Skip to content

Election Experience

May 10, 2006

உண்மை நிலை என்ன?

இரண்டு வாரங்கள் முன்னர் வேலூர் அருகே இருக்கும் குடியேற்றம் தொகுதியில் VSRC (Vellore Social Research Centre) சார்பாக தேர்தல் கருத்துகணிப்பு ஒன்றினை ஒருங்கிணைக்கும் வாய்ப்பு கிடைத்தது. சுமார் ஆயிரம் மக்களை சந்தித்து கருத்து கணிப்பு எடுக்கப்பட்டது. சாதாரண கருத்துக்கணிப்புக்கள் எப்படி நடைபெறும் என்றால், வாக்காளர் பெயர், ஊர், தொகுதி, எந்த கட்சிக்கு வாக்கு, மதம், ஆணா/ பெண்ணா என்கின்ற கேள்விகள் மட்டுமே இருக்கும்.

நாங்கள் எடுத்த கருத்து கணிப்பில் இன்னும் சில விடயங்களையும் ஆராய்ந்தோம். குறிப்பாக அவர்கள் ஊரின் பிரச்சனை, சென்ற அரசின் மூலம் கிடைத்த நன்மைகள், சலுகைகள் தேவைதானா,பிற்படுத்தபாட்ட மக்களுக்கு இன்னும் சலுகைகள் அளிக்கபட வேண்டுமா என்று மக்களின் மனோநிலையையும் அறியும் நிலையில் கணக்கொடுப்பு எடுக்கப்பட்டது.

புள்ளிவிவரங்கள் தந்த விவரங்கள் மிகக் கம்மி. அதையும் தாண்டி நிறையவே பாடம் படித்தேன் என்பது நிதர்சன உண்மை.

* ஒரு பெரியவரிடம் "சென்ற முறை வாக்களித்தீர்களா ஐய்யா" என்று வினவினேன், அதற்கு சற்றே ஆவேசமாக "எங்களை பார்த்தால் எப்படி இருக்குபா?" என்றார். இப்போது இருக்கு இளசுகளிடம் இதே கேள்வியை கேட்டால்? "வேற வேலை இல்லையா அண்ணாத்தை?" என்பான்.

* இது வரை எத்தனையோ அரசுகள் வந்தும் (குடியாத்தம் முதல் நகராட்சி என்று கேள்விபட்டேன்) இவர்களின் அடிப்படை பூர்த்தி செய்யப்படவில்லை.இவர்கள் கேட்பது சுத்தமான குடிநீர், சுகாதாரமான வாழும் இடம், கழிவிநீர் சீராக செல்ல ஏற்பாடு, சாலை வசதிகள் தான். இதைக்கூட செய்யாமல் என்ன அரசு என்ற கோபம் தான் முன் நிற்கின்றது.

*இவர்களை இந்த கலர் டீவி, தங்க தாலி போன்ற வசீகரங்கள் எந்த மாற்றமும் ஏற்படுத்தவில்லை

* ஒருவர் "எங்க ஊரில் தேர்தெடுக்கபடும் நபர் 3 மாதத்திற்கு ஒருமுறை முகத்தை மட்டும் காட்டிவிட்டு போகட்டும் அது போதும்" என்றார். வேதனை

* நாங்கள் பெயர்,விலாசம் எடுத்ததை பார்த்து ஒரு வயதான பாட்டி "திமுகாவிற்கு ஓட்டு போடறேன்னு சொன்னாத்தான் கலர் டீவி தருவீங்களா?" என்றார் – எப்படி முட்டாளக்கி வைத்திருக்கிறார்கள்.

* இரண்டு கழக கட்சிகள் மீதும் ஒரு வெறுப்பு நிலவுகின்றது. ஒரு மாற்று கட்சி, தலைவர் வேண்டும் என்பது அனைவரின் கனவாக உள்ளது. ஆனால் வேறு வழியின்றி இவர்கள் இருவரில் ஒருவரை தேர்ந்தெடுப்பதாக தெரிவித்தனர்.

* நடிகர் விஜய்காந்திற்கு இளைஞர்கள் முக்கியமாக கிராமப்புற இளசுகள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கின்றது.ஒரு வேளை இவர் தான் நாட்டின் தீவிரவாதிகளிடம் இருந்து சண்டை போட்டு நாட்டை காப்பாற்றுவார் என்கின்ற எண்ணமா தெரியவில்லை.இந்த தொகுதியில் அவர் மைத்துணன் நிற்கிறார் என்பது கூடுதல் செய்தி.

* ஒரு கிராமத்தில் ஒரு தாத்தா "அவனுங்க எவ்வளவு வேணுமோ எடுத்துக்கட்டும், எங்களுக்கு ஏதாச்சும் செய்யட்டும்பா" என்றார்.

* மக்களின் நிலையை காது கொடுத்து கேட்க யாரும் இல்லை என்பது மனதை அலைகிழிக்கின்றது. ஒரு பத்தி நிமிடம் மக்களிடம் பேசினால் அவர்கள் நிலையை அழுதுகொண்டே சொல்ல ஆரம்பிக்கின்றனர். எங்களை சில இடங்களில் கிளம்ப விடவேயில்லை. "ஏன்பா நீ யாச்சும் கேளுப்பா" என்றனர். என்செய்ய மாக்களே? என்செய்ய?\n

* இன்னும் பல்வேறு அனுபவங்கள்.யார் வேண்டுமானாலும் ஆட்சிக்கு வரட்டும். டீவி தரட்டும், கணினி தரட்டும்,தாலி தரட்டும். அதற்கெல்லாம் முன்னர் அவர்களுக்கு நல்ல வாழ்கை தரட்டும். சுத்தமாக வாழும் இடம், தண்ணீர், அடிப்படை வசதிகள் பூர்த்தி செய்யப்படட்டும்.\n

நாளை தீர்மானிக்கும் யார் இவற்றை செய்யபோகிறார்கள் என்று.மக்களின் கண்ணீர் துடைக்கப்படட்டும். அரசியல் விளையாட்டுக்கள் போதும்.

நன்றி

விழியன்

Advertisements
No comments yet

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: