

மரணம் ஏற்படுத்திய ரோதனம்.

https://vizhiyan.wordpress.com

Advertisements
No comments yet

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: