Skip to content

Silicon Adimaigal – 10

May 5, 2006

கற்றதும் பெற்றதும்

அம்மா கையால் அழகாய் கற்றது இருநூற்றி நாற்பத்தேழு
"தமிழ் எழுத்துக்கள்"
சாந்தி டீச்சர் அடித்து அடித்து தந்தது இருபத்தி று..
"ஆங்கில எழுத்துக்கள்"..
வரைபடத்தில் வண்ணம் தீட்டி கற்றது இருபத்து இரண்டு., (அப்போது)
"இந்திய மாநிலங்கள்"
உருண்டை உருண்டையாய் சுற்றுதென அதிசையத்தது ஒன்பது
"சூரியக் குடும்ப கிரகங்கள்"
யார் கோடு போடாமல் பிரித்ததென வியந்தது ஏழு
"பூமியின் கண்டங்கள்"
 
வளர வளர கற்றல் எண்ணிக்கை குறையுமோ??

கல்லூரி முடித்து…
மூன்றாண்டுகளாய் முக்கி முக்கி கற்றதும்
நோகாமல் நோன்பெடுக்க பெற்றதும்

 மூன்று
"கட்" .. "காப்பி"…"பேஸ்ட்". .

இங்கே..

கற்றதும் பெற்றதும்

Cutறதும்  Pasteறதும்

-விழியன்

No comments yet

Leave a comment