Skip to content

Silicon Adimaigal – 3

April 22, 2006

சிலிக்கான் அடிமைகள்

தப்புக்கொல்லாம் தண்டனையா?

 

பரபரப்பு வாழ்வின் அவசரம் அறிந்து
முளைத்த சுயசேவை உணவகம்..
காலை வேளைதனில் மனதை குதறிய காட்சி..
சோக்காய் உடை அணிந்து உண்ணுகிறான் கணிப்பொறி வல்லுவன்..
அழுக்காய் மேஜை துடைத்துக் கொண்டு சிண்டு ஒன்று..
திரும்புகையில் லேசாய் கூடை உரச
கரை படிந்தது வல்லுனர் சட்டையில்…
யார் மீது ஆத்திரமோ சிறுவன் தலையில்
ஓங்கி வேகமாய் நச்சென குட்டு
முதலாளியிடம் ஆர்பரிப்பு 
உடனே சிறுவன் வேலை பறிப்பு

தப்புக்கெல்லாம் குட்ட வேண்டுமா?
அப்படியாயின் நீ அடித்த codeல் எழுந்த தப்புக்கெல்லாம்
குட்ட ஆரம்பித்தால்…
குட்ட குட்ட நீ மண்ணில் என்றோ புதைந்திருப்பாய்..

தவறு செய்வது மனித இயல்பு..
ச்ச!! மனிதனா அவன் ..சின்ன அரும்பு..

உன் சட்டையின் ஓரத்தில் தான் கரை
அவனுக்கோ கரையின் நடுவே தான் சட்டை

சிந்திவிட்டான் அவன் ஏதும் அறியாமல்
சிந்திக்கமறுத்து விட்டாய் நீ எல்லாம் அறிந்தும்..

நியாயமாய் சமூக கடமையென துடைக்கனும்
                                            அவன் கண்ணீரை
மாறாய் நீயோ ஊற்றி விட்டாய்
                                   அவன் வாழ்வில் வெந்நீரை…

-விழியன்

2 Comments leave one →
  1. Lakshmi permalink
    April 22, 2006 11:56 am

    Really Very nice! Today only I came to know about this website. simply superb!!!
    Wish you all the very best!

    Regards,
    Lakshmi

  2. paransothi permalink
    April 24, 2006 8:10 am

    மன்னிக்கத் தெரிந்தவன் தான் மனிதன்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: